சீனாவை எதிர்க்க இந்தியாவுக்கு தைரியம் இருக்கா? படீங்க உங்களுக்கே புரியும்..!

சீனாவை எதிர்க்க இந்தியாவுக்கு தைரியம் இருக்கா?  படீங்க உங்களுக்கே புரியும்..!
X

ரஷ்ய அதிபர் புடின், இந்திய பிரதமர் மோடி, சீன அதிபர் ஜி ஜின்பிங் (கோப்பு படம்)

சென்னையில் இருந்து பாஜ நண்பர் ஒருவர் அனுப்பிய கட்டுரை. வித்தியாசமாகவும், உண்மைத்தன்மையுடனும் இருந்ததால் நமது வாசகர்களுக்கு வழங்கி உள்ளோம்.

காஷ்மீர்ல 370 மேல கைவெச்சா இந்தியா சுக்கு நூறாகி விடும்னு பலரும் பொங்கினார்கள். 370 போய் எவ்வளவு நாட்கள் ஆகிவிட்டன. மேற்சொன்னவர்கள் என்ன ஆனார்கள்? எங்கே போனார்கள்?

பின்பு அதே பரூக்அப்துல்லா அண்மையில் சொன்னது பாகிஸ்தான் ஒன்றும் வளையல் போட்டுக்கிட்டு இல்ல. அதனிடம் இருக்கும் அணு ஆயுதம் இந்தியாவை புல்பூண்டு முளைக்காத தேசமாக்கிடும்னு பயமுறுத்தினார். பரூக்கிற்கு மோடி வாயில் பதில் சொல்லாமல் பாகிஸ்தானை பொருளாதாரத்தில் ஏழை நாடாக்கினார்.

இன்று Pakistan Occupied Kashmir பொங்கி எழுந்துள்ளது. எங்களுக்கு முழு சுதந்திரம் கொடு இல்லாவிட்டால் நாங்கள் இந்தியாவோடு இணைகிறோம் என்கிறது. 150 போலீஸ்காரர்களை அம்மணமாக்கி அனுப்பி வைத்தது மட்டுமல்ல. அவர்கள் நடவடிக்கைகள் நரி என்று சொன்ன ஒரு மாவட்ட நீதிபதிக்கும் கடும் எச்சரிக்கை கொடுத்து அவர்களுக்கு துணையாக அனுப்பியது. இது பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் நடந்த சம்பவம்.

பாகிஸ்தானால் அவர்களை கட்டுப்படுத்த முடியவில்லை. அடிபணிந்து போக வேண்டிய சூழல் தான் உள்ளது. எங்களிடம் நிதி சூழல் மிக மோசமாக இருக்கிறது. விரைவில் செய்கிறோம் என்ற வாக்குறுதிகளை கேட்க காஷ்மீரிகள் தயாராக இல்லை. இந்த நிலையில், பாகிஸ்தானுக்கு வாய் பேச்சு என்ற மொழிக்கு அர்த்தம் புரியாது.

அவர்களுக்கு துப்பாக்கிதான் சரியான வார்த்தை என்று தலிபான் ஆலோசனை மட்டுமல்ல ஆதரவும் தருகிறோம் என்கிறது. அதன் விளைவு காஷ்மீரில் கல் எரிந்து ராணுவத்தை தாக்கியதுபோல ஆக்கிரமிப்பு காஷ்மீரில் மொத்த மாநிலமும் தாக்கியதில் முடங்கிப்போனது பாகிஸ்தான் ராணுவம். பாகிஸ்தான் அவர்களுக்கு சுதந்திரமோ அல்லது அவர்களுக்கு இந்தியாவோடு சேர்வதற்கு அனுமதி கொடுக்கவேண்டிய சூழல் மெல்லமெல்ல இறுகி வருகிறது.

ஆனால் அதை செய்ய முடியாத இக்கட்டான நிலையும் அந்த நாட்டிற்கு உள்ளது. காரணம் பாகிஸ்தானின் 60% மின்சாரம் அங்குள்ள அணைகளில் இருந்து தான் எடுக்கப்படுகிறது. அதுமட்டுமல்ல அங்கே உள்ள அணைகள் பாகிஸ்தான் விவசாயத்தின் முக்கிய ஆதாரம். ஏற்கனவே சிந்து நதியில் வரும் தண்ணீரை தடுக்கும் வேலையில் இந்தியா இருக்கிற நிலையில், பாக் ஆக்கிரமிப்பு காஷ்மீரும் கை விட்டுப் போனால், பாகிஸ்தான் நாளை குடி தண்ணீருக்கே திண்டாட வேண்டும்.

