/* */

பரமத்தி அருகே டூ வீலர்கள் மோதி விவசாயி உயிரிழப்பு: ஒருவர் காயம்..!

பரமத்தி அருகே டூ வீலர்கள் மோதிக்கொண்ட விபத்தில் விவசாயி உயிரிழந்தார். ஒருவர் காயம் அடைந்தார்.

HIGHLIGHTS

பரமத்தி அருகே டூ வீலர்கள் மோதி  விவசாயி உயிரிழப்பு: ஒருவர் காயம்..!
X

கோப்பு படம் 

நாமக்கல்:

பரமத்தி அருகே இரண்டு டூ வீலர்கள் நேருக்கு நேர் மோதிக்கொண்ட விபத்தில், விவசாயி பரிதாபமாக உயிரிழந்தார். மற்றொருவருக்கு காயம் ஏற்பட்டது.

நாமக்கல் மாவட்டம், பரமத்தி வேலூர் அருகே உள்ள பொய்யேரி, பாரதி நகரைச் சேர்ந்தவர் சிவகுமார் (46). இவர் சம்பவத்தன்று, தனது டூ வீலரில், பரமத்திக்கு சென்று விட்டு மீண்டும் வீட்டிற்குச் திரும்பி வந்துகொண்டிருந்தார். பரமத்தி அருகே உள்ள வெள்ளாளபாளையத்தைச் சேர்ந்த பழனியப்பன் (80), விவசாயி. இவர் தனது டூ வீலரில் பரமத்தி நோக்கிச் சென்று கொண்டிருந்தார். பரமத்தி மோட்டார் வாகன ஆய்வாளர் அலுவலகம் அருகே வந்தபோது, இரண்டு டூ வீலர்களும் நேருக்கு நேர் மோதிக்கொண்டன. இந்த விபத்தில், சிவகுமார், பழனியப்பன் ஆகிய இருவரும் கீழே விழுந்து படுகாயம் அடைந்தனர்.

இதையடுத்து அவர்கள் 2 பேரும் சிகிச்சைக்காக, நாமக்கல் அரசு மருத்துவக் கல்லூரி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். அங்கு பழனியப்பன் சிகிச்ø பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். காயம் அடைந்த சிவகுமார், நாமக்கல் தனியார் ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டு அங்கு சிகிச்சை பெற்று வருகிறார். இது குறித்து பரமத்தி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Updated On: 3 Jan 2024 5:02 AM GMT

Related News

Latest News

  1. வீடியோ
    🔴LIVE: சீமான் செய்தியாளர் சந்திப்பு | #Seeman #NTK #SrilankanTamils...
  2. லைஃப்ஸ்டைல்
    அம்மாவுக்கு சொல்லுங்க.. அவங்க ரொம்ப சந்தோஷப்படுவாங்க
  3. லைஃப்ஸ்டைல்
    கோவக்காய் சாப்பிட்டு இருக்கீங்களா? எடை குறைக்குமாம்..!
  4. லைஃப்ஸ்டைல்
    காலைப் பொழுதில் ஒரு புன்னகையுடன்: உங்கள் நாளை அழகாக்கும் ரகசியங்கள்
  5. கல்வி
    கொஞ்சம் கொஞ்சமாக காணாமல் போகும் கர்சிவ் ரைட்டிங் எனும் கையெழுத்துக்...
  6. உலகம்
    ஆறுமாத குழந்தை மீது பலமுறை துப்பாக்கிச்சூடு..! தந்தை கைது..!
  7. திருவள்ளூர்
    பழுதடைந்த குடிநீர் தொட்டியை அகற்ற கிராம மக்கள் கோரிக்கை!
  8. உலகம்
    கடந்த ஆண்டில் வெளுத்துவிட்ட உலகின் 60% க்கும் மேற்பட்ட பவளப்பாறைகள்
  9. அரசியல்
    சீனாவை எதிர்க்க இந்தியாவுக்கு தைரியம் இருக்கா? படீங்க உங்களுக்கே...
  10. சேலம்
    மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 1,120 கன அடியாக அதிகரிப்பு