முள்ளிவாய்க்கால் நினைவு தினம்: ஈரோட்டில் மெழுகுவர்த்தி ஏந்தி அஞ்சலி..!

முள்ளிவாய்க்கால் நினைவு தினம்: ஈரோட்டில் மெழுகுவர்த்தி ஏந்தி அஞ்சலி..!
X

ஈரோடு மாவட்ட வணிகர் சங்கங்களின் பேரமைப்பு சார்பில் முள்ளிவாய்க்கால் நினைவு தினம் அனுசரிக்கப்பட்டது.

‌ஈரோட்டில் முள்ளிவாய்க்கால் நினைவு தினத்தையொட்டி, வணிகர் சங்கங்களின் பேரமைப்பு சார்பில் மெழுகுவர்த்தி ஏந்தி அஞ்சலி செலுத்தப்பட்டது.

ஈரோட்டில் முள்ளிவாய்க்கால் நினைவு தினத்தையொட்டி, வணிகர் சங்கங்களின் பேரமைப்பு சார்பில் மெழுகுவர்த்தி ஏந்தி அஞ்சலி செலுத்தப்பட்டது.

இலங்கையில் தமிழீழ தனிநாடு வேண்டி போராடி வந்த விடுதலைப்புலிகள் இயக்கத்துக்கும், சிங்கள ராணுவத்துக்கும் இடையே கடந்த 2009ம் ஆண்டு இறுதி கட்ட போர் நடைபெற்றது. அப்போது, முல்லைத்தீவு மாவட்டம் முள்ளிவாய்க்கால் பகுதியில் வெள்ளைக்கொடி ஏந்தி சென்ற விடுதலைப்புலிகளையும், பாதுகாப்பு வளையத்துக்குள் வந்த தமிழீழ மக்கள் என மொத்தம் 1.30 லட்சம் பேரை சிங்களப்படை கொன்று குவித்தது. இந்த, முள்ளிவாய்க்கால் இனப்படுகொலையின் 15ம் ஆண்டு நினைவு தினம் நேற்று (மே 18ம் தேதி) அனுசரிக்கப்பட்டது.

அதன்படி, முள்ளிவாய்க்கால் நினைவு தினம் தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு சார்பில் ஈரோட்டில் உள்ள பேரமைப்பு அலுவலகத்தில் அனுசரிக்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியில், பேரமைப்பின் மாவட்ட தலைவர் இரா.க.சண்முகவேல், மாவட்ட செயலாளர் பொ.ராமசந்திரன் மற்றும் நிர்வாகிகள் கலந்துகொண்டு மெழுகுவர்த்தி ஏந்தி, மரணம் அடைந்த தமிழர்களுக்கு அஞ்சலி செலுத்தினர். இதில், மாவட்ட இளைஞர் அணி செயலாளர் அ.லாரன்ஸ் ரமேஷ், மூலப்பட்டறை அனைத்து வணிகர்கள் சங்க கவுரவ தலைவர் சி.தங்கராஜ், ஓன்கார் தொழில் சங்க தலைவர் ஆ.சீனிவாசன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags

Next Story
அமேசான்ல 5000 ரூபாய்க்கு ஸ்மார்ட் டிவி வாங்க முடியுமா? இப்பொவேய் போடுங்க ஆர்டர