மேட்டூர் அணையில் இருந்து நீர் திறப்பு 1,500 கன அடியாக அதிகரிப்பு

மேட்டூர் அணையில் இருந்து நீர் திறப்பு 1,500 கன அடியாக அதிகரிப்பு
X

மேட்டூர் அணை.

சேலம் மாவட்டம் மேட்டூர் அணையில் இருந்து குடிநீர் தேவைக்கான நீர் திறப்பு வினாடிக்கு 1,500 கன அடியாக அதிகரிக்கப்பட்டுள்ளது.

மேட்டூர் அணையில் இருந்து குடிநீர் தேவைக்கான நீர் திறப்பு வினாடிக்கு 1,500 கன அடியாக அதிகரிக்கப்பட்டுள்ளது.

காவிரி நீர்ப் பிடிப்பு பகுதிகளில் பெய்யும் மழையை பொறுத்து, ஒகேனக்கல் மற்றும் மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பதும், சரிவதுமாக உள்ளது. ஒகேனக்கல் காவிரியில் நீர்வரத்து வினாடிக்கு 200 கன அடியாக நீடிக்கிறது.

இதேபோல், மேட்டூர் அணைக்கு நேற்று (மே.6) திங்கட்கிழமை காலை 8 மணி நிலவரப்படி வினாடிக்கு 49 கன அடியாக இருந்த நீர்வரத்து, இன்று (மே.7) செவ்வாய்க்கிழமை காலை 8 மணி நிலவரப்படி வினாடிக்கு 54 கன அடியாக அதிகரித்துள்ளது. அணையில் இருந்து குடிநீர் தேவைக்காக வினாடிக்கு 1,400 கன அடி தண்ணீர் திறக்கப்பட்டு வந்த நிலையில், இன்று காலை முதல் நீர் திறப்பு வினாடிக்கு 1,500 கன அடியாக அதிகரிக்கப்பட்டது.

அணைக்கு வரும் நீரின் அளவை விட திறப்பு பலமடங்கு அதிகமாக இருப்பதால் அணையின் நீர்மட்டம் வேகமாக சரிந்து வருகிறது. நேற்று 52.30 அடியாக இருந்த அணையின் நீர்மட்டம், இன்று காலை 52.10 அடியானது. நீர் இருப்பு 19.16 டிஎம்சியாக உள்ளது. மேலும், அணைப் பகுதியில் 23.6 மி.மீ மழைப்பொழிவு பதிவாகி உள்ளது.

Tags

Next Story
ai marketing future