/* */

நாமக்கல் மாவட்டத்தில் 10 ஆசிரியர்களுக்கு நாளை நல்லாசிரியர் விருது

நாமக்கல் மாவட்டத்தில் நாளை, செப்.5ம் தேதி 10 ஆசிரியர்களுக்கு நல்லாசிரியர் விருது வழங்கப்படுகிறது.

HIGHLIGHTS

நாமக்கல் மாவட்டத்தில் 10 ஆசிரியர்களுக்கு நாளை நல்லாசிரியர் விருது
X

மாணவர்களின் அறிவுக் கண்ணைத் திறக்கும் ஆசிரியராகத் தன்னுடைய வாழ்வைத் தொடங்கி, இந்திய நாட்டின் குடியரசுத் தலைவராக உயர்ந்து, ஆசிரியர் சமுதாயத்திற்குப் பெரும் சிறப்பினைச் சேர்த்த டாக்டர் ராதாகிருஷ்ணனின் பிறந்த தினமான செப்டம்பர் 5ம் தேதி ஒவ்வொரு ஆண்டும் ஆசிரியர் தினமாகக் கொண்டாடப்படுகிறது. இந்நாளில் சிறந்த கல்வித் தொண்டாற்றும் நல்லாசிரியர்களுக்கு டாக்டர் ராதாகிருஷ்ணன் விருது வழங்கி தமிழ்நாடு அரசு கவுரவித்து வருகிறது. அந்த வகையில், இந்த ஆண்டு நாமக்கல் மாவட்டத்தில் சிறந்த முறையில் பணியாற்றிய ஆசிரியர்களை ஊக்குவிக்கும் வகையில் தமிழ்நாடு அரசின் பள்ளிக் கல்வித்துறையின் கீழ் செயல்படும் பல்வேறு பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்களில் 10 ஆசிரியர்கள் நல்லாசிரியர் விருதுக்குத் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

இதில் நாமக்கல் மாவட்ட ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவன விரிவுரையாளர் செல்லதுரை, நாமக்கல் அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி ஆசிரியர் குமரேசன், அணியாபுரம் அரசு மேல்நிலைப்பள்ளி ஆசிரியர் மாதேஸ்வரன், திருச்செங்கோடு அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி ஆசிரியர் திருவருள்செல்வன், ரெட்டிப்பட்டி பாரதி மேல்நிலைப்பள்ளி ஆசிரியர் நாராயணமூர்த்தி, புதுச்சத்திரம் ஊராட்சி ஒன்றியம் காரைக்குறிச்சி துவக்கப்பள்ளி ஆசிரியர் லதா, கொல்லிமலை ஒன்றியம் சோலுடையப்பட்டி ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளி தலைமை ஆசிரியர் சதாசிவம், மோகனூர் ஒன்றியம் ஒருவந்தூர் புதூர் துவக்கப்பள்ள தலைமை ஆசிரியர் சத்தியமூர்த்தி, மோகனூர் ஒன்றியம் மேலப்பட்டி துவக்கப்பள்ளி தலைமை ஆசிரரியர் அண்ணாதுரை, திருச்செங்கோடு காளிப்பட்டி மகேந்திரா மெட்ரிக் பள்ளி முதல்வர் ஆனந்த் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

இதையடுத்து நாளை (5ம் தேதி) கலெக்டர் ஸ்ரேயாசிங் தலைமையில் நல்லாசிரியர் விருது வழங்கும் விழா நடைபெறுகிறது. நாமக்கல் கலெக்டர் அலுவலகத்தில் நடைபெறும் நல்லாசிரியர் விருது வழங்கும் விழாவில் சுற்றுலாத்துறை அமைச்சர் மதிவேந்தன் பங்கேற்று விருதுகளை வழங்குகிறார்.

Updated On: 4 Sep 2021 10:30 AM GMT

Related News

Latest News

  1. தமிழ்நாடு
    தமிழகத்தில் தேனி, விருதுநகர், தென்காசி மாவட்டங்களுக்கு கனமழை...
  2. இந்தியா
    தொலை தொடர்புத் துறை பெயரில் போலி அழைப்புகள்: மத்திய அரசு எச்சரிக்கை
  3. லைஃப்ஸ்டைல்
    அன்னைக்கு இன்னைக்கு பிறந்தநாள்..! வாழ்த்துகிறோம்..!
  4. லைஃப்ஸ்டைல்
    வார்த்தைகளால் பூ தொடுத்து அக்காவுக்கு பிறந்தநாள் வாழ்த்து..!
  5. இந்தியா
    உலக சாதனை புத்தகத்தில் இடம் பிடித்த நான்கு மாத குழந்தை!
  6. திருச்சிராப்பள்ளி மாநகர்
    திருச்சி கோர்ட்டில் ஆஜர்: சவுக்கு சங்கர் லால்குடி கிளை சிறையில்...
  7. லைஃப்ஸ்டைல்
    வீட்டில் இருந்தபடியே பெண்கள் சம்பாதிப்பது எப்படி?
  8. ஆன்மீகம்
    நடப்பாண்டில் வைகாசி விசாகம் எப்போது வருகிறது தெரியுமா?
  9. லைஃப்ஸ்டைல்
    ருசியான எண்ணெய் கத்திரிக்காய் கிரேவி செய்வது எப்படி?
  10. கல்வி
    எமிஸ் தளத்தில் பொது மாறுதல் கேட்டு விண்ணப்பித்த 13,484 ஆசிரியர்கள்