பொன்னேரி அருகே ஸ்ரீனிவாச பெருமாள் திருக்கல்யாண வைபோகம்

பொன்னேரி அருகே ஸ்ரீனிவாச பெருமாள் திருக்கல்யாண வைபோகம்
X

பொன்னேரி அருகே ஸ்ரீனிவாச பெருமாள் திருக்கல்யாண வைபோகம் வெகு விமரிசையாக நடைபெற்றது.

ஸ்ரீனிவாச பெருமாள் திருக்கல்யாண வைபோகத்தில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.

பொன்னேரி அருகே ஸ்ரீனிவாச பெருமாள் திருக்கல்யாண வைபோகம் வெகு விமரிசையாக நடைபெற்றது. ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரி அடுத்த திருவேங்கடபுரத்தில் வெகு விமரிசையாக நடைபெற்ற ஸ்ரீனிவாச பெருமாள் திருக்கல்யாண வைபோகத்தில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

தசரத நகர் பூங்காவில் திருவேங்கடமுடையான் திருக்கல்யாண குழு சார்பில் ஸ்ரீனிவாச பெருமாள் திருக்கல்யாண வைபோகம் நடைபெற்றது. முன்னதாக திருக்கல்யாணத்திற்காக மணமகன் ஸ்ரீனிவாச பெருமாளை சீர்வரிசைகளுடன் பொன்னியம்மன் கோவிலிலிருந்து ஊர்வலமாக மணப்பந்தலுக்கு அழைத்து வந்தனர்.

இதை தொடர்ந்து உய்யாளி சேவையும், மாலை மாற்றும் சடங்கும், பூப்பந்து எறிதல் சடங்கும் நடந்தேறியது. பாரம்பரிய சம்பிரதாயங்கள் நடத்தப்பட்டதை அடுத்து மலர்களால் அலங்கரிக்கப்பட்ட மணமேடையில் யாகம் வளர்க்கப்பட்டு மணமக்களுக்கு காப்பு கட்டி, பட்டாடை அணிவிக்கப்பட்டது. தொடர்ந்து கெட்டிமேளம் முழங்க வானவேடிக்கையுடன் ஸ்ரீதேவி பூதேவியர்க்கு மங்கலநாண் சூட்டப்பட்டது. அப்போது பக்தர்கள் கோவிந்தா, கோவிந்தா என பக்தி பரவசத்தில் முழக்கமிட்டு எம்பெருமானை வணங்கினர்.

திருக்கல்யாண வைபோகத்தை தொடர்ந்து ஸ்ரீதேவி பூதேவி சமேத ஸ்ரீனிவாச பெருமாளுக்கு பட்டாச்சாரியார்கள் பல்வேறு வாசனை திரவியங்களால் சிறப்பு அபிஷேகம் செய்து வண்ண மலர்களாலும், பட்டு உடைகளாலும், ஆபரணங்களால், அலங்காரம் செய்து தீப, தூப ஆராதனைகள் காண்பித்தனர்.

நிகழ்ச்சியின் நிறைவாக பக்தர்களுக்கு மங்கலநாண் மற்றும் மஞ்சள் குங்கும பிரசாதம் வழங்கப்பட்டது. பொன்னேரி, திருவேங்கடபுரம், வேண்பாக்கம், தடப்பெரும்பாக்கம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளை சேர்ந்த ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் ஸ்ரீனிவாச பெருமாள் திருக்கல்யாண வைபோகத்தை கண்டு களித்தனர்.

Tags

Next Story