/* */

தஞ்சாவூர் அஞ்சல் துறை ஊழியர்கள் யோகா விழிப்புணர்வு ஒத்திகை

சர்வதேச யோகா தினத்தை ஒட்டி தஞ்சை அஞ்சல் துறை ஊழியர்கள் யோகா விழிப்புணர்வு ஒத்திகை நிகழ்ச்சியில் ஈடுபட்டனர்.

HIGHLIGHTS

தஞ்சாவூர் அஞ்சல் துறை ஊழியர்கள் யோகா விழிப்புணர்வு ஒத்திகை
X

தஞ்சாவூர் பெரிய கோவிலின் பின்புறம் உள்ள இடத்தில் யோகா தின ஒத்திகை நடைபெற்றது

சர்வதேச யோகா தினம் ஜுன் 21 ம் தேதி கொண்டாடப்படுகிறது. இந்த ஆண்டு இந்திய அஞ்சல் துறை சார்பில் 100 இடங்களில் அஞ்சல் ஊழியர்கள் யோகா செய்ய உள்ளனர். இதையொட்டி தமிழகத்தில் சென்னை, மகாபலிபுரம், கன்னியாகுமரி, மதுரை, கோவை, தஞ்சாவூர் ஆகிய 6 இடங்களில் இன்று யோகாசன விழிப்புணர்வு ஒத்திகை நிகழ்ச்சி நடைபெற்றது.

தமிழரின் கட்டிட கலைக்கு சான்றாக விளங்கும் தஞ்சாவூர் பெரிய கோவிலின் பின்புறம் உள்ள இடத்தில் யோகா தின ஒத்திகை நடைபெற்றது.

இதில் திருச்சி மத்திய மண்டல அஞ்சல் துறை இயக்குனர் ரவீந்திரன், தஞ்சை கோட்ட முதுநிலை அஞ்சல் கோட்ட கண்காணிப்பாளர் கிருஷ்ணமூர்த்தி, மற்றும் தஞ்சை கோட்டத்தை சேர்ந்த அஞ்சலக ஊழியர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

அவர்களுக்கு சிறப்பு பயிற்சி பெற்ற யோகா குழுவினர் யோகா கற்றுக் கொடுத்தனர். யோகாசனம் செய்வதால் உடல் வலிமை பெறும், நோய்கள் அண்டாது, மன புத்துணர்ச்சி அடையும் இன்னும் பல்வேறு நன்மைகள் உள்ளன. முறைப்படி தினமும் யோகா செய்வதை பழக்கப்படுத்திக் கொள்ள வேண்டும் ‌ என்று விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.

Updated On: 25 April 2022 6:00 AM GMT

Related News

Latest News

  1. வீடியோ
    நடு தெருவுக்கு வந்த Pakistan | | China-வை நம்பினால் இது தான் கதி |...
  2. லைஃப்ஸ்டைல்
    மீன்விழி காதலிக்கு பிறந்தநாள் வாழ்த்து..!
  3. காஞ்சிபுரம்
    மின்சாரம் தாக்கி கட்டிட தொழிலாளி பலி..!
  4. ஈரோடு
    முகூர்த்தம், வார இறுதி நாளையொட்டி ஈரோட்டில் இருந்து சிறப்பு...
  5. குமாரபாளையம்
    குமாரபாளையம் அருகே மின்சாரம் தாக்கி கணவன்- மனைவி உயிரிழப்பு
  6. சோழவந்தான்
    பொதுமக்களுக்கு இடையூறாக உள்ள தடுப்புகளை அப்புறப்படுத்த கோரிக்கை..!
  7. நாமக்கல்
    திருச்செங்கோடு பிரபல தனியார் கல்வி நிறுவனத்தில் வருமான வரித்துறை...
  8. மதுரை
    சந்தானம் நடிக்கும் படத்தின் படப்பிடிப்பு: புதிய நாயகி அறிமுகம்..!
  9. திருமங்கலம்
    கீழே கிடந்த தங்க நகைகளை மீட்டு உரியவரிடம் ஒப்படைத்த முன்னாள்...
  10. நாமக்கல்
    தெலுங்கானா போல் தமிழகத்திலும் காங்கிரஸ் ஆட்சி: செல்வ பெருந்தகை பேச்சு