பொருளாதாரமே வாழ்க்கை அல்ல... பொருளாதாரம் இல்லாமலும் வாழ்க்கை இல்லை

பொருளாதாரமே வாழ்க்கை அல்ல... பொருளாதாரம் இல்லாமலும் வாழ்க்கை இல்லை
பொருளாதாரமே வாழ்க்கை அல்ல... பொருளாதாரம் இல்லாமலும் வாழ்க்கை இல்லை எப்படி என்பதை இந்த கட்டுரையில் பார்க்கலாம்.

பொருளாதாரமே வாழ்க்கை அல்ல... பொருளாதாரம் இல்லாமலும் வாழ்க்கை இல்லை என்பது ஒரு ஆங்கில பழமொழி. இது வெறும் பழ மொழி மட்டும் அல்ல. மனித வாழ்வின் எதார்த்தமும் ஆகும். ஆக பொருளாதாரம்தான் சமூகத்தில் ஒரு மனிதனின் அந்தஸ்தை நிர்ணயிக்கிறது. பொருளாதாரம் என்றால் பணம் இருந்தால் பொருளாதார நிலை உயர்ந்து விடுகிறது. இந்த பொருளாதாரத்தை சமநிலையில் வைத்துக் கொள்வது அதாவது பணப்புழக்கத்தை தட்டுப்பாடு இன்றி வைத்துக் கொள்வது எப்படி என்பது அது ஒரு தனி கலை ஆகும்.


தற்போது நம்மிடம் உள்ள மோசமான பழக்கம் அவசியமற்ற பொருட்களை வாங்கி குவிப்பது. அதிலும் ஆன்லைன் ஷாப்பிங். பொருட்கள் வாங்கும் ஆசையை தூண்டும் இந்த பழக்கத்தை உடைக்க அத்தியாவசியமற்ற பொருள்களை வாங்காமல் இருக்க ஒரு புத்தி உள்ளது.

அதாவது ஒரு பொருளை வாங்குவதை குறைந்தபட்சம் 24 மணி நேரத்துக்கு தள்ளி போட்டு அந்த பொருள் உண்மையிலேயே அவசியமா அல்லது வெறும் ஆசையா என்று உங்களை நீங்களே கேட்டுக் கொள்ளுங்கள். அதன் பிறகு முடிவெடுங்கள் பிறரை பார்த்து தகுதிக்கு மீறி செலவு செய்யும் வலையில் விழுந்து கடன் நிதி நெருக்கடிக்கு சிலர் உள்ளார்கள். இந்த நிலையை தவிர்க்க நமது வசதிக்குள் வாழ்வதும் அத்தியாவசிய தேவைகளுக்கு முன்னுரிமை கொடுப்பது முக்கியம்.

உங்கள் வருமானம் மற்றும் செலவுகளின் அடிப்படையில் ஒரு யதார்த்தமான பட்ஜெட்டை உருவாக்குங்கள். உங்களின் விருப்பமான செலவுகளுக்கு முன் வீட்டு வசதி, பயன்பாடுகள் மற்றும் மளிகை பொருட்கள் போன்ற அத்தியாவசிய பொருட்களுக்கு நிதி ஒதுக்குவதை உறுதி செய்யுங்கள். அத்தியாவசியமற்ற செலவுகளை குறைத்து வருமானத்தை அதிகரிப்பதற்கான வழிகளை தேட வேண்டும். எதிர்காலத்துக்கு பணத்தை சேமிப்பதை பல தேவையில்லாததாக நினைக்கிறார்கள். ஆனால் சேமிக்க தவறினால் அவசரநிலை மற்றும் எதிர்காலச் செலவுகளுக்கு தயாராக இல்லாமல் போகலாம்.

சேமிப்புக்கு முன்னுரிமை கொடுப்பதன் மூலம் எதிர்பாராத செலவுகளால் ஏற்படும் திடீர் தடுமாற்றத்தை தவிர்க்கலாம். சிறிய அளவில் தொடங்கி சேமிப்பு அளவை உயர்த்தி கொண்டே போவது நிம்மதியான எதிர்காலத்துக்கு அடித்தளமாக அமையும். பெரும்பாலோர் சினிமா ,அரட்டை போன்ற பொழுதுபோக்கு விஷயங்களில் காட்டும் ஆர்வத்தை நிதி தொடர்பான அறிவை வளர்த்துக் கொள்வதில் காட்டுவதில்லை. அதை ஒரு கசப்பான விஷயமாக கருதுகிறார்கள்.


உண்மையில் நிதி அறிவை வளர்த்துக் கொள்வது தேவையற்ற பண இழப்பை குறைக்க வழி கூறும். எதிர்கால திட்டமிடுதலுக்கு உதவும். புத்தகங்கள், ஆன்லைன் மூலம் நமது நிதி அறிவை வளர்த்துக் கொள்ளலாம் தகுதி வாய்ந்த நிதி ஆலோசகர் அல்லது வழிகாட்டி ஆலோசனைகளையும் பெறலாம். சேமிப்பை தொடங்குவது முதலீட்டை மேற்கொள்வது போன்றவற்றை தள்ளி போடுவது பலரது வழக்கம். இது நமது நிதி ஆரோக்கியத்திற்கு தீங்கு விளைவிக்கும்.

ஓய்வு கால திட்டமிடல் மற்றும் உங்களின் இதர இலக்குகளை அடைய விடாமல் தடுக்கும் தெளிவான நிதி இலக்கு கலை நிர்ணயிப்பதன் மூலமும் அவற்றை அடைவதற்கான உத்தியை உருவாக்குவதன் மூலமும் பண சிக்கல் இல்லாத வருங்காலத்தை உறுதிப்படுத்தலாம்.

மொத்தத்தில் இளைஞர்களாக இருக்கும்போது நிதி மேலாண்மையை கையாள கற்றுக்கொண்டால் முதுமையில் பொருளாதார சிக்கல் இன்றி மகிழ்ச்சியாக வாழலாம்.

Tags

Next Story