/* */

சேலம் வழியாக செல்லும் சில ரயில்களில் பயணிகள் பெட்டிகள் அதிகரிப்பு

சேலம் வழியாக செல்லும் சில ரயில்களில் பயணிகள் பெட்டிகள் அதிகரிக்கப்பட்டு இருப்பதாக மக்கள் தொடர்பு அதிகாரி தெரிவித்துள்ளார்.

HIGHLIGHTS

சேலம் வழியாக செல்லும் சில ரயில்களில் பயணிகள் பெட்டிகள் அதிகரிப்பு
X

சேலம் வழியாக செல்லும் ரயில்களில் கூடுதல் பெட்டிகள் இணைக்கப்பட உள்ளன. சில ரயில்கள் ரத்து செய்யப்படுகின்றன. இதுபற்றி தெரிந்து கொள்ள தொடர்ந்து பார்ப்போம்.

சென்னை எழும்பூரில் இருந்து மங்களூர் சென்ட்ரல் வரை செல்லும் ரயில் எண்.16159-ல் டிச. 26 முதல் ஒரு ஸ்லீப்பர் கிளாஸ் கோச் நிரந்தரமாக அதிகரிக்கப்படும். காரைக்கால் முதல் எர்ணாகுளம் வரை செல்லும் ரயில் எண்.16187-ல், வருகிற 25ம் தேதி முதல் நிரந்தரமாக ஒரு ஸ்லீப்பர் கிளாஸ் கோச் அதிகரிக்கப்படும். எர்ணாகுளம் முதல் காரைக்கால் வரை செல்லும் ரயில் எண்.16188-ல் வருகிற 26ம் தேதி முதல் நிரந்தரமாக ஒரு ஸ்லீப்பர் கிளாஸ் கோச் அதிகரிக்கப்படும். சென்னை சென்ட்ரல் முதல் கோவை வரை செல்லும் ரயில் எண்.16324, மங்களூர் சென்ட்ரல் - கோயம்புத்தூர் ரயில், மங்களூரு சென்ட்ரலில் இருந்து காலை 9 மணிக்குப் புறப்பட்டு, மாலை 7.55 மணிக்கு கோயம்புத்தூர் ரயில் நிலையம் வந்தடையும். இந்த ரயிலில் வருகிற 25ம் தேதி முதல் இரண்டாம் வகுப்பில் இரண்டு பொது பெட்டிகள் நிரந்தரமாக அதிகரிக்கப்படும். மறுமார்க்கமாக கோவையில் இருந்து மங்களூர் வரை செல்லும் ரயில் எண்.16323, கோவையில் இருந்து, காலை 7.50 மணிக்குப் புறப்பட்டு, மாலை 6.40 மணிக்கு மங்களூர் சென்றடையும். இந்த ரயிலில் வருகிற 26ம் தேதி முதல் இரண்டு பொது இரண்டாம் வகுப்புப் பெட்டிகள் நிரந்தரமாக அதிகரிக்கப்படும்.

ரயில் சேவைகள் ரத்து / பகுதி ரத்து

ரயில்வே பாலத்தின் இரும்பு கர்டர்களை (முகுந்தராயபுரம் - திருவலம் ரயில் நிலையங்களுக்கு இடையே வாலாஜா ரோடு - காட்பாடி சாலையில் அமைந்துள்ளது) மாற்றி பிஎஸ்சி கர்டர்கள் அமைக்க பொறியியல் பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளன. இந்தப் பணிகளைக் கருத்தில் கொண்டு, கீழே விவரிக்கப்பட்டுள்ளபடி சில ரயில்கள் பகுதி அளவிலும், சில முழுமையாகவும் ரத்து செய்யப்படும்.

ரயில் சேவைகள் ரத்து

வருகிற ஜன. 3ம் தேதி முதல் 4ம் தேதி வரை காலை 6.10 மணிக்கு சென்னை சென்ட்ரலில் இருந்து புறப்படும் ரயில் எண்.12675 சென்னை சென்ட்ரல் - கோயம்புத்தூர் (கோவை எக்ஸ்பிரஸ்) முழுமையாக ரத்து செய்யப்படும். ஜன. 3 மற்றும் 4ம் தேதி பகல் 3.15 மணிக்கு கோயம்புத்தூரில் இருந்து புறப்படும் ரயில் எண்.12676 கோயம்புத்தூர் - சென்னை சென்ட்ரல் (கோவை எக்ஸ்பிரஸ்) முழுமையாக ரத்து செய்யப்படும்.

