/* */

நாமக்கல் மண்டலத்தில் முட்டைக்கோழி விலை ரூ.5 உயர்வு: ஒரு கிலோ ரூ.66

நாமக்கல் மண்டலத்தில் முட்டைக்கோழி விலை ரூ.5 உயர்த்தப்பட்டு, ஒரு கிலோ ரூ.66 ஆக நிர்ணயம் செய்யப்பட்டது.

HIGHLIGHTS

நாமக்கல் மண்டலத்தில் முட்டைக்கோழி விலை ரூ.5 உயர்வு: ஒரு கிலோ ரூ.66
X

நாமக்கல்லில் நடைபெற்ற கோழிபண்ணையாளர்கள், வியாபாரிகள் ஆலோசனைக் கூட்டத்தில், மார்க்கெட்டிங் சொசைட்டித் தலைவர் வாங்கிலி சுப்பிரமணியம் பேசினார்.

நாமக்கல் மண்டலத்தில் கடந்த ஒரு மாதமாக, முட்டை விலை தொடர்ந்து சரிவு ஏற்பட்டு வருகிறது. கடந்த மாதம் ரூ.4.60ஆக விற்பனையாகி வந்த ஒரு முட்டையின் விலை தற்போது ரூ.3.70 ஆக என்இசிசி அறிவித்துள்ளது. வியாபாரிகளுக்கு ஒருமுட்டைக்கு 30 பைசா விலை குறைத்து விற்பனை செய்யலாம் என்று நெஸ்பாக் அமைப்பு அறிவித்துள்ளது. இதனால் பண்ணையாளர்களுக்கு ஒரு முட்டைக்கு ரூ.3.40 மட்டுமே கிடைக்கிறது.

முட்டை விலை சரிவால் கோழிப்பண்ணைத் தொழிலில் நாள்தோறும் கோடிக்கணக்கில் இழப்பு ஏற்பட்டு வருகிறது. இதனால் பல பண்ணையாளர்கள் பண்ணைகளை தொடர்ந்து நடத்த முடியாமல், கோழிகளை விற்பனை செய்ய முன் வருகின்றனர். இதை பயன்படுத்தி, கோழி வியாபாரிகள் பண்ணையாளர்களிடம் கோழி விலையை மிகவும் குறைத்து கொள்முதல் செய்கின்றனர். ஒரு கிலோ ரூ.100 வரை விற்பனை யான முட்டைக்கோழி விலை தற்போது ரூ.61 ஆக உள்ளது.

இந்த நிலையில் முட்டைக்கோழி விலையை நிர்ணயம் செய்வது சம்மந்தமான ஆலோசனைக் கூட்டணம், நாமக்கல்லில் முட்டைக்கோழிப் பண்ணையாளர்கள் மார்க்கெட்டிங் சொசைட்டி தலைவர் வாங்கிலி சுப்பிரமணியம் தலைமையில் நடைபெற்றது. திரளான கோழிப்பண்ணையாளர்கள் மற்றும் கோழி வியாபாரிகள் கூட்டத்தில் கலந்துகொண்டனர். கூட்டத்தில் உயிருடன் ஒரு கிலோ ரூ.61 ஆக இருந்த கறிக்கோழி விலையை ரூ.5 அதிகரித்து ரூ.66 ஆக நிர்ணயம் செய்யப்பட்டது. மேலும் பண்ணையில் பிடிக்கும் முட்டைக்கோழி விலை (லிப்டிக் ரேட்) அறிவிக்கப்பட்டது. அதன் விபரம்:

கோழிப்பண்ணையில் கறிக்கோழியின் எடை 1.600 கிலோவுக்கு மேல் இருந்தால் விலை ரூ.66, 1.500ல் இருந்து 1.599 வரை இருந்தால் லிப்டிங் விலையில் இருந்து ரூ. 1 குறைத்து வழங்கலாம். 1.450ல் இருந்த 1.499 வரை இருந்தால் ரூ.2 குறைத்து வழங்கலாம். 1.400ல் இருந்து 1.449 வரை இருந்தால் ரூ.3 குறைத்து வழங்கலாம். 1.350 முதல் 1.399 வரை எடை இருந்தால் ரூ.4 குறைத்து வியாபாரிகளுக்கு வழங்கலாம் என்ற முடிவுக்கு பண்ணையாளர்களும், வியாபாரிகளும் ஒப்புக்கொண்டனர். இந்த விலையில் இருந்து வியாபாரிகள் விலை குறைத்துக் கேட்டால் மார்க்கெட்டிங் சொசைட்டி தலைவர் வாங்கிலி சுப்பிரமணியத்தை 94433 40440 என்ற செல் போனில் தொடர்புகொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Updated On: 12 March 2022 10:00 AM GMT

Related News

Latest News

  1. பாளையங்கோட்டை
    நெல்லை மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  2. திருவண்ணாமலை
    கோடை கால இலவச தடகளப் பயிற்சி முகாம்
  3. ஆரணி
    போக்ஸோவில் 20 ஆண்டுகள் தண்டனை பெற்றவா் விடுதலை
  4. ஈரோடு
    திம்பம் மலைப்பாதையில் மினி சுற்றுலா வேன் கவிழ்ந்து விபத்து
  5. வந்தவாசி
    வந்தவாசியில் பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வில் தாயும் மகனும் பாஸ்
  6. ஈரோடு
    பவானியில் வாகன சோதனையில் 12 கிலோ கஞ்சா பறிமுதல்: 3 பேர் கைது
  7. செங்கம்
    வாழைத் தோட்டத்தை தாக்கி வரும் கரும் பூசண நோயை கட்டுப்படுத்துதல்...
  8. நாமக்கல்
    நாமக்கல் உழவர் சந்தையில் இன்றைய காய்கறி, பழங்கள் விலை நிலவரம்
  9. வந்தவாசி
    ஸ்ரீ ராமானுஜரின் 1007 வது திருநட்சத்திர உற்சவ விழா
  10. பொன்னேரி
    பொன்னேரி அருகே ஸ்ரீனிவாச பெருமாள் திருக்கல்யாண வைபோகம்