/* */

நாமக்கல் மாவட்டத்தில் பிளஸ் 2 மாணவர்களிடம் சிக்கியது மைக்ரோ பிட்

நாமக்கல் மாவட்டத்தில் பிளஸ் 2 மாணவர்களிடம் மைக்ரோ பிட் சிக்கியது தொடர்பாக ஜெராக்ஸ் கடைகளுக்கு எச்சரிக்கை விடுத்தனர்.

HIGHLIGHTS

நாமக்கல் மாவட்டத்தில் பிளஸ் 2 மாணவர்களிடம் சிக்கியது  மைக்ரோ பிட்
X

பைல் படம்

நாமக்கல் மாவட்டத்தில் அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் உள்ள, 200 மையங்களில் பிளஸ் 2 தேர்வு கடந்த 5-ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. பிளஸ் 1 தேர்வு கடந்த 10-ஆம் தேதி முதல் நடைபெற்று வருகிறது. கொல்லிமலை வாழவந்தி நாடு ஜி.டி.ஆர். உண்டு உறைவிட மேல்நிலைப் பள்ளியில் அப்பகுதியில் உள்ள பழங்குடியின மாணவ, மாணவிகள் தேர்வு எழுதி வருகின்றனர்.

இந்த நிலையில் சென்னை அரசு தேர்வுகள் இணை இயக்குனர்( மேல்நிலைக் கல்வி) பொன்.குமார் நேற்று திங்கட்கிழமை கொல்லிமலைக்கு ஆய்வுப் பணிக்காகச் சென்றார். அப்போது வாழவந்தி நாட்டிலுள்ள ஒரு ஜெராக்ஸ் கடையில் மாணவர்கள் கூட்டமாக நின்றுகொண்டிருந்தனர். அங்கு சென்று பார்த்தபோது பாட நோட்ஸ்களில் இருந்து விடைகளை மைக்ரோ பிட் என்னும் மிகச்சிறிய அளவில், மாணவர்களுக்காக ஜெராக்ஸ் எடுத்துக் கொண்டிருந்தனர். உடனடியாக கடையில் இருந்த விடைத்தாள்களை இணை இயக்குனர் பறிமுதல் செய்து. ஜெராக்ஸ் கடை உரிமையாளருக்கு எச்சரிக்கை விடுத்தார்.

மேலும், மாணவ மாணவிகளிடம் இருந்து கத்தை கத்தையாக பிட் வைப்பதற்கான மைக்ரோ ஜெராக்ஸ் விடைகளையும் அவர் பறிமுதல் செய்தார். மாணவர்களின் நலன் கருதி இன்று செவ்வாய்க்கிழமை காலை 9.30 மணி முதல் அனைத்து தேர்வு மையங்களிலும், தேர்வுக்கு முன்னதாகவே மாணவர்களை சோதனை செய்து, அவர்களிடம் இருந்த விடைக்கான பிட் காகிதங்கள் பறிமுதல் செய்யப்பட்டன. கொல்லிமலை மட்டுமல்லாது, குமாரபாளையம், பள்ளிபாளையம் பகுதிகளில் உள்ள ஜெராக்ஸ் கடை களில் பொதுத்தேர்வுக்கான பிட் தயாரித்துக் கொடுக்கப்பட்டு வருவது தெரியவந்துள்ளது. இதனால் மாவட்டம் முழுவதும் அரசுத் தேர்வுக்கான பறக்கும் படையினர் தேர்வு தொடங்குவதற்கு முன்பாக மையங்களுக்கு வரும் மாணவ மாணவிகளிடம் தீவிர சோதனை நடத்தினர்.

Updated On: 17 May 2022 11:15 AM GMT

Related News

Latest News

  1. அரசியல்
    மோடியை பார்த்து நடுங்கும் சீனா, செய்யும் குழப்பங்கள்..!?
  2. மேலூர்
    மதுரை,சுபிக்சம் மருத்துவமனையில், மருத்துவ விழிப்புணர்வு முகாம்..!
  3. மேலூர்
    மதுரை கோயில்களில் பஞ்சமி வராகியம்மன் சிறப்பு பூஜை..!
  4. தேனி
    முல்லைப்பெரியாறு அணையில் 152 அடி தண்ணீர் தேக்கினால் மட்டுமே....??
  5. லைஃப்ஸ்டைல்
    முதல்ல குழந்தை மனசை புரிஞ்சிக்குங்க..! குழந்தை வளர்ப்பு டிப்ஸ்..!
  6. வீடியோ
    சினிமாவ மொத்தமா அழிச்சிட்டானுங்க || பா.ரஞ்சித் மேல் சீரிய...
  7. இந்தியா
    தண்ணீர் சேமிப்பிற்காக சர்வதேச விருது பெற்ற இந்திய பெண் கர்விதா...
  8. லைஃப்ஸ்டைல்
    பொருளாதாரமே வாழ்க்கை அல்ல... பொருளாதாரம் இல்லாமலும் வாழ்க்கை இல்லை
  9. சோழவந்தான்
    கொண்டையம்பட்டி தில்லை சிவ காளியம்மன் கோவில் வளையல் உற்சவ திருவிழா
  10. ஈரோடு
    ஈரோட்டில் புகையிலை பொருட்களை விற்பனைக்கு வைத்திருந்த 3 கடைகளுக்கு...