/* */

நாமக்கல்: புதிய பாரத எழுத்தறிவு திட்டத்தின் கீழ் 872 மையங்கள் துவக்கம்

நாமக்கல் மாவட்டத்தில் புதிய பாரத எழுத்தறிவு திட்டத்தின் கீழ் 872 மையங்கள் துவங்கப்பட்டு உள்ளது.

HIGHLIGHTS

நாமக்கல்: புதிய பாரத எழுத்தறிவு திட்டத்தின் கீழ் 872 மையங்கள் துவக்கம்
X

புதிய பாரத எழுத்தறிவு திட்டத்தின் கீழ் நாமக்கல் மாவட்டத்தில் தன்னார்வலர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டது.

தமிழக எழுத்தறிவு முனைப்பு ஆணையத்தின் மூலம், புதிய பாரத எழுத்தறிவு திட்டத்தின் கீழ், நாமக்கல் மாவட்டத்தில் 872 பயிற்சி மையங்கள் துவக்கப்பட்டுள்ளன.

தமிழகத்தில், 2011ல் எடுக்கப்பட்ட மக்கள் தொகை கணக்கெடுப்பை அடிப்படையாகக் கொண்டு, தமிழ்நாடு எழுத்தறிவு முனைப்பு ஆணையத்தின் சார்பில், பள்ளி சாரா மற்றும் வயது வந்தோர் கல்வி இயக்கத்தின் மூலம், புதிய பாரத எழுத்தறிவு திட்டம் 2022–-27 செயல் படுத்தப்பட்டு வருகிறது. இத்திட்டத்தின் மூலம், 15 வயதுக்கு மேற்பட்ட முற்றிலும் எழுத மற்றும் படிக்க தெரியாதவர்களை கண்டுபிடித்து, அவர்களுக்கு அடிப்படை எழுத்தறிவு மற்றும் எண்ணறிவு கல்வி வழங்கிடும் நோக்கிலும், மாநிலத்தின் எழுத்தறிவு சதவீதத்தில் குறிப்பிடத்தக்க முன்னேற்றத்தை உருவாக்கும் வகையிலும், புதிய வயது வந்தோர் கல்வித் திட்டம் தமிழகத்தில் உள்ள, அனைத்து மாவட்டங்களிலும் சிறப்பாக செயல்படுத்தப்பட உள்ளது. இதையொட்டி, நாமக்கல் மாவட்டத்தில் ஏற்கனவே எடுக்கப்பட்ட கணக்கெடுப்பின்படி, மொத்தம் 15 ஆயிரத்து 290 பேர் கல்வி கற்காதவர்கள் இருக்கிறார்கள் என கண்டறியப்பட்டுள்ளனர். கல்வி அறிவு இல்லாதவர்களே இல்லை என்ற நிலையை உருவாக்க மத்திய மாநில அரசுகள் நடவடிக்கை எடுத்து வருகிறது. அவர்கள் அனைவருக்கும் அடிப்படை எழுத்தறிவு மற்றும் எண்ணறிவு கல்வியை கற்பிக்க, மாவட்டம் முழுவதும் 872 தன்னார்வலர்கள் நியமிக்கப்பட்டு உள்ளனர்.

அவர்களுக்கு வட்டார அளவில் பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது. அதற்கான பயிற்சி மையம், நேற்று துவங்கப்பட்டது. நாமக்கல் மாவட்டம், கொல்லிமலை ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளி, சேலுடையாப்பட்டியில் பயிற்சி மையம் தொடங்கப்பட்டது. நிகழ்ச்சியில் பள்ளித் தலைமையாசிரியர் சதாசிவம் வரேவேற்றார். நாமக்கல் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் மகேஸ்வரி தலைமை வகித்து, பயிற்சி மையத்தை துவக்கி வைத்து பேசும்போது, இந்த மையத்துக்கு, இப்பகுதியில் உள்ள கல்வி கற்காதவர்கள் அனைவரும் தினமும் தவறாமல் வருகை தந்து அடிப்படை கல்வியைக் கற்றுக்கொள்ள வேண்டும். குறிப்பாக பெண்கள் இத்திட்டத்தை முழுமையாக பயன்படுத்திக் கொள்ள வேண்டும். அடிப்படை கல்வியை கற்பதன் மூலம் அனைவரும் சமூகத்திலும், பொருளாதாரத்திலும் முன்னேற்றம் அடையலாம் என்று நாமக்கல் மாவட்ட கல்வித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

மாவட்ட கல்வித்துறை ஆய்வாளர் கிருஷ்ணமூர்த்தி, ஆசிரியர்கள் உள்பட பலர் நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர். நாமக்கல் மாவட்டத்தில் உள்ள, அனைத்து வட்டாரங்களில், அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் புதிய பாரத எழுத்தறிவு திட்டத்தின் கீழ், 872 பயிற்சி மையங்கள் துவங்கப்பட்டுள்ளன. 15 வயதுக்கு மேற்பட்ட முற்றிலும் எழுத படிக்க தெரியாதவர்கள் யாரும் இருந்தால், அந்தந்த பகுதியில் உள்ள துவக்கப்பள்ளி அல்லது நடுநிலைப்பள்ளி தலைமையாசிரியர்களை தொடர்பு கொண்டு மையத்தில் சேர்ந்து பயன்பெறலாம் எனவும் கல்வித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

Updated On: 17 Dec 2022 8:16 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    பொங்கல் பொன்னாளில் வாழ்த்து சொல்வோமா..?
  2. வீடியோ
    என்னோட இரண்டாவது படம் ஆதி கூட கொஞ்சும் தமிழில் பேசிய Heroine...
  3. ஆன்மீகம்
    சரஸ்வதி பூஜை: அறிவின் தெய்வத்தை வணங்கும் புனித நாள்
  4. வீடியோ
    பெத்தப் பிள்ளைய பாதுகாக்க வக்கில்ல ! #veeralakshmi #savukkushankar...
  5. கோவை மாநகர்
    கோவை அருகே நச்சுப் புகையை வெளியேற்றிய தார் தொழிற்சாலை செயல்பட தடை
  6. லைஃப்ஸ்டைல்
    மணமக்களுக்கு அன்பு நிறைந்த இல்லற வாழ்க்கைக்கான வாழ்த்துகள்
  7. கோவை மாநகர்
    கோவை சிறையில், சவுக்கு சங்கரை பேட்டி எடுத்த யூடியூபர் பெலிக்ஸ்...
  8. லைஃப்ஸ்டைல்
    வாழ்க்கை வானில் பறக்க காத்திருக்கும் ஜோடிகளுக்கு வாழ்த்துகள்..!
  9. வீடியோ
    நாங்கள் காத்துகொண்டு இருக்கிறோம் ! #annamalai #annamalaibjp ...
  10. லைஃப்ஸ்டைல்
    அன்பும், இன்பமும் நிறைந்த இல்லற வாழ்வுக்கான நல்வாழ்த்துக்கள்