/* */

மின் இணைப்புகளில் பெயர் மாற்றம் செய்ய, ஒரு மாதம் சிறப்பு முகாம்கள்..!

நாமக்கல் மாவட்டத்தில், மின் இணைப்புகளில் பெயர் மாற்றம் செய்ய ஒரு மாதம் சிறப்பு முகாம்கள் நடக்கவுள்ளன.

HIGHLIGHTS

மின் இணைப்புகளில் பெயர் மாற்றம் செய்ய, ஒரு மாதம் சிறப்பு முகாம்கள்..!
X

தமிழ்நாடு மின்சார வாரியம் (கோப்பு படம்)

நாமக்கல் :

நாமக்கல் மாவட்டத்தில் மின் இணைப்புகளில் பெயர் மாற்றம் செய்ய ஒரு மாதம் சிறப்பு முகாம் நடைபெறுகிறது.

இது குறித்து நாமக்கல் மின்சார வாரிய மேற்பார்வை பொறியாளர் சிவகுமார் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:

நாமக்கல் மின் பகிர்மான வட்டத்திற்குட்பட்ட, பிரிவு அலுவலகங்களில் வீடு மற்றும் பொது மின் இணைப்புகளில் பெயர் மாற்றம் செய்வதற்கான சிறப்பு முகாம் கடந்த ஜூலை 24-ந் தேதி முதல் தொடங்கப்பட்டு நடைபெற்று வருகிறது. இச்சிறப்பு முகாம் ஒரு மாதம் அனைத்து பிரிவு அலுவலகங்களிலும் நடைபெறும். தற்போது தமிழ்நாட்டில் உள்ள வீட்டு மின் இணைப்புகளில் பெயர் மாற்றம் பெறுவதற்கு தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்தின் இணையதளத்தில் விண்ணப்பித்து, அங்கீகரிக்கப்பட்ட ஆவணங்களை பதிவேற்றம் செய்து, நிர்ணயிக்கப்பட்ட கட்டணங்களைச் செலுத்தி பெயர் மாற்றம் செய்துகொள்ளும் வசதி ஏற்கனவே நடைமுறையில் உள்ளது. ஆனால் மின் இணைப்புகளில் பெயர் மாற்றம் செய்யும் போது பொதுமக்களுக்கு ஏற்படும் சிரமங்களை நீக்கி கட்டணம் செலுத்திய அன்று உடனடியாக பெயர் மாற்றம் வழங்க இந்த சிறப்பு முகாம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இந்த முகாம்கள் விடுமுறை நாட்கள் தவிர்த்து அனைத்து அலுவலக வேலை நாட்களிலும் காலை 9.00 மணி முதல் மாலை 5.00 மணி வரை செயல்படும். வீட்டு மின் இணைப்பு மற்றும் பொது மின் இணைப்பிற்கான பெயர் மாற்றம் தேவைப்படும் பொதுமக்கள் இந்த வாய்ப்பினை பயன்படுத்தி கொண்டு சிறப்பு முகாம்களில் தங்களது வீட்டு மின் இணைப்புகள் மற்றும் பொது மின் இணைப்புகளில் பெயர் மாற்றம் செய்தகொள்ளலாம்.அங்கீகரிக்கப்பட்ட ஆவணங்களை சமர்ப்பித்து நிர்ணயிக்கப்பட்டுள்ள கட்டணமான ரூ.726/- செலுத்தி, இந்த முகாமின் மூலம் வீட்டு மின் இணைப்பு மற்றும் பொது மின் இணைப்புகளில் பெயர் மாற்றம் செய்து கொள்ளலாம். விண்ணப்பதாரர் தேவையான ஆவணங்களுடன் பிரிவு அலுவலகத்திற்கு நேரில் வந்தோ அல்லது ஆன்லைன் மூலமாகவோ பெயர் மாற்றத்திற்கு விண்ணப்பிக்க வேண்டும்.