இந்த சூழலில் பாகிஸ்தான் ராணுவம் இந்தியாவுடன் ரகசியமாக பேசிக் கொண்டிருக்கிறது. PoK வை உங்களுக்கே கொடுக்கிறோம். ஆனால் அதற்கு அது கேட்கும் விலை வித்தியாசமானது. இந்தியா பாகிஸ்தானை உடைத்து விடக்கூடாது. பாகிஸ்தான் வாங்கியுள்ள கடனை அடைக்க பெரும் நிதி உதவி செய்ய வேண்டும். உணவு தேவையை பூர்த்தி செய்ய உதவ வேண்டும்.

ஆனால் அதையும் நேரடியாக செய்ய முடியாத சூழலை சீனாவின் நிர்பந்தம் உருவாக்கி உள்ளது. ஏனெனில் சீனா பாகிஸ்தானில் செய்த பல முதலீடுகள் தான் இதற்கு காரணம். ஆக்கிரமிப்பு காஷ்மீரை பாகிஸ்தான் கொடுத்தால் தான் சீனா பொங்கும். மக்களாகவே மாறி விட்டால் எங்களால் எதுவும் செய்ய முடியாது என்ற ஒரு ஜல்ஜாப்பு சொல்லலாம் அல்லவா? இதற்கான பதில் விரைவில் மோடி பதவி ஏற்ற பின்பு தெரியும்.

அதனால் தான் நேற்று பாகிஸ்தானை தொட்டுப்பார் என்று சொன்ன ராகுல் காந்தி, இன்று பாகிஸ்தானை தொட்டுட்டே, அதுபோல சீனா மேல கை வைக்க முடியுமா? கைவெச்சு பாரு என்கிறார். இது கிட்டத்தட்ட வடிவேல் என் ஏரியாவிற்கு வந்து பாரு, வீதிக்கு வந்து பாரு, வீட்டுக்குள் வந்து பார் என்று டம்மி பீஸான கரை போலத் தான் இருக்கிறது. ஆனால் ராகுல் காந்திக்கு புரியாத விஷயம் இந்தியா சீனா மீது கைவைக்கவில்லை, காலே வைத்துள்ளது. ஆம் சீனா மீது தனது சுண்டுவிரல் கூட படாமல் சீனாவை சின்னா பின்னமாக்கி கொண்டிருக்கிறது.

இந்தியாவை வளைக்க சீனா திட்டமிட்ட முத்துமாலை திட்டம் முடங்கி போயுள்ளது. சீனா பங்களாதேஷ், மியான்மார், ஸ்ரீலங்கா, மாலத்தீவு என்று அது திட்டமிட்டதற்கு எதிராக இந்தியா எடுத்த நகர்வுகளால் அதன் திட்டங்கள் வருமானம் இன்றி போய், அது டெட் இன்வெஸ்ட்மெண்ட் ஆகிவிட்டது.

மியான்மாரில் அதன் துறைமுகத்திற்கு அருகில் இந்தியா ஒரு துறைமுகத்தை கட்டி, அதிலிருந்து கிழக்கு இந்திய மாநிலங்களில் போக்குவரத்தை எளிதாக்கி இருக்கிறது. அங்கே செல்ல பங்களாதேஷை சுத்திக்கொண்டு போகாமல் நேரடியாக மியான்மார் மூலம் இந்திய சரக்குகள் எளிதாக, குறைந்த செலவில் அங்கே கொண்டு செல்லவும், வரவும் முடியும். அதனால் சீனாவின் துறைமுகத்தை சீண்ட ஆளில்லை.

சீனா ஸ்ரீலங்காவின் ஹம்பந்தோட்டாவில் துறைமுகம் கட்டி ஈ ஓட்டிக்கொண்டிருக்க, அதற்கு 20 கிமீ அருகில் இருக்கும் மட்டாலா விமான நிலையத்தை இந்தியா நீண்டகால லீசுக்கு எடுத்துள்ளது. அதுமட்டுமல்ல இந்தியாவை சுற்றி முத்து மாலை திட்டம் வகுத்து இந்தியாவின் மூச்சை நிறுத்துவேன் என்றது. ஆனால் இன்று இந்தோனேஷியா, வியட்நாம், பிலிப்பைன்ஸ் என்று சீனாவின் அடிவயிற்றில் இருக்கும் துறைமுகங்களை இந்தியா தனது கையில் எடுத்துள்ளது.

அடுத்து சிங்க்ப்பூர் துறைமுகம் பேச்சு வார்த்தையில் இருக்கிறது. தைவான் தனக்கும் இந்தியா ஆதரவு தர வேண்டும் என கேட்டு வருகிறது. அதுமட்டுமல்ல, ரஷ்யாவின் விலாடிவொஸ்டாக் துறைமுகத்தை இந்தியா நீண்ட கால லீஸில், எடுத்து அதை சுற்றி இந்திய நகரம் ஒன்றினை சிங்கப்பூர் போல கட்டி வருகிறது. அந்த துறைமுகத்தை சீனா தன்னுடையது என்று சொல்லி வருகிறது.

