/* */

நாமக்கல்லில் வன உயிரின வார விழாவை முன்னிட்டு ஓவியப்போட்டி

நாமக்கல்லில் வனத்துறை சார்பில் பள்ளி மாணவ மாணவிகளுக்கு ஓவியப்போட்டி, கட்டுரைப் போட்டி மற்றும் பேச்சுப் போட்டிகள் நடைபெற்றது.

HIGHLIGHTS

நாமக்கல்லில் வன உயிரின வார விழாவை முன்னிட்டு ஓவியப்போட்டி
X

வன உயிரின வார விழாவை முன்னிட்டு, நாமக்கல்லில் வனத்துறை சார்பில் ஓவியப்போட்டி நடைபெற்றது.

வன உயிரின வாரவிழாவை முன்னிட்டு, நாமக்கல்லில் வனத்துறை சார்பில் பள்ளி மாணவ மாணவிகளுக்கு ஓவியப்போட்டி, கட்டுரைப் போட்டி மற்றும் பேச்சுப் போட்டிகள் நடைபெற்றது.

ஆண்டுதோறும் அக்டோபர் 2 முதல் 8 வரை இந்திய வன உயிரின வாரம் கடைபிடிக் கப்படுகிறது. வனங்களில் வாழும் அனைத்து விலங்குகள் மற்றும் உயிரினங்களைப் பாதுகாக்க வேண்டும் என்ற குறிக்கோளுடன் 1952-ம் ஆண்டு முதல் இது அனுசரிக்கப்படுகிறது.

நாமக்கல் தெற்கு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் வன உயிரின வார விழாவை முன்னிட்டு நாமக்கல் மாவட்ட வனத்துறை சார்பில் ஓவியப்போட்டி, கட்டுரைப் போட்டி மற்றும் பேச்சுப் போட்டி நடைபெற்றது. சுமார் 268 பள்ளி, கல்லூரி மாணவ மாணவிகள் போட்டிகளில் பங்கேற்றனர் இந்தப் போட்டிகளை மாவட்ட வன அலுவலர் ராஜாங்கம் தொடங்கி வைத்தார்.

போட்டிகளில் இயற்கை வளங்கள் குறித்தும், வன உயிரினம் பற்றியும் மாணவர்கள் ஆர்வத்துடன் ஓவியம் வரைந்தனர். அதுகுறித்த தலைப்புகளில் கட்டுரைப்போட்டி மற்றும் பேச்சுப் போட்டிக நடைபெற்றது. போட்டிகளில் முதல் மூன்று இடங்களைப் பெற்றவர்களுக்கு விரைவில் நடைபெறும் விழாவில் பரிசளிக்கப்படும். போட்டிக்கான ஏற்பாடுகளை நாமக்கல் வனசரக அலுவலர் பெருமாள், ராசிபுரம் வன அலுவலர் ரவிச்சந்திரன் ஆகியோர் செய்திருந்தனர்.

Updated On: 12 Oct 2023 3:00 AM GMT

Related News

Latest News

  1. ஆன்மீகம்
    Horoscope Today அனைத்து ராசிக்கான இன்றைய ராசிபலன்
  2. திருவண்ணாமலை
    திருவண்ணாமலையில் தூய்மை பணியில் ஈடுபட்ட அமைச்சர்
  3. செய்யாறு
    செய்யாறு அரசு பாலிடெக்னிக் கல்லூரியில் மாணவர் சேர்க்கைக்கு...
  4. திருவண்ணாமலை
    கார் விபத்தில் சிக்கிய அமைச்சரின் மகன்: போலீசார் விசாரணை
  5. நாமக்கல்
    நாமக்கல்லில் இன்னுயிர் காப்போம் திட்டம்: 6,568 பேருக்கு ரூ. 4.73 கோடி...
  6. நாமக்கல்
    நாமக்கல் உழவர் சந்தையில் இன்றைய காய்கறி, பழங்கள் விலை நிலவரம்
  7. திருவண்ணாமலை
    திருவண்ணாமலையில் இயற்கை உணவு திருவிழா
  8. லைஃப்ஸ்டைல்
    வீட்டிலேயே வலி நிவாரணி எண்ணெய் தயாரிப்பது எப்படி?
  9. லைஃப்ஸ்டைல்
    வெறும் வயிற்றில் கற்றாழை சாறு அருந்துவதால் கிடைக்கும் நன்மைகள் பற்றி...
  10. ஆன்மீகம்
    பழனியில் வரும் ஆகஸ்ட் மாதத்தில், உலக முருக பக்தர்கள் மாநாடு