பெயர் மாற்றம் செய்யும் விண்ணப்பதாரர்கள் சமர்ப்பிக்கவேண்டிய ஆவணங்கள்:

ஆதார் அட்டை, நகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் சமீபத்திய சொத்து வரி ரசீது நகல் அல்லது விற்பனை பத்திரத்தின் நகல் அல்லது ஏதேனும் செல்லும்படியாகும் ஆவணம் (பரிசு பத்திரம்/செட்டில்மென்ட் பத்திரம் போன்றவை) அல்லது கோர்ட் . நகராட்சி மாநகராட்சி அல்லாத இதர பகுதிகளுக்கு விற்பனை பத்திரத்தின் நகல் அல்லது ஏதேனும் செல்லும்படியாகும் ஆவணம். (பரிசு பத்திரம்/ செட்டில்மென்ட் பத்திரம், இறப்பின் காரணமான சான்றுகள் போன்றவை) அல்லது கோர்ட் உத்தரவு, செட்டில்மென்ட் பத்திரம் அல்லது பகிர்வு பத்திரம் சமர்பிக்கப்படாவிட்டால் சட்ட பூர்வ வாரிசு சான்றிதழின் படி அனைத்து பெயர்களிலும் பெயர் மாற்றம் செய்யப்படும்.

குழு வீடுகளில், பொது சேவைக்கான மின் இணைப்புகளில் (டேரிப்: ஐ.டி) பெயர் மாற்றம் செய்ய சமர்ப்பிக்கப்படவேண்டிய ஆவணங்கள்:

பில்டர்கள் டெவலப்பர்கள் பெயரில் இருக்கும் பல குடியிருப்புகள், குடியிருப்பு வளாகங்கள், குரூப் ஹவுஸிங்கில் உள்ள பொது சேவைகளுக்கான மின் இணைப்புகளுக்கு பெயர் மாற்றம் செய்ய விரும்புவோர், நல வாழ்வு சங்கத்தின் பெயரில் பதிவு சான்றிதழ் அல்லது வளாகம், அபார்ட்மென்ட பெயருக்கு மாற்ற விண்ணப்பத்தில் கையொப்பமிட, குடியிருப்போர்களிடமிருந்து அதிகார பூர்வ கடிதம் போன்ற ஆவணங்களை சமர்ப்பிக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Updated On: 27 July 2023 6:15 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    புரதச் சத்துக்களைத் தவிர்க்க மக்களை வலியுறுத்தும் ஐசிஎம்ஆர் மருத்துவக்...
  2. சோழவந்தான்
    சோழவந்தான் அருகே முள்ளிப்பள்ளத்தில் இலவச இருதய மருத்துவ முகாம்..!
  3. ஆலங்குளம்
    ஆலங்குளம் அருகே நூதன முறையில் பண மோசடி : 4 பேர் கைது..!
  4. குமாரபாளையம்
    சேலம் கோவை புறவழிச் சாலை பகுதியில் கடும் போக்குவரத்து நெரிசல்
  5. காஞ்சிபுரம்
    செய்யாறு பாலத்தில் எல்இடி விளக்குகள் பொருத்தும் பணி
  6. காஞ்சிபுரம்
    காஞ்சிபுரத்தில் 30 நிமிட கோடை மழை : பொதுமக்கள் மகிழ்ச்சி..!
  7. காஞ்சிபுரம்
    காஞ்சிபுரம் வீரர் கின்னஸ் உலக சாதனை முயற்சியில் வெற்றி
  8. தொழில்நுட்பம்
    செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்ப பயன்பாடு இரட்டிப்பு வளர்ச்சி..!
  9. குமாரபாளையம்
    நீர் தெளிப்பான் அமைக்கப்பட்ட முதியோர் இல்லம்..!
  10. நாமக்கல்
    பரமத்தி வேலூரில் ஸ்ரீ சங்கர ஜெயந்தி விழா கோலாகலம்..!