/* */

நாமக்கல் பகுதியில் தக்காளி விலை கிடு கிடு உயர்வு: கிலோ ரூ.45க்கு விற்பனை

நாமக்கல் பகுதியில் தக்காளி விலை மீண்டும் கிடு கிடுவென உயர்ந்து கிலோ ரூ.45க்கு விற்பனையானது.

HIGHLIGHTS

நாமக்கல் பகுதியில் தக்காளி விலை கிடு கிடு உயர்வு: கிலோ ரூ.45க்கு விற்பனை
X

நாமக்கல் பகுதியில் கடந்த 3 மாதமாக தக்காளி விலை மிகவும் குறைந்து விற்பனையானது. ஒரு கிலோ தக்காளி ரூ.5 வரை விலை சரிவடைந்ததால் விவசாயிகள் கடுமையாக பாதிக்கப்பட்டனர். பலர் தோட்டங்களில் செடியில் இருந்து தக்காளியை அறுவடை செய்யாமல் விட்டுவிட்டனர். இந்த நிலையில் கடந்த 3 நாட்களாக தக்காளி விலை தொடர்ந்து உயர்ந்து வருகிறது. 20ம் தேதி ஒரு கிலோ ரூ.15 ஆக இருந்த தக்காளி, 21ம் தேதி ரூ.25 ஆக விற்பனை செய்யப்பட்டது. 22ம் தேதி ரூ.35 ஆக உயர்ந்தது. இன்று 23ம் தேதி மீண்டும் ரூ.10 உயர்ந்து, ஒரு கிலோ தக்காளி ரூ.45 ஆக விற்பனை செய்யப்படுகிறது. தக்காளி தொடர் விலை உயர்வால் பொதுமக்கள் கவலை அடைந்துள்ளனர்.

நாமக்கல் உழவர் சந்தையில் இன்று 23ம் தேதி சனிக்கிழமை காய்கறிமற்றும் பழங்கள் விலை நிலவரம்:

கத்தரிக்காய் ஒரு கிலோ ரூ.20 முதல் 28, தக்காளி ரூ.26 முதல் 32, வெண்டைக்காய் ரூ.32 முதல் 36, அவரை ரூ.40 முதல் 48 , கொத்தவரை ரூ.30, முருங்கைக்காய் ரூ.26 முதல் 30, முள்ளங்கி ரூ. 16 முதல் 20, புடல் ரூ.28 முதல் 32, பாகல் ரூ. 28 முதல் 32, பீர்க்கன் ரூ.40 முதல் 50, வாழைக்காய் ரூ.28, வழைப்பூ (1) ரூ.7 முதல் 10, வாழைத்தண்டு (1) ரூ.5 முதல் 10, பரங்கிக்காய் ரூ.20, பூசணி ரூ.20, சுரைக்காய் (1) ரூ.8 முதல் 10, மாங்காய் ரூ. 30 , தேங்காய் ரூ.28 முதல் 30, எலுமிச்சை ரூ. 180, கோவக்காய் ரூ.40, கெடாரங்காய் ரூ.30, சி.வெங்காயம் ரூ.16 முதல் 18, பெ.வெங்காயம் ரூ.20 முதல் 22, கீரை ரூ.30, பீன்ஸ் ரூ.55 முதல் 60, கேரட் ரூ.40 முதல் 44, பீட்ரூட் ரூ.20 முதல் 24, உருளைக்கிழங்கு ரூ.30, சவ்சவ் ரூ.24, முட்டைகோஸ் ரூ. 20, காளிபிளவர் ரூ.15 முதல் 20, குடைமிளகாய் ரூ.50, கொய்யா ரூ.30, மலைவாழைப்பழம் ரூ.50, பச்சை பழம் ரூ.25, கற்பூரவள்ளி ரூ.30, ரஸ்தாளி ரூ.30, செவ்வாழை ரூ.50, பூவன் ரூ.20, இளநீர் ரூ.15 முதல் 20, பலாப்பழம் ரூ.30, கரிவேப்பிலை ரூ.40, மல்லிதழை ரூ.30, புதினா ரூ.40, இஞ்சி ரூ.45, பூண்டு ரூ.50, ப.மிளகாய் ரூ.36 முதல் 40, வாழை இலை ரூ.30, மரவள்ளிக்கிழங்கு ரூ.20, மக்காச்சோளம் ரூ.30 முதல் 36, வெள்ளரிக்காய் ரூ.20 முதல் 50, சேனைக்கிழங்கு ரூ.25, கருணைக்கிழங்கு ரூ.30, பப்பாளி ரூ.20, நூல்கோல் ரூ. 20 முதல் 24, நிலக்கடலை ரூ.45, சர்க்கரைவள்ளிக்கிழங்கு ரூ.40, மாம்பழம் ரூ.80. கொலுமிச்சை ரூ.30, சப்போட்டா ரூ.36, தர்பூசணி ரூ.15, விலாம்பழம் ரூ.40.

Updated On: 23 April 2022 2:00 AM GMT

Related News

Latest News

  1. ஆன்மீகம்
    விநாயகனே... வினை தீர்ப்பவனே! - விநாயகர் சதுர்த்தி வாழ்த்துகள்!
  2. கோவை மாநகர்
    வேளாண் பல்கலைக் கழகத்தில் உலக தாவர நல தின நாள் கொண்டாட்டம்!
  3. தொண்டாமுத்தூர்
    ரூ. 2 லட்சம் மதிப்புள்ள உயர் ரக போதை பொருள் பறிமுதல்: 3 பெண்கள் உள்பட...
  4. இந்தியா
    சிஏஏ திட்டதின் கீழ் முதல் முறையாக 14 பேருக்கு குடியுரிமைச் சான்றிதழ்
  5. அரசியல்
    ஐஎன்டிஐஏ ஆட்சிக்கு வந்தால் வெளியில் இருந்து ஆதரவு: மம்தா அறிவிப்பு
  6. லைஃப்ஸ்டைல்
    அப்பா அம்மாவுக்கு கல்யாண நாள் வாழ்த்து- இப்படிக்கு பிள்ளைகள்..!
  7. லைஃப்ஸ்டைல்
    அம்மாவுக்கு பிறந்தநாள் வாழ்த்துகள்!
  8. இந்தியா
    CAA: புதிய விடியல், இந்தியக் குடியுரிமை பெற்ற 14 பேர்!
  9. லைஃப்ஸ்டைல்
    மல்லிகையே மல்லிகையே தூதாகப் போ - என் காதல் தேவதைக்கு வாழ்த்துகளை...
  10. குமாரபாளையம்
    ஜே.கே.கே. நடராஜா கல்லூரியில் நான் முதல்வன், கல்லூரி கனவு திட்ட முகாம்...