/* */

நாமக்கல் காமராஜர் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி 10ம் வகுப்பு தேர்வில் 100 சதவீதம் தேர்ச்சி

Namakkal news- நாமக்கல் காமராஜர் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் 10ம் வகுப்பு பொதுத்தேர்வில் 100 சதவீதம் தேர்ச்சி பெற்ற சாதனை படைத்துள்ளனர்.

HIGHLIGHTS

நாமக்கல் காமராஜர் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி  10ம் வகுப்பு தேர்வில் 100 சதவீதம் தேர்ச்சி
X

Namakkal news- 10ம் வகுப்பு பொதுத்தேர்வில் சாதனை படைத்த, நாமக்கல் காமராஜர் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி மாணவர்களை பள்ளி தலைவர் நல்லதம்பி பாராட்டி பரிசு வழங்கினார்.

Namakkal news, Namakkal news today- நாமக்கல் காமராஜர் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் 10ம் வகுப்பு பொதுத்தேர்வில் 100 சதவீதம் தேர்ச்சி பெற்ற சாதனை படைத்துள்ளனர்.

நாமக்கல், சேலம் மெயின் ரோட்டில், பொம்மைக்குட்டைமேட்டில் காமராஜர் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி உள்ளது. இந்த பள்ளியில் கடந்த மார்ச், ஏப்ரல் மாதம் நடைபெற்ற 10ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதிய மாணவ மாணவிகள் அனைவரும் தேர்ச்சி பெற்று பள்ளி தொடர்ந்து 100 சதவீத தேர்ச்சியைப் பெற்றுள்ளது.

இப்பள்ளி மாணவர் நித்தின் ராகவ் 500க்கு 495 மதிப்பெண்கள் பெற்று பள்ளியில் முதலிடம் பெற்றுள்ளார். மாணவி தக்ஷிதா 494 மதிப்பெண்கள் பெற்று இரண்டாமிடம் பெற்றுள்ளார். மாணவிகள் பிரியா, கார்த்திகா, மாணவர் திருமலை பிரியன் ஆகிய மூவரும் 500க்கு 493 மதிப்பெண்கள் பெற்று மூன்றாமிடம் பெற்றுள்ளனர்.

இப்பள்ளி மாணவர்கள் 18 பேர் தமிழ் மற்றும் ஆங்கில பாடங்களில் 100க்கு 99 மதிப்பெண்கள் பெற்றுள்ளனர். கணிதப்பாடத்தில் 7 பேரும், அறிவியலில் 6 பேரும், சமூக அறிவியலில் 8 பேரும் 100க்கு 100 மதிப்பெண்கள் பெற்றுள்ளனர். அதிக மதிப்பெண்கள் பெற்று சாதனை படைத்த மாணவ மாணவிகளை பள்ளி தலைவர் நல்லதம்பி சால்வை அணிவித்து பரிசு வழங்கிப் பாராட்டினார்.

பள்ளியில் முதல் மூன்று இடங்களைப் பெற்று மாணவ மாணவிகளின் பெற்றோர்களும் கவுரவிக்கப்பட்டனர். பள்ளி இயக்குனர்கள் கனகராஜ், அல்லிமுதல், மகேஸ்வரன், முத்துராஜா, பேரரசு, ஜெயராமன், பள்ளி முதல்வர் சுதா காளியண்ணன் ஆகியோர் நிகழ்ச்சியில் கலந்துகொண்டனர்.

Updated On: 11 May 2024 11:30 AM GMT

Related News

Latest News

  1. இந்தியா
    அரசியல் அழுத்தத்தை எதிர்கொண்டதில்லை: இந்திய தலைமை நீதிபதி டிஒய்...
  2. தொழில்நுட்பம்
    நிலவில் இருந்து மாதிரிகளை எடுத்து திரும்பும் சீனாவின் விண்கலம்
  3. வீடியோ
    🔴LIVE : தென் சென்னை MP தமிழச்சி தங்கபாண்டியன் செய்தியாளர் சந்திப்பு...
  4. தமிழ்நாடு
    மதுரைக்கு வாங்க..! மத்தியான சாப்பாடு சாப்பிட்டு வரலாம்..!
  5. தமிழ்நாடு
    நாம் தமிழர் கட்சிக்கு தேர்தல் ஆணைய அங்கீகாரம்..!
  6. வீடியோ
    🔴LIVE : உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி செய்தியாளர்கள் சந்திப்பு ||...
  7. காஞ்சிபுரம்
    ஒன்றரை லட்சம் மரக்கன்றுகள் நடும் பணி: ஆட்சியர் துவக்கி வைப்பு
  8. சேலம்
    மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 286 கன அடி..!
  9. தமிழ்நாடு
    பெரியாறு அணை நாடகத்தை வீழ்த்திய கேரள மக்கள்..!
  10. இந்தியா
    லோக்சபா தேர்தலில் மத்திய அமைச்சர்களின் வெற்றி, தோல்வி: இதோ லிஸ்ட்..