கோவை அருகே நச்சுப் புகையை வெளியேற்றிய தார் தொழிற்சாலை செயல்பட தடை

கோவை அருகே நச்சுப் புகையை வெளியேற்றிய தார் தொழிற்சாலை செயல்பட தடை
X

கோவை அருகே செயல்பட தடை விதிக்கப்பட்ட தார் தொழிற்சாலை.

தொழிற்சாலையில் இருந்து வெளியேறும் நச்சுப் புகையால் சுற்றுச்சூழல் பாதிக்கப்படுவதாக விவசாயிகள் புகார் அளித்தனர்.

கோவை மாவட்டம் மதுக்கரை வட்டத்துக்கு உட்பட்ட மலுமிச்சம்பட்டியில் உள்ள தார் தொழிற்சாலையில் இருந்து வெளியேறும் நச்சுப் புகையால் சுற்றுச்சூழல் பாதிக்கப்படுவதாகவும், சம்பந்தப்பட்ட தொழிற்சாலை மீது நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் எனவும் விவசாயிகள் புகார் தெரிவித்தனர்.

இது தொடர்பாக நடவடிக்கை மேற்கொண்ட மாசு கட்டுப்பாட்டு வாரியம் சம்பந்தப்பட்ட தொழிற்சாலையை மூட உத்தரவிட்டது. இதை தொடர்ந்து தொழிற்சாலையை மூடிய தனியார் நிர்வாகம் அதற்கு அருகில் மின்வாரியம், மாசு கட்டுப்பாடு அனுமதி பெறாமல் ஜெனரேட்டர் உதவியுடன் மற்றொரு தொழிற்சாலையை நடத்தி வருவதாக கூறப்படுகிறது. இந்த தொழிற்சாலையில் இருந்து வெளியேறும் நச்சுப் புகையால் அப்பகுதியினர் அவதிக்கு உள்ளாகி வருகின்றனர்.

இது தொடர்பாக சென்னை மாசு கட்டுப்பாட்டு வாரியத்திற்கு ஜாதி, மத கட்சி சார்பற்ற விவசாயிகள் சங்கத்தினர் மாநில பொதுச் செயலாளர் கந்தசாமி புகார் மனு அனுப்பியிருந்தார். இதையடுத்து சம்பந்தப்பட்ட தொழிற்சாலை இயங்க தடை விதிக்க உத்தரவிட்டும், உடனடியாக அந்த தொழிற்சாலையை மீது நடவடிக்கை மேற்கொள்ளுமாறும் கோவை மாவட்ட ஆட்சியர் கிராந்திகுமார் பாடிக்கு மாசு கட்டுப்பாட்டு வாரியம் பரிந்துரை செய்தது.

இதனை தொடர்ந்து மாவட்ட நிர்வாகம் சார்பில் வருவாய் கோட்டாட்சியர், கோவை தெற்கு மதுக்கரை வட்டாட்சியர், மாவட்ட சுற்றுச் சூழல் பொறியாளர் உள்ளிட்டோருக்கு சுற்றறிக்கை அனுப்பப்பட்டு உள்ளது. அதில் மலுமிச்சம்பட்டியில் இயங்கும் தார் தொழிற் சாலைக்கு தடை விதித்து மாசு கட்டுப்பாட்டு வாரியம் ஆணையிட்டு உள்ளது. இந்த ஆணையின் மீது நடவடிக்கை மேற்கொண்டு அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.

Tags

Next Story
இன்ஸ்டாகிராம் முடக்கம் !!! பயனர்கள் அதிர்ச்சி !! அதிகரிக்கின்றது புகார்கள் !!! | why does instagram hang up by itself