/* */

நாமக்கல் அரசு ஆஸ்பத்திரியில் குழந்தைகள் சிகிச்சை பிரிவு திறப்பு

நாமக்கல் மாவட்ட அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரியில், குழந்தைகளுக்கான கொரோனா தீவிர சிகிச்சைப் பிரிவை அமைச்சர் டாக்டர் மதிவேந்தன் திறந்து வைத்தார்.

HIGHLIGHTS

நாமக்கல்  அரசு ஆஸ்பத்திரியில் குழந்தைகள் சிகிச்சை பிரிவு திறப்பு
X

நாமக்கல் மாவட்ட அரசு ஆஸ்பத்திரியில் குழந்தைகளுக்கான சிறப்பு கொரோனா சிகிச்சை வார்டை சுற்றுலாத்துறை அமைச்சர் டாக்டர் மதிவேந்தன் திறந்து வைத்தார். அருகில் கலெக்டர் ஸ்ரேயாசிங், எம்.பி சின்ராஜ், எம்எல்ஏ ராமலிங்கம், மாவட்ட திமுக பொறுப்பாளர் ராஜேஷ்குமார் ஆகியோர்.

நாமக்கல் அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரியில், குழந்தைகளுக்கு சிகிச்சை அளிக்க கொரோனா சிறப்பு சிகிச்சை பிரிவு அமைக்கப்பட்டுள்ளது. இந்தப் பிரிவில், 1 தீவிர சிகிச்சை படுக்கை வசதி, 1 அதிதீவிர சிகிச்சை படுக்கை வசதி, ஆக்ஸிஜன் வசதியுடன் கூடிய 6 படுக்கை வசதி மற்றும் நோய்த்தொற்றில் இருந்து குணமடைந்த குழந்தைகளுக்கு மருத்துவ கண்காணிப்பிற்காக ஸ்டெப் டவுன் வார்டில் 2 படுக்கை வசதிகள் அமைக்கப்பட்டுள்ளன.

இதன் தொடர்ச்சியாக, குழந்தைகளுக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டால் சிகிச்சை அளிக்க, கூடுதல் வசதிகள் ஏற்படுத்தும் வகையில் 20 படுக்கைகளுடன் கூடிய குழந்தைகளுக்கான கொரோனா சிகிச்சை பிரிவு அமைக்கப்பட்டுள்ளது. இந்த பிரிவிற்கு சேலத்தை சேர்ந்த காசநோய் ஆராய்ச்சியாளர் டாக்டர் சேஷசைலம் வழங்கிய 20 எண்ணிக்கை இன்ஃபியூசன் பம்ப், 20 எண்ணிக்கை சிரிஞ்ச் பம்ப், 10 எண்ணிக்கை மல்ட்டி பாரா மானிட்டர், 20 எண்ணிக்கை குழந்தைகளுக்கான சென்ட்ரல் லைன் கத்தீட்டர் ஆகிய ரூ.20 லட்சம் மதிப்பீட்டிலான நவீன மருத்துவ உபகரணங்கள் பொருத்தப்பட்டுள்ளன.

இந்த சிறப்பு சிகிச்சைப்பிரிவை சுற்றுலாத்துறை அமைச்சர் டாக்டர் மதிவேந்தன் திறந்து வைத்தார். நிகழ்ச்சியில் நாமக்கல் மாவட்ட கலெக்டர் ஸ்ரேயாசிங், எம்.பி சின்ராஜ், எம்எல்ஏ ராமலிங்கம், நன்கொடையாளர் ராஜேஸ்குமார், முன்னாள் எம்.பி சுந்தரம், அரசு மருத்துவ கல்லூரி முதல்வர் சாந்தாஅருள்மொழி, காசநோய் ஆராய்ச்சியாளர் சேசசைலம், பிஆர்ஓ சீனிவசன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Updated On: 24 Sep 2021 1:00 PM GMT

Related News

Latest News

  1. ஆன்மீகம்
    பழனியில் வரும் ஆகஸ்ட் மாதத்தில், உலக முருக பக்தர்கள் மாநாடு
  2. லைஃப்ஸ்டைல்
    பெண்களுக்கு 7 மணி நேர தூக்கம் போதுமா..? ஆய்வு என்ன சொல்லுது?
  3. லைஃப்ஸ்டைல்
    இரவில் சாப்பிடுவதால் உடல் பருமனை அதிகரிக்கும் 5 உணவுகள் என்னென்ன...
  4. லைஃப்ஸ்டைல்
    சுவையான வத்தக்குழம்பு செய்வது எப்படி?
  5. லைஃப்ஸ்டைல்
    கோடை காலத்தில் தேனின் மருத்துவ குணங்களை தெரிஞ்சுக்குங்க!
  6. தென்காசி
    10ம் வகுப்பில் அதிக மதிப்பெண் எடுத்த மாணவ,மாணவிகளுக்கு பாராட்டு...
  7. சுற்றுலா
    அண்டார்டிகாவில் ஒழுங்குபடுத்தப்பட்ட சுற்றுலா: சுற்றுச்சூழலை காப்பாற்ற...
  8. லைஃப்ஸ்டைல்
    பதப்படுத்தப்பட்ட உணவுகளை உட்கொள்வது ஆபத்து! ஹார்வர்ட் பல்கலைகழக ஆய்வு
  9. லைஃப்ஸ்டைல்
    புரதச் சத்துக்களைத் தவிர்க்க மக்களை வலியுறுத்தும் ஐசிஎம்ஆர் மருத்துவக்...
  10. திருச்சிராப்பள்ளி மாநகர்
    திருச்சி முக்கொம்பு மேலணையின் ஷட்டர் பழுதுபார்ப்பு பணி துவக்கம்