/* */

நாமக்கல்லில் தனியார் பள்ளி, கல்லூரி பேருந்துகள் ஆய்வு; ஆட்சியர் அதிரடி

நாமக்கல் பகுதியில் உள்ள பள்ளி கல்லூரி பேருந்தகளை மாவட்ட ஆட்சியர் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

HIGHLIGHTS

நாமக்கல்லில் தனியார் பள்ளி, கல்லூரி பேருந்துகள் ஆய்வு; ஆட்சியர் அதிரடி
X

நாமக்கல்- சேலம் ரோட்டில் ஆய்வுக்காக நிறுத்தப்பட்டிருந்த தனியார் பள்ளி, கல்லூரி பேருந்துகள்.

தமிழகத்தில் வருகிற செப்.1ம் தேதி முதல் 9,10,11,12ம் வகுப்புகளுக்கு அரசு மற்றும் தனியார் பள்ளிகளையும், கல்லூரிகளையும் திறக்க தமிழக அரசு உ த்தரவிட்டுள்ளது. இதையொட்டி பள்ளி, கல்லூரி பேருந்துகள் முறையாகப் பராமரிப்பு செய்யப்பட்டுள்ளதா என்பது குறித்து ஆய்வு செய்ய நாமக்கல் வட்டார போக்குவரத்து துறை மூலம், நாமக்கல் சேலம் ரோட்டில் சிறப்பு முகாம் அமைக்கப்பட்டிருந்தது.

மாவட்ட கலெக்டர் ஸ்ரேயாசிங் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பள்ளி, கல்லூரி பஸ்களை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். மொத்தம் 130 பஸ்கள் ஆய்வு செய்யப்பட்டன.

நாமக்கல் சப் கலெக்டர் கோட்டைக்குமார், ஆர்டிஓக்கள் முருகன், முருகேசன், மோட்டார் வாகன ஆய்வாளர் சக்திவேல், உமாமகேஸ்வரி உள்ளிட்ட அதிகாரிகள் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பஸ்களை ஆய்வு செய்து சான்றிதழ் வழங்கினார்கள்.

கோட்ட தீயணைப்புத்துறை சார்பில் பஸ் டிரைவர்களுக்கு தீ பாதுகாப்பு விதிமுறைகள் குறித்த செயல்விளக்கம் காண்பிக்கப்பட்டது.

Updated On: 24 Aug 2021 1:00 PM GMT

Related News

Latest News

  1. வணிகம்
    எவரெஸ்ட், MDH மசாலாப் பொருட்களை நேபாளத்தில் விற்பனை செய்ய தடை
  2. நாமக்கல்
    கொல்லிமலையில் ஜவகர் சிறுவர் மன்ற கோடைகால கலை பயிற்சி
  3. தேனி
    நீர் நிலை அருகில் செல்ல வேண்டாம்: தேனி கலெக்டர் எச்சரிக்கை
  4. தென்காசி
    நெல்லை மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  5. லைஃப்ஸ்டைல்
    வேலைத்தள உத்வேகத்தை உயர்த்தும் 7 உத்திகள்
  6. தென்காசி
    தென்காசி மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  7. சினிமா
    கையில் கட்டுடன் வந்த ஐஸ்வர்யா ராய்க்கு கேன்ஸ்-ல் அன்பான வரவேற்பு
  8. பூந்தமல்லி
    விபத்தில் சிக்கி மருத்துவமனையில் அனுமதித்த பேரூராட்சி தலைவர்...
  9. ஆன்மீகம்
    Horoscope Today அனைத்து ராசிக்கான இன்றைய ராசிபலன்
  10. கலசப்பாக்கம்
    டெங்கு மலேரியாவை தடுக்க நிலவேம்பு குடிநீர் வழங்கல்