மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 1,120 கன அடியாக அதிகரிப்பு

மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 1,120 கன அடியாக அதிகரிப்பு
X

மேட்டூர் அணை.

சேலம் மாவட்டம் மேட்டூர் அணைக்கான நீர்வரத்து வினாடிக்கு 137 கன அடியிலிருந்து 1,120 கன‌ அடியாக அதிகரித்துள்ளது.

மேட்டூர் அணைக்கான நீர்வரத்து வினாடிக்கு 137 கன அடியிலிருந்து 1,120 கன‌ அடியாக அதிகரித்துள்ளது.

தமிழ்நாட்டின் குடிநீர் மற்றும் பாசனத்துக்கு உயிர் நாடியாக திகழும் ஸ்டான்லி நீர்த்தேக்கம் எனப்படும் மேட்டூர் அணை காவிரி ஆற்றின் குறுக்கே மேட்டூரில் அமைந்துள்ளது. இந்த அணை மூலம் 15 மாவட்டங்கள் பாசன வசதி பெறுகிறது.

இந்நிலையில், தற்போது காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் மழை காரணமாக ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து அதிகரித்துள்ளது. நேற்று முன்தினம் வினாடிக்கு 1,000 கன அடியாக இருந்த நீர்வரத்து, நேற்று காலை வினாடிக்கு 3,000 கன அடியாக அதிகரித்தது.

இதேபோல், மேட்டூர் அணைக்கு நேற்று (மே.17) வெள்ளிக்கிழமை காலை 8 மணி நிலவரப்படி வினாடிக்கு 137 கன அடியாக இருந்த நீர்வரத்து, இன்று (மே.18) சனிக்கிழமை காலை 8 மணி நிலவரப்படி 1,120 கன அடியாக அதிகரித்துள்ளது.

அணையில் இருந்து குடிநீர் தேவைக்காக 2,100 கன அடி வீதம் தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது. நேற்று காலை 49.95 அடியாக இருந்த நீர்மட்டம், இன்று காலை 49.79 அடியானது. நீர் இருப்பு 17.68 டிஎம்சியாக உள்ளது.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!