/* */

ஒஸக்கோட்டை ஸ்ரீ சவுடேஸ்வரி அம்மன் கோயிலில் வீர குமாரரர்கள் கத்தி போட்டு சாமி வழிபாடு

ஸ்ரீ சவுடேஸ்வரி அம்மன் கோயிலில் தை அமாவாசையை முன்னிட்டு வீர குமாரர்கள் கத்திப்போட்டு சாமியை வழிபட்டனர்.

HIGHLIGHTS

ஒஸக்கோட்டை ஸ்ரீ சவுடேஸ்வரி அம்மன் கோயிலில் வீர குமாரரர்கள் கத்தி போட்டு சாமி வழிபாடு
X

ஸ்ரீ சவுடேஸ்வரி அம்மன்கோயிலில் நடைபெற்ற தை அமாவாசை விழாவில், வீர குமாரர்கள் கத்தி போட்டு சாமியை வழிபட்டனர்.

நாமக்கல் மாவட்டம் என்.புதுக்கோட்டை அருகில் உள்ள ஒஸக்கோட்டையில் தேவாங்கர் சமூகத்தின் குல தெய்வதமான ஸ்ரீ சவுடேஸ்வரி அம்மன் திருக்கோயில் உள்ளது. இந்த கோயிலில் தை அமாவாசையை முன்னிட்டு தொட்டு அப்ப திருவிழா சிறப்பாக நடைபெற்றது. கடந்த 29ம் தேதி கணபதி ஹோமத்துடன் விழா துவங்கியது. 30ம் தேதி காலை மகாசண்டி ஹோம பூஜை நடைபெற்றது. ஐஏஎஸ் அதிகாரி ராஜேந்திரன், இளவேணி ஆகியோர் நிகழ்ச்சியை துவக்கி வைத்தனர். சேலம் சிவராஜ் சாஸ்திரி மற்றும் மல்லி சாஸ்திரி குழுவினர் மகாசண்டி ஹோமத்தை நடத்தினார்கள். மாலை 6 மணிக்கு அம்மனுக்கு பண்டாரம் கட்டுதல் நிகழ்ச்சி நடைபெற்றது. இன்று காலை 6 மணிக்கு கணபதி பூஜையுடன் விழா துவங்கியது. 7 மணிக்கு கோமாதா பூஜையும், தொடர்ந்து சாமிக்கு மாங்கல்ய தாரணம் நிகழ்ச்சியும் நடைபெற்றது. 9 மணிக்கு திருமஞ்சனம் நடைபெற்றது.

காலை 10.15 மணிக்கு ஸ்ரீ சக்தி அழைப்பு நடைபெற்றது. பின்னர் நடைபெற்ற சாமுண்டி அழைப்பு பூஜையில் வீர குமாரர்கள் கத்திப்போட்டு கோயிலை வலம் வந்து சாமியை வழிபட்டனர். பின்னர் மகா ஜோதி அழைப்பு நடைபெற்றது. விழாவில் சாமுண்டி மற்றும் லிங்க பைரவி கோலாட்டக்குழுவின் கோலாட்ட நிகழ்ச்சி நடைபெற்றது. மாயா சிலம்பம் பவுண்டேசன் சார்பில் சிலம்பாட்டம் நடைபெற்றது. நாளை பிப்.1ம் தேதி வசந்த உற்சம் என்னும் மஞ்சள் நீர் மெரவனை நிகழ்ச்சி நடைபெறுகிறது. போலீஸ் கூடுதல் டிஜிபி ஜெயராம் மற்றும் லஷ்மி ஜெயராம் நிகழ்ச்சியை துவக்கி வைக்கின்றனர். முன்னதாக சேலம், கருங்கல்பட்டி, நாமக்கல், சிங்களாந்தபுரம், எலச்சிபாளையம், குமாரபாளையம், வேம்படிதாளம், பள்ளிபாளையம், பெருமாகவுண்டம்பட்டி பகுதிகளைச் சேர்ந்த வீர குமாரர்கள் நடைபயணமாக கோயிலுக்கு வந்தனர். அவர்களுக்கு சிறப்பான வரவேற்பு மற்றும் பாத பூஜை அளிக்கப்பட்டது. கோயில் நிர்வாக தர்மகர்த்தா பாபு என்கிற வெங்கடேசன் தலைமையில் விழாக்குழுவினர் பூஜைகளுக்கான ஏற்பாடுகளை செய்திருந்தனர்.

Updated On: 31 Jan 2022 11:00 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    காற்றுக்காதலனின் அணைப்பால், மேக காதலியின் ஆனந்தக்கண்ணீர், மழை..!
  2. நாமக்கல்
    10ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் நாமக்கல் குறிஞ்சி பள்ளி மாணவர்கள் சாதனை
  3. பொள்ளாச்சி
    பொள்ளாச்சியில் 8.400 கிலோ கஞ்சா பறிமுதல் ; தந்தை, மகன் கைது
  4. லைஃப்ஸ்டைல்
    மனமே உனக்கான நண்பனும் எதிரியும்..!
  5. மேட்டுப்பாளையம்
    கல்லாறு சோதனை சாவடியில் தலைமை செயலாளர் சிவதாஸ் மீனா, இ-பாஸ் ஆய்வு..!
  6. அருப்புக்கோட்டை
    காரியாபட்டியில், திமுக சார்பில் நீர் மோர் பந்தல் திறப்பு..!
  7. ஈரோடு
    ஈரோடு மாவட்டம் 10ம் வகுப்பில் 95.08 சதவீதம் தேர்ச்சி: மாநில அளவில்...
  8. பூந்தமல்லி
    திருவேற்காடு அருகே பூட்டி வைக்கப்பட்டிருந்த இரு சக்கர வாகனம் திருட்டு
  9. காஞ்சிபுரம்
    பேராசிரியர் ஆவது எனது விருப்பம் : அரசுப்பள்ளி மாணவன்...!
  10. காஞ்சிபுரம்
    பத்தாம் வகுப்பு அரசு பொதுத்தேர்வில் 29 பள்ளிகள் நூற்றுக்கு நூறு...