தண்ணீர் சேமிப்பிற்காக சர்வதேச விருது பெற்ற இந்திய பெண் கர்விதா குலாட்டி

தண்ணீர் சேமிப்பிற்காக சர்வதேச விருது பெற்ற இந்திய பெண் கர்விதா குலாட்டி

தண்ணீர் சேமிப்பிற்காக சர்வதேச விருது பெற்ற கர்விதா குலாட்டி.

தண்ணீர் சேமிப்பிற்காக சர்வதேச விருது பெற்று உள்ளார் இந்திய பெண் கர்விதா குலாட்டி.

மூன்றாம் உலக போர் என ஒன்று வந்தால் தண்ணீருக்காக தான் இருக்கும் என்கிறார்கள், தண்ணீரின் எதிர்கால தேவையை கருத்தில் கொண்டுள்ள வல்லுனர்கள். மாறி வரும் பருவநிலை, துருவ பகுதிகளின் உருக்கம், ஓசோன் படலத்தில் ஏற்பட்டுள்ள ஓட்டை மற்றும் வாகன புகையினால் ஏற்படும் மாசு போன்றவற்றின் காரணமாக மழை பொழிவு குறைந்து வருவதோடு, நிலத்தடி நீராதரமும் நாளுக்கு நாள் குறைந்து கொண்டே போகிறது.

ஆனாலும் தண்ணீரின் தேவையை நாம் புரிந்து கொள்ளாமல் உணவகங்களிலும், வீடுகளிலும், பொது இடங்களிலும் வீணாக்கி வருகிறோம். ஆப்பிரிக்காவின் ஒரு நகரில் அங்குள்ள மாநகராட்சி நிர்வாகம் மக்களுக்கு தண்ணீர் கொடுக்க முடியாது என அறிவித்து விட்டது. அந்த அளவிற்கு தண்ணீரின் தேவை இன்றியமையாததாகி வருகிறது.

தண்ணீரின் தேவையை இந்தியா முழுவதும் உணர்த்தி வந்தவர் ராஜஸ்தான் மாநிலத்தின் ராஜேந்திர சிங். இவரை தண்ணீர் மனிதன் அதாவது வாட்டர் மேன் என கூறுவார்கள். இவர் இந்தியா முழுவதும் சுற்றுப்பயணம் செய்து தண்ணீர் சேமிப்பின் அவசியத்தை வலியுறுத்தி வருகிறார்.


இவருக்கு போட்டியாக வந்து விட்டார் வாட்டர் உமன். அதாவது இந்தியாவின் தண்ணீர் பெண்.கர்விதா குலாட்டி என்ற பெயருடைய இவரை இந்தியாவின் தண்ணீர் பெண் என்கிறார்கள்.

பொதுவான விஷயங்கள் குறித்து பேசும் நாம் சில இடங்களில் வீணாகும் சில பொருட்கள் குறித்து கவனத்தில் கொள்வதே இல்லை. அப்படித்தான் உணவகங்களில் வாடிக்கையாளர்கள் வருகையும், பருகாமல் பாட்டில்களிலும் விட்டுச் செல்லும் தண்ணீர். அதை அடுத்தவர் பயன்படுத்த முடியாது என்பதால் வீணாகத்தான் ஊற்றப்படுகிறது.

கர்விதா தனது ஒய் வேஸ்ட்? என்ற அமைப்பின் க்ளாஸ் ஆஃப் ஃபுல் முயற்சியால் நாடெங்கும் 5 லட்சத்துக்கும் மேற்பட்ட உணவகங்களில் ஒரு கோடி லிட்டர் குடிநீர் வீணாவதை தடுத்து இருக்கிறார். தேவையான அளவு மட்டும் குடிநீரை பயன்படுத்தும் படி வாடிக்கையாளர்களிடமும் உணவக உரிமையாளர்களிடமும் விழிப்புணர்வை ஏற்படுத்துகிறார்.

22 வயதுடைய கருவிதாவின் சொந்த ஊர் பெங்களூர். பிடெக் படித்துள்ளார். இந்த விழிப்புணர்வு அமைப்பை தொடங்கிய போது அவருக்கு வயது 15 ஒருமுறை ஆமதாபாத்தில் ஒரு தெருவோர சிறுமி தனது கவனத்தை ஈர்க்கும் வகையில் கை காட்டியதை அவள் ஏதோ பிச்சை கேட்கிறாள் என்று நினைத்தேன். ஆனால் அவளோ என் கையில் பாதி காலியாக இருந்த தண்ணீர் பாட்டிலை காட்டி கேட்டாள் அது என்னை உலுக்கியது.இது தான் நான் இந்த அமைப்பை தொடங்குவதற்கு ஒரு ஸ்பார்க் அமைந்தது என்கிறார் கர்விதா.

நாம் உணவகங்களில் விட்டு வரும் வீணாகும் தண்ணீர் எத்தனையோ பேர் தாரம் தீர்க்கும் என்று உணர்ந்தேன் என்கிறார் கர்விதா. ஆரம்பத்தில் இவரது முயற்சிக்கு ஒத்துழைப்பு கிடைத்ததா என்றால் இல்லை என்று தான் கூறுகிறார். ஒரு டீன் ஏஜ் பெண்ணின் அறிவுரையை கேட்பதாவது ஒன்று சில உணவக உரிமையாளர்கள் ஆரம்பத்தில் யோசித்தார்கள். பின்னர் எனது நல்லெண்ணம் புரிந்து ஒத்துழைத்தார்கள் என்கிறார் கர்விதா.


பெப்சி நிறுவனத்தின் முன்னாள் தலைமை செயல அதிகாரி இந்திரா நூயியையும், ஆப்பிள் நிறுவனத்தின் முன்னாள் தலைமை செயல் அதிகாரி ஸ்டீல் ஜாப்சையும் தான் இவர் தனக்கு முன்மாதிரியாக கருதுகிறார். இவரது அமைப்பு ஒய் வேஸ்ட் செயலியையும் அறிமுகம் செய்திருக்கிறது. இந்த செயலியின் மூலம் தான் ஒருவர் தான் தினசரி பயன்படுத்தும் தண்ணீரின் அளவை அறிய முடியும் 100 லிட்டர் வரை தண்ணீரை மிச்சப்படுத்த முடியும் என்கிறார் கர்விதா.

தனது தண்ணீர் சிக்கன முயற்சிகளுக்காக இங்கிலாந்தின் புகழ்பெற்ற டயானா விருது உள்பட பல சர்வதேச விருதுகளை பெற்றிருக்கிறார் கர்விதா. நாம் நமது யோசனை, திட்டத்தை நம்ப வேண்டும்,நேசிக்க வேண்டும்.அப்படி செய்தால் படிப்படியாக நேரம் வரும்போது நாம் நினைப்பது நடக்கும் என்று கூறுகிறார் கர்விதா குலாட்டி.

Tags

Next Story