திருப்பூர் தொகுதி இந்திய கம்யூனிஸ்ட் வேட்பாளர் 1,06,003 வாக்குகள் முன்னிலை

திருப்பூர் தொகுதி இந்திய கம்யூனிஸ்ட்  வேட்பாளர் 1,06,003 வாக்குகள் முன்னிலை
X

Tirupur News- இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர் சுப்பராயன்.

Tirupur News- திருப்பூர் நாடாளுமன்றத் தொகுதியில் திமுக கூட்டணி சார்பில் போட்டியிட்ட இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர் சுப்பராயன் 1,06,003 வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலையில் உள்ளார்.

Tirupur News,Tirupur News Today- திருப்பூர் நாடாளுமன்றத் தொகுதியில் திமுக கூட்டணி சார்பில் போட்டியிட்ட இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர் சுப்பராயன் 1,06,003 வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலையில் உள்ளார்.

திருப்பூர் நாடாளுமன்றத் தொகுதி தேர்தலில் திமுக கூட்டணியில் இந்திய கம்யூனிஸ்ட் சார்பில் சுப்பராயன், அதிமுக சார்பில் அருணாச்சலம், பாஜக சார்பில் முருகானந்தம், நாம் தமிழர் கட்சி சார்பில் சீதாலட்சுமி உள்பட 13 வேட்பாளர்கள் போட்டியிட்டனர். 11 லட்சத்து 35 ஆயிரத்து 267 வாக்குகள் பதிவாகின.இது 70.58 சதவீதம் ஆகும்.

திருப்பூர் தொகுதிக்கான ஓட்டு எண்ணிக்கை எல்.ஆர்.ஜி., மகளிர் கல்லூரியில் இன்று காலை 8 மணிக்கு தொடங்கியது. தற்போது , 18-வது சுற்றுக்கான வாக்கு எண்ணிக்கையில் திமுக கூட்டணியை சேர்ந்த இந்திய கம்யூனிஸ்ட் வேட்பாளர் சுப்பராயன் 1,06,003 வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலையில் உள்ளார்.

திருப்பூர் நாடாளுமன்றத் தொகுதி 18வது சுற்று முடிவில் வாக்குகள் விவரம் பின்வருமாறு:-

திமுக கூட்டணி இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (சுப்பராயன்) - 4,09,330,

அதிமுக (அருணாசலம்) - 3,03,327

பாஜக (முருகானந்தம்) - 1,57,596

நாம் தமிழ் கட்சி (சீதாலட்சுமி) - 81,839

திமுக கூட்டணியின் இந்திய கம்யூனிஸ்ட் வேட்பாளர் சுப்பராயன் 1,06,003 வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலையில் உள்ளார்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!