சீனாவிடம் 4 மிகப்பெரிய போர்க்கப்பல்கள் இருக்கின்றன. இந்தியாவைச் சுற்றி வளைக்க போதுமானதாகும் என்கிறார்கள். ஆனால் நமது பிரம்மோஸ் ரக ஏவுகணைகளை பிலிப்பைன்ஸுக்கு கொடுத்த பின்னால், தனது பாதுகாப்பு கப்பலை பின்வாங்கிய சீனா, இன்று இந்தியாவை ரகசிய பேச்சு வார்த்தைக்கு அழைத்திருக்கிறது. ஏனெனில், அதன் நான்கு மிகப்பெரிய கப்பலை ஜலசமாதி செய்ய, 12 பிரம்மோஸ் ஏவுகணைகள் மட்டும் போதுமானது.

சரி, இன்று சீனா இந்தியாவை சுற்றி வளைக்க வேண்டுமெனில் தென் சீனக்கடலில் இருக்கும் நமது கடற்படையை தாண்டித்தான் வரவேண்டும். ஆம் பிலிப்பைன்ஸில், வியட்னாமில், இந்தோனிஷியாவில் உள்ள நம் கப்பற்படையை தாண்டி வந்தால், வரவேற்க மிகப் பெரிய அந்தமான் துறைமுகம் புதிய டர்பீடோக்களுடன் காத்திருக்கிறது. சீனாவின் நீர்மூழ்கி கப்பல் கூட இந்தியாவை மீறி வரமுடியாது.

சரி, சீனா அணு ஆயுதத்தால் தாக்கினால், அதற்கு பதில் சொல்ல இந்தியாவின் 12 நீர்மூழ்கி கப்பல்களில் 6 கப்பல்கள் அணு ஆயுதங்களோடு காத்திருக்கிறது என்று பதில் சொல்லி விட்டோம். அப்போ சீனா J20 என்ற Stealth வகை ஐந்தாம் தலைமுறை விமானத்திலிருந்துந்து தாக்குவோம் என்கிறது. ஆனால் அது ஸ்டெல்த்தே இல்லை. எங்களிடம் இருக்கும் ரேடார்களால் அதை கண்டுபிடித்து விட்டோம் என்றும், அதை நாங்கள் Rafale, Sukhoi, Miraj, Tejas என்று வரிசையாக அதை விட பவர்புல்லான விமானங்கள் உள்ளன என்கிறது இந்தியா.

எங்கள் வான்வெளியை இந்தியா மீற முடியாது HQ 9 ஐ மீறி ஒரு ஈ, காக்கை கூட கண்டுபிடித்து விடும் என்றது. ஆமாம், நாங்கள் பிரம்மோஸை பாகிஸ்தான் மீதி தவறுதலாக ஏவி விட்டோம் என்றோமே, அதை உனது HQ Shield சிஸ்டம் என்பது டுபாக்கூர் என்பதை நிருபிக்கத் தான் என்று பதில் சொல்லாமல் சொல்லியது.

இதை தாண்டி அவர்கள் சொல்லும் பதில் இந்தியாவின் 2000 சகிமீ நிலத்தை சீனா பிடித்து விட்டது. 56" மோடியால் என்ன செய்ய முடிந்தது என்கிறார்கள். அப்படி யாரேனும் அதை நிரூபித்தால், சங்கிகள் நாங்கள் அரசியல் பேசுவதையே விட்டு விடுகிறோம்!

சரி இதுவெல்லாம் ஒரு போர் வந்தால் தானே நிரூபிக்க, அதற்கு வாய்ப்புகள் மிகக்குறைவு என்பது எங்களுக்கும் தெரியும். ஏனெனில் சீனா வெறும் டுபாக்கூர், அது யானைக்கால் போல மிரட்ட மட்டுமே அதனால் முடியும். அதை நன்கு அறிந்த இந்தியா, அதன் அடி நாதமான பொருளாதாரத்தை சீரழிக்கும் வேலையை ஆரம்பித்து விட்டது.

அதன் பொருளாதார ஆதிக்கம் அடுத்த 10 ஆண்டுகளில் இந்தியாவிடம் அடிபணிய வேண்டிய சூழலையும் பார்க்க முடியும்! எங்கள் பிரதமரின் வேலை தேச விரோத சக்திகளுக்கு பதில் சொல்வதல்ல. அதுதான் இந்தியாவின் நீண்டகால திட்டங்கள். 2029 தேர்தல் வரத்தானே போகிறது. அன்று மீண்டும் விவாதிப்போம். இது இந்திய தேசமடா!. இவ்வாறு கூறியுள்ளார்.

Tags

Next Story
ஈரோடு வீட்டுவசதி வாரிய அலுவலகம் இடமாற்றம் - பொதுமக்கள் வசதிக்காக புதிய இடத்தில் செயல்பாடு