மின் நிறுத்தத்தால் துவண்ட பொதுமக்கள் மழையால் கொண்ட மகிழ்ச்சி!

மின் நிறுத்தத்தால் துவண்ட பொதுமக்கள்   மழையால் கொண்ட மகிழ்ச்சி!
X

படவிளக்கம் :

குமாரபாளையத்தில் நேற்று மாலை கனமழை பெய்தது.

குமாரபாளையத்தில் மின் நிறுத்தத்தால் துவண்ட பொதுமக்கள் மழையால் மகிழ்ச்சி கொண்டனர்.

மின் நிறுத்தத்தால் துவண்ட பொதுமக்கள் மழையால் கொண்ட மகிழ்ச்சி

குமாரபாளையத்தில் மின் நிறுத்தத்தால் துவண்ட பொதுமக்கள் மழையால் மகிழ்ச்சி கொண்டனர்.

குமாரபாளையத்தில் மாதாந்திர மின் பராமரிப்பு பணிசெய்திட மாதம் தோறும் அமாவாசை நாளில், மின் நிறுத்தம் செய்யப்பட்டு, பராமரிப்பு பணிகள் செய்வது வழக்கம். அரசு பொதுத்தேர்வுகள், பாராளுமன்ற தேர்தல் ஆகிய காரணங்களால் இரண்டு மாதங்கள் பரமரயுபி செய்திட மின் நிறுத்தம் செய்யப்படவில்லை. நேற்று அமாவாசையாதலால், இரண்டு மாதங்களுக்கு பின். பராமரிப்பு காரணங்களுக்காக மின் நிறுத்தம் செய்யப்பட்டது. இதனால் காலை 09:00 மணியளவில் குமாரபாளையம் நகரம் உள்ளிட்ட பல இடங்களில் மின் நிறுத்தம் செய்யப்பட்டது. நேற்று பகலில் கடும் வெப்பம் வாட்டி வதைத்தது. மின்விசிறி கூட போட முடியாத நிலையில் பொதுமக்கள் பெரும் அவதிக்கு ஆளாகினர். மாலை 05:00 மணியளவில், கார்மேகம் சூழ்ந்து, இரவு நேரம் போல் ஆகியது. குளிர்காற்று வீசத் தொடங்கிய சில நிமிடங்களில் கனமழை பெய்தது. இந்த மழை சுமார் 2 மணி நேரத்திற்கும் மேலாக நீடித்தது. பகலில் கடும் வெப்பத்தை தாங்க முடியாமல் இருந்த பொதுமக்கள், மாலையில் வந்த கனமழையால் குளிர்ச்சி நிலவி, மகிழ்ச்சியடைந்தனர். மாலை 05:00 வரை மின்நிறுத்தம் என்று அறிவித்த மின்வாரியத்தினர், மாலை 06:30 மணியளவில் மின் இணைப்பு கொடுத்தனர்.

Tags

Next Story
future of ai in retail