ஜன.4ம் தேதி காலை 7.10 மணிக்கு சென்னை சென்ட்ரலில் இருந்து புறப்பட வேண்டிய ரயில் எண்.12243 சென்னை சென்ட்ரல் - கோயம்புத்தூர் சதாப்தி எக்ஸ்பிரஸ் முழுமையாக ரத்து செய்யப்படும். கோவையில் இருந்து சென்னை சென்ட்ரல் வரை செல்லும் ரயில் எண்.12244 சதாப்தி எக்ஸ்பிரஸ் வருகிற ஜன. 4ம் தேதி, மாலை 3.05 மணிக்கு கோவையில் இருந்து புறப்பட வேண்டியது ரத்து செய்யப்படுகிறது.

ரயில் சேவைகள் பகுதியளவு ரத்து

சேலம் - அரக்கோனம் இடையே செல்லும் ரயில் எண்.16088, வண்டி வருகிற 26, 27 மற்றும் ஜன. 3, 4 ஆகிய தேதிகளில், மாலை 3.30 மணிக்குப் புறப்பட வேண்டியது. இந்த ரயில் சேலத்தில் இருந்து காட்பாடி வரை மட்டும் இயக்கப்படும்.காட்பாடியில் இருந்து அரக்கோணம் வரை ஓடாது. இம்மாதம் 27, 28 மற்றும் ஜன. 4, 5, 6 தேதிகளில் , அரக்கோணத்தில் இருந்து காலை 5.15 மணிக்குப் புறப்பட வேண்டிய ரயில் எண்.16087, அரக்கோணத்தில் இருந்து, காட்பாடி வரை இயக்கப்படாது. இந்த ரயில் காட்பாடியில் இருந்து புறப்பட்டு சேலம் வரை சென்றடையும்.

இத்தகவலை, தெற்கு ரயில்வே சேலம் கோட்ட மக்கள் தொடர்பு அலுவலர் மரியா மைக்கேல் தெரிவித்துள்ளார்.

Updated On: 25 Dec 2022 4:32 AM GMT

Related News

Latest News

  1. உலகம்
    இன்னலுறும் நோயாளிகளுக்கு உதவும் செவிலியரை போற்றுவோம்..! நாளை செவிலியர்...
  2. வீடியோ
    🔴LIVE : பள்ளிக்கரணை ஆணவக்கொலை வழக்கு பற்றி மூத்த வழக்குரைஞர்...
  3. ஈரோடு
    ஈரோட்டில் பள்ளி வாகனங்களில் மாவட்ட ஆட்சியர் ஆய்வு
  4. நாமக்கல்
    நாமக்கல் காமராஜர் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி 10ம் வகுப்பு தேர்வில் 100...
  5. லைஃப்ஸ்டைல்
    ஒரு டம்ளர் தண்ணீர், ஒரு டீ ஸ்பூன் நெய் : உடம்பு குறைய இது
  6. நாமக்கல்
    மோகனூர், பரமத்தி பகுதிகளில் வளர்ச்சி திட்டப்பணிகள்: ஆட்சியர் ஆய்வு
  7. ஈரோடு
    பவானி பகுதியில் 15 கிலோ அழுகிய பழங்கள் பறிமுதல்
  8. நாமக்கல்
    நாமக்கல் தி மாடர்ன் அகாடமி பள்ளி 10ம் வகுப்பு தேர்வில் மாநில சாதனை
  9. ஈரோடு
    ஈரோட்டில் பள்ளி ஆசிரியையிடம் நகை பறித்த இருவர் கைது
  10. சோழவந்தான்
    மேலக்கால் கிராமத்தில் அடிக்கடி ஏற்படும் மின்தடையால் மக்கள் அவதி..!