/* */

நாமக்கல் மாவட்டத்தில் கனமழை: மின்னல் தாக்கி கூரை வீடு தீக்கிரை

நாமக்கல் மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் இடியுடன் கனமழை பெய்தது. கருங்கல்பாளையத்தில் இடி தாக்கி, கூரை வீடு தீப்பிடித்து எரிந்து சேதமானது.

HIGHLIGHTS

நாமக்கல் மாவட்டத்தில் கனமழை: மின்னல் தாக்கி கூரை வீடு தீக்கிரை
X

கோப்பு படம்

நாமக்கல் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் கடந்த 3 நாட்களாக கடும் வெப்ப நிலவியது. எனினும், வியாழக்கிழமை இரவு இடியுடன் கூடிய மழை பெய்தது. சுமார் 1 மணி நேரத்திற்கு மேலாக பெய்த கனமழையால், தாழ்வான பகுதிகளில் மழைநீர் வெள்ளமாக பெருக்கெடுத்து ஓடியது.

புதுச்சத்திரம் அருகே உள்ள கருங்கல்பாளையம் பகுதியில், இடி மின்னல் அதிகமாக இருந்தது. கிருஷ்ணமூர்த்தி என்பவருக்கு சொந்தமான கூரை வீட்டில் மின்னல் தாக்கி, வீடு தீப்பற்றி எரிந்து சேதமானது. தகவல் கிடைத்ததும் நாமக்கல் தீயணைப்பு படையினர் விரைந்து சென்று தீயை அனைத்தனர்.

நாமக்கல், சேந்தமங்கலம், கொல்லிமலை, எருமப்பட்டி, வலையப்பட்டி, மோகனூர், பாலப்பட்டி, பரமத்தி வேலூர் உள்ளிட்ட அனைத்து பகுதிகளிலும் கனமழை பெய்ததால் வெப்ப தனித்து குளிர்ந்த காற்று வீசியது. பொதுமக்கள் நிம்மதியடைந்தனர். மழையைப் பயன்படுத்தி விவசாயிகள் கோடை உழவுப்பணியை துவக்கி யுள்ளனர்.

கடந்த 24 மணி நேரத்தில் நாமக்கல் மாவட்டத்தில் பதிவான மழையளவு விபரம்: எருமப்பட்டி 20 மி.மீ, குமாரபாளையம் 8மி.மீ, மங்களபுரம் 31 மி.மீ, நாமக்கல் 18 மி.மீ, நாமக்கல் கலெக்டர் ஆபீஸ் 15 மி.மீ, பரமத்திவேலூர் 38 மி.மீ, புதுச்சத்திரம் 47 மி.மீ, ராசிபுரம் 52.1 மி.மீ, சேந்தமங்கலம் 31 மி.மீ, திருச்செங்கோடு 6 மி.மீ, கொல்லிமலை 43 மி.மீ. மாவட்டத்தில் மொத்தம் 338.9 மி.மீ மழையளவு பதிவாகி உள்ளது.

Updated On: 2 July 2021 4:00 AM GMT

Related News

Latest News

  1. வணிகம்
    எவரெஸ்ட், MDH மசாலாப் பொருட்களை நேபாளத்தில் விற்பனை செய்ய தடை
  2. நாமக்கல்
    கொல்லிமலையில் ஜவகர் சிறுவர் மன்ற கோடைகால கலை பயிற்சி
  3. தேனி
    நீர் நிலை அருகில் செல்ல வேண்டாம்: தேனி கலெக்டர் எச்சரிக்கை
  4. தென்காசி
    நெல்லை மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  5. லைஃப்ஸ்டைல்
    வேலைத்தள உத்வேகத்தை உயர்த்தும் 7 உத்திகள்
  6. தென்காசி
    தென்காசி மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  7. சினிமா
    கையில் கட்டுடன் வந்த ஐஸ்வர்யா ராய்க்கு கேன்ஸ்-ல் அன்பான வரவேற்பு
  8. பூந்தமல்லி
    விபத்தில் சிக்கி மருத்துவமனையில் அனுமதித்த பேரூராட்சி தலைவர்...
  9. ஆன்மீகம்
    Horoscope Today அனைத்து ராசிக்கான இன்றைய ராசிபலன்
  10. கலசப்பாக்கம்
    டெங்கு மலேரியாவை தடுக்க நிலவேம்பு குடிநீர் வழங்கல்