/* */

ப.வேலூர் அருகே வெட்டுக்குதிரையில் மாரியம்மன் வீதி உலா: பக்தர்கள் தரிசனம்

namakkal news, namakkal news today- பரமத்தி வேலூர் அருகே, புது மாரியம்மன் கோயில் திருவிழாவின் முக்கிய நிகழ்வான மாரியம்மன் வெட்டுக் குதிரையில் திருவீதி உலா வரும் நிகழ்ச்சியில் ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

HIGHLIGHTS

ப.வேலூர் அருகே வெட்டுக்குதிரையில்  மாரியம்மன் வீதி உலா: பக்தர்கள் தரிசனம்
X

namakkal news, namakkal news today- புது மாரியம்மன் கோயில் திருவிழாவில், மாரியம்மன் வெட்டுக் குதிரையில் திருவீதி உலா நடைபெற்றது.

namakkal news, namakkal news today- நாமக்கல் மாவட்டம் பரமத்தி வேலூர் அருகே உள்ள பொத்தனூர் புதுப்பாளையம், ஸ்ரீ மகாமாரியம்மன் கோயில் தேர்த் திருவிழா கடந்த 7-ஆம் தேதி இரவு கிராம சாந்தி, கம்பம் நடுதல் மற்றும் காப்பு கட்டுதல் விழாவுடன் தொடங்கியது. 8-ஆம் தேதி முதல் 11- ஆம் தேதி வரை தினந்தோறும் இரவு அம்மனுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகளும், சிறப்பு அலங்காரமும் நடைபெற்றது. 12-ஆம் தேதி பூச்சொரிதல் விழாவும், மறு காப்பு கட்டுதலும் நடைபெற்றது.

தினந்தோறும் இரவு சிம்மம், ரிஷபம், அன்னபட்சி உள்ளிட்ட வாகனங்களில் முக்கிய விதிகள் வழியாக திருவீதி உலாவரும் நிகழ்ச்சி நடைபெற்றது. நேற்று சுவாமி வெட்டுக்குதிரையில் உலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார். திரளான பக்தர்கள் விழாவில் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

21-ஆம் தேதி மாலை வடிசோறு, மாவிளக்கு மற்றும் அம்மன் திருவீதி உலா வரும் நிகழ்ச்சி நடைபெற்றது. 22- ஆம் தேதி அதிகாலை 4.30 மணி முதல் 6 மணிக்குள் அம்மன் ரதம் ஏறுதலும், மாலை 3.30 மணிக்கு மகா மாரியம்மன் திருத்தேரில் திருவீதி உலா வரும் நிகழ்ச்சி நடைபெறுகிறது. 23-ஆம் தேதி மாலை குண்டம் இறங்கும் விழாவும், பெண்கள் பூவாரி போட்டுக் கொள்ளும் நிகழ்ச்சியும் நடைபெறுகிறது. 24-ஆம் தேதி பொங்கல் வைத்து மாவிளக்கு படைக்கும் நிகழ்ச்சியும், அக்னி சட்டி எடுத்தல் மற்றும் அலகு குத்துதல் நிகழ்ச்சியும் நடைபெறுகிறது. 25-ஆம் தேதி கம்பம் ஆற்றுக்கு செல்லுதலும், கிடா வெட்டும் நிகழ்ச்சியும் நடைபெறுகிறது. 26-ஆம் தேதி மஞ்சள் நீராடலும், இரவு அம்மன் முத்துப்பல்லக்கில் திருவீதி உலா வரும் நிகழ்ச்சியும், 27-ஆம் தேதி ஊஞ்சல் உற்சவமும், 28-ஆம் தேதி காலை 6 மணிக்கு யாக பூஜை, அன்னப்பாவாடை மற்றும் மகாதீபாராதனையும் நடைபெறுகிறது.

Updated On: 21 May 2023 12:15 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    ஞாவரா அரிசி தெரியுமாங்க..? தெரிஞ்சுக்கங்க..!
  2. குமாரபாளையம்
    குமாரபாளையம் கோவில்களில் சிறப்பு வழிபாடுகள்!
  3. தொழில்நுட்பம்
    திரிஷ்னா: பிரான்சுடன் இஸ்ரோவின் கூட்டுப் பணி பற்றி அனைத்து தகவல்களும்
  4. அரசியல்
    அயோத்தியில் பாஜக தோல்வி. அரசியல் அதிர்ச்சி! எங்கே தவறு நேர்ந்தது? ஒரு...
  5. இந்தியா
    சண்டிகர் விமான நிலையத்தில் கங்கனா ரணாவத்தை அறைந்த பெண் பாதுகாப்பு...
  6. குமாரபாளையம்
    மின் நிறுத்தத்தால் துவண்ட பொதுமக்கள் மழையால் கொண்ட மகிழ்ச்சி!
  7. தமிழ்நாடு
    போன முறை 39, இந்த முறை 40 - ஆனாலும் வடை போச்சே.... ஏமாற்றத்தில்...
  8. குமாரபாளையம்
    மேய்ச்சல் நிலமாக மாறிய காவிரி ஆறு
  9. குமாரபாளையம்
    பாலத்தின் பக்கவாட்டு சுவற்றில் மரங்கள்! அப்புறப்படுத்த கோரிக்கை!
  10. சினிமா
    ஹரா படம் எப்படி இருக்கு?