பவானி பகுதியில் 15 கிலோ அழுகிய பழங்கள் பறிமுதல்

பவானி பகுதியில் 15 கிலோ அழுகிய பழங்கள் பறிமுதல்
X

Erode news- பவானி நகர் பகுதிகளில் உள்ள பழக்கடைகள் மற்றும் பழ குடோன்களில் ஆய்வு மேற்கொண்ட உணவு பாதுகாப்புத் துறை அதிகாரிகள் 


Erode news- ஈரோடு மாவட்டம் பவானியில் உணவுப் பாதுகாப்புத் துறை அதிகாரிகள் நடத்திய ஆய்வில் அழுகிய நிலையில் வைக்கப்பட்டிருந்த 15 கிலோ பழங்களைப் பறிமுதல் செய்து அழித்தனர்.

Erode news, Erode news today- பவானியில் உணவுப் பாதுகாப்புத் துறை அதிகாரிகள் நடத்திய ஆய்வில் அழுகிய நிலையில் வைக்கப்பட்டிருந்த 15 கிலோ பழங்களைப் பறிமுதல் செய்து அழித்தனர்.

ஈரோடு மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக கோடை வெயிலின் தாக்கம் அதிகம் இருப்பதாலும் பழங்கள் மற்றும் பழச்சாறுகளின் விற்பனை அதிகரித்துள்ளது. அவ்வாறு விற்பனை செய்யப்படும் பழங்களின் தரத்தை, மாவட்ட உணவு பாதுகாப்புத் துறை நியமன அலுவலர் டாக்டர் தங்க விக்னேஷ் உத்தரவின்பேரில் மாவட்டம் முழுவதும் உள்ள கடைகள் மற்றும் பழ குடோன்களில் உணவு பாதுகாப்புத் துறை அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர்.

அதன் ஒரு பகுதியாக, இன்று பவானி நகர உணவு பாதுகாப்பு அலுவலர் சதீஷ்குமார் மற்றும் பவானி வட்டார உணவு பாதுகாப்பு அலுவலர் லட்சுமி ஆகியோர் பவானி நகர் பகுதியில் உள்ள பழக்கடைகள் மற்றும் பழ குடோன்களில் ஆய்வு செய்தனர். இந்த ஆய்வின் போது, அழுகிய பழங்கள் ஜூஸ் தயாரிக்க பயன்படுத்தப்படுகிறதா என ஆய்வு செய்யப்பட்டது. தொடர்ந்து, அழுகிய பழங்கள் பயன்படுத்தக்கூடாது என அறிவுறுத்தப்பட்டது.

எட்டு கடைகள் ஆய்வு செய்யப்பட்டதில், இரண்டு கடைகளில் அழுகிய பழங்கள் சுமார் 15 கிலோ பறிமுதல் செய்யப்பட்டு அழிக்கப்பட்டது. தொடர்ந்து, செயற்கை முறையில் மாம்பழம் பழுக்க வைக்கப்படுகிறதா எனவும் ஆய்வு செய்யப்பட்டது. மேலும், தடை செய்யப்பட்ட பாலித்தீன் கவர்கள் பயன்படுத்தக்கூடாது எனவும் அறிவுறுத்தப்பட்டது.

Tags

Next Story
மனித நலன் முதல் வணிக வெற்றிவரை சிறப்பாக செயல்படும் AI!