/* */

நாமக்கல் மாவட்ட அரசு பள்ளி மாணவர்கள் செஸ் ஒலிம்பியாட் பார்க்க வாய்ப்பு

Chess Olympiad- நாமக்கல் மாவட்ட அரசு பள்ளி மாணவர்கள் செஸ் ஒலிம்பியாட் போட்டியை பார்க்க ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது.

HIGHLIGHTS

நாமக்கல் மாவட்ட அரசு பள்ளி மாணவர்கள் செஸ் ஒலிம்பியாட் பார்க்க வாய்ப்பு
X

Chess Olympiad- பள்ளி மாணவ மாணவிகள், ஆக.5ம் தேதி சென்னையில் நடைபெறும் சர்வதேச செஸ் ஒலிம்பியாட் போட்டியை நேரில் பார்க்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

நாமக்கல் மாவட்டத்தில் அரசு பள்ளி மாணவ மாணவிகளுக்கு, 6ம் வகுப்பு முதல், பிளஸ் 2 வரை, 3 பிரிவுகளாக செஸ் போட்டி நடத்தப்பட்டு வருகிறது. பள்ளி அளவில், முதல் இரண்டு இடங்கள் பெற்றவர்கள், ஒன்றிய அளவிலான போட்டியில் கலந்து கொள்கின்றனர். அதன்படி, இன்று 20ம் தேதி நாமக்கல் ஒன்றியத்தில், நாமக்கல் அரசு மகளிர் பள்ளி, சேந்தமங்கலத்தில் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி, எருமப்பட்டியில் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி, கொல்லிமலையில், அரசு மாதிரி மேல்நிலைப்பள்ளி, புதுச்சத்திரத்தில், அரசு மேல்நிலைப்பள்ளி, ராசிபுரத்தில், அண்ணா சாலை அரசு மேல்நிலைப்பள்ளி, நாமகிரிப்பேட்டையில் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி, மோகனூர் மற்றும் திருச்செங்கோட்டில் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி, பள்ளிபாளையத்தில் அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி, குமாரபாளையம், எலச்சிப்பாளையம், மல்லசமுத்திரம், பரமத்தி மற்றும் கபிலர்மலையில், அரசு மேல்நிலைப்பள்ளிகள், வெண்ணந்தூரில் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி, ஆகிய பள்ளிகளில் ஒன்றிய அளவில் செஸ் போட்டி நடைபெறுகிறது.

இதில், முதல் மூன்று இடங்களை பிடிப்பவர்கள் மாவட்ட அளவிலான போட்டியில் கலந்து கொள்வர். இப்போட்டி, வரும் 25ம் தேதி நாமக்கல் தெற்கு அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் நடைபெறும். மாவட்ட அளவில் நடைபெறும் போட்டியில், முதல் இரண்டு இடங்களை பெறுபவர்கள், மாநில அளவில் நடக்கும் பயிற்சி முகாம் மற்றும் போட்டிகளில் பங்கு பெறுவார்கள்.

மேலும், அவர்கள் சர்வதேச செஸ் ஒலிம்பியாட் வீரர்களுடன் கலந்துரையாடும் வாய்ப்பை பெறுவார்கள். மாவட்ட அளவில் முதலிடம் பிடிக்கும், 9, 10, பிளஸ் 1, பிளஸ் 2 வகுப்பு மாணவ, மாணவியர் (மாணவர் 4, மாணவியர் 4) மொத்தம் 8 பேர், வரும் ஆக. 5ல், சென்னை மகாபலிபுரத்தில் நடக்கும் செஸ் ஒலிம்பியாட் போட்டியை பார்வையிடும் வாய்ப்பை பெறுவர்.


அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2

Updated On: 20 July 2022 6:41 AM GMT

Related News

Latest News

  1. தமிழ்நாடு
    தமிழகத்தில் தேனி, விருதுநகர், தென்காசி மாவட்டங்களுக்கு கனமழை...
  2. இந்தியா
    தொலை தொடர்புத் துறை பெயரில் போலி அழைப்புகள்: மத்திய அரசு எச்சரிக்கை
  3. லைஃப்ஸ்டைல்
    அன்னைக்கு இன்னைக்கு பிறந்தநாள்..! வாழ்த்துகிறோம்..!
  4. லைஃப்ஸ்டைல்
    வார்த்தைகளால் பூ தொடுத்து அக்காவுக்கு பிறந்தநாள் வாழ்த்து..!
  5. இந்தியா
    உலக சாதனை புத்தகத்தில் இடம் பிடித்த நான்கு மாத குழந்தை!
  6. திருச்சிராப்பள்ளி மாநகர்
    திருச்சி கோர்ட்டில் ஆஜர்: சவுக்கு சங்கர் லால்குடி கிளை சிறையில்...
  7. லைஃப்ஸ்டைல்
    வீட்டில் இருந்தபடியே பெண்கள் சம்பாதிப்பது எப்படி?
  8. ஆன்மீகம்
    நடப்பாண்டில் வைகாசி விசாகம் எப்போது வருகிறது தெரியுமா?
  9. லைஃப்ஸ்டைல்
    ருசியான எண்ணெய் கத்திரிக்காய் கிரேவி செய்வது எப்படி?
  10. கல்வி
    எமிஸ் தளத்தில் பொது மாறுதல் கேட்டு விண்ணப்பித்த 13,484 ஆசிரியர்கள்