/* */

நாமக்கல் மாவட்டத்தில் 12ம் தேதி 30ம் கட்ட மெகா கொரோனா தடுப்பூசி முகாம்

நாமக்கல் மாவட்டத்தில் 12ம் தேதி ஞாயிற்றுக்கிழமை, 30ம் கட்ட மெகா கொரோனா திடுப்பூசி முகாம் நடைபெறுகிறது.

HIGHLIGHTS

நாமக்கல் மாவட்டத்தில் 12ம் தேதி 30ம் கட்ட மெகா கொரோனா தடுப்பூசி முகாம்
X

பைல் படம்.

நாமக்கல் மாவட்டத்தில் 12ம் தேதி ஞாயிற்றுக்கிழமை, 30ம் கட்ட மெகா கொரோனா திடுப்பூசி முகாம் நடைபெறுகிறது.

இது குறித்து நாமக்கல் கலெக்டர் ஸ்ரேயாசிங் வெளியிட்டள்ள செய்திக்குறிப்பில், நாமக்கல் மாவட்டத்தில் 12 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு 15,15,000 தடுப்பூசிகள் செலுத்த இலக்கு நிர்ணயிக்கப்பட்டு, இதுவரை முதல் தவணை தடுப்பூசி 12,83,030 பேருக்கு போடப்பட்டுள்ளது.இன்னும் 2,31,970 பேருக்கு முதல் தவணை தடுப்பூசி போடவேண்டியுள்ளது. இரண்டாம் தவணை தடுப்பூசி 10,08,625 பேருக்கு போடப்பட்டுள்ளது. இன்னும் 2,74,405 பேருக்கு இரண்டாம் தவணை தடுப்பூசி போடவேண்டியுள்ளது.

மாவட்டத்தில் இதுவரை நடைபெற்ற 29 மெகா தடுப்பூசி முகாம்களில் 8,16,144 பேர் தடுப்பூசி செலுத்தி பயன்பெற்றனர். வரும் 12ம் தேதி ஞாயிற்றுக்கிழமை 30ம் கட்ட மெகா தடுப்பூசி முகாம் மாவட்டம் முழுவதும் உள்ள, ஆரம்ப சுகாதாரநிலையங்கள், ஊட்டச்சத்து மையங்கள் மற்றும் அரசு தொடக்க மற்றும் நடுநிலைப்பள்ளிகளில் உள்ள 2,766 முகாம்களில், காலை 7 மணி முதல் மாலை 7 மணிவரை நடைபெறுகிறது.

கொரோனா தொற்று முழுமையாக இன்னும் ஒழியவில்லை. எனவே இந்த முகாம்களில் அந்தந்த பகுதிகளில் உள்ள பொதுமக்கள் முழுமையாக பங்கேற்று, இதுவரை ஒரு தவணை தடுப்பூசி கூட போடாதவர்களும், முதலாம் தவணை போட்டு முடித்து இரண்டாம் தவணைக்காக நிலுவையில் உள்ளவர்களும் தவறாமல் தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும் என கூறப்பட்டுள்ளது.

Updated On: 10 Jun 2022 9:30 AM GMT

Related News

Latest News

  1. வழிகாட்டி
    ஒரு வரலாற்று கலாசாரம் முடிவுக்கு வருகிறது..!
  2. சினிமா
    ஒரு கோடி ரூபாய் ராயல்டி பெற்றாரா மணிரத்தினம்..?
  3. தேனி
    வீரபாண்டி கௌமாரியம்மன் திருவிழா இன்று தொடங்கியது..!
  4. அம்பாசமுத்திரம்
    நெல்லை மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்
  5. இந்தியா
    சென்னையில் தரையிறங்கிய 8 பெங்களூர் விமானங்கள்
  6. வீடியோ
    🔴LIVE : தனது சொந்த ஊரில் ஜனநாயக கடமையை ஆற்றிய பிரதமர் மோடி ||...
  7. தென்காசி
    தென்காசி மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்
  8. ஈரோடு
    கொதித்த ஈரோட்டை குளிர்வித்த மழை: மாவட்டம் முழுவதும் 72.80 மி.மீ பதிவு
  9. சேலம்
    மேட்டூர் அணையில் இருந்து நீர் திறப்பு 1,500 கன அடியாக அதிகரிப்பு
  10. ஈரோடு
    பவானிசாகர் அணையின் நீர்மட்டம் 44 அடியாக சரிவு