/* */

நாமக்கல் கூட்டுறவு விற்பனை சங்கத்தில் ரூ. 13.75 லட்சம் மதிப்பில் பருத்தி ஏலம்

நாமக்கல் கூட்டுறவு விற்பனை சங்கத்தில் நடைபெற்ற ஏலத்தில், ரூ.13.75 லட்சம் மதிப்புள்ள பருத்தி விற்பனை செய்யப்பட்டது.

HIGHLIGHTS

நாமக்கல் கூட்டுறவு விற்பனை சங்கத்தில் ரூ. 13.75 லட்சம் மதிப்பில் பருத்தி ஏலம்
X

நாமக்கல் கூட்டுறவு விற்பனை சங்கத்தில், நடைபெற்ற ஏலத்திற்கு விவசாயிகள் விற்பனைக்கு கொண்டுவந்த பருத்தி மூட்டைகள்.

நாமக்கல், திருச்செங்கோடு ரோட்டில், நாமக்கல் வேளாண் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனை சங்கம் (என்சிஎம்எஸ்) உள்ளது. இந்த சங்கத்தில் வாரம் தோறும் செவ்வாய்க்கிழமை பருத்தி ஏலம் நடைபெறும். இந்த வாரம் நடைபெற்ற ஏலத்திற்கு நாமக்கல், மோகனூர், சேந்தமங்கலம், பேளுக்குறிச்சி, சிங்களாந்தபுரம், நாமகிரிப்பேட்டை, ராசிபுரம், புதுச்சத்திரம், வேலகவுண்டம்பட்டி, பரமத்தி உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த விவசாயிகள் தங்கள் தோட்டங்களில் விளைந்த பருத்தியை விற்பனைக்கு கொண்டுவந்திருந்தனர்.

நாமக்கல், திருச்செங்கோடு, கொங்கணாபுரம், ஈரோடு, அவிநாசி, கோவை, திண்டுக்கல், வேடசந்தூர் உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த வியாபாரிகள் நேரடி ஏலத்தில் கலந்துகொண்டு பருத்தியை கொள்முதல் செய்தனர். ஏலத்தில் ஆர்சிஎச் ரக பருத்தி குவிண்டால் ரூ. 6,290முதல், ரூ. 7,419 வரை விலை போனது. மட்ட ரக பருத்தி ரூ. 4,219முதல், ரூ. 5,609 வரை விலை போனது. ஏலத்தில் மொத்தம் 665 மூட்டை பருத்தி ரூ. 13.75 லட்சம் மதிப்பில் விற்பனை செய்யப்பட்டது.

Updated On: 28 Nov 2023 12:30 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    ஆழ்ந்த சுவாசம் என்பது... உங்களை நீங்களே உணரும் அற்புத சக்தி!
  2. ஆன்மீகம்
    வரும் 18ம் தேதி திருப்பதி ஏழுமலையான் தரிசனம்; அதிர்ஷ்ட வாய்ப்பை மிஸ்...
  3. லைஃப்ஸ்டைல்
    முகம் பளிச்சுன்னு அழகா இருக்கணுமா? தயிரை முகத்துக்கு பயன்படுத்துங்க!
  4. லைஃப்ஸ்டைல்
    ஆரோக்கியம் வேணுமா? இஞ்சி பூண்டு விழுதுடன் தேன் கலந்து சாப்பிடுங்க...!
  5. லைஃப்ஸ்டைல்
    அறுசுவையான மாப்பிள்ளை சம்பா சாம்பார் சாதம் செய்வது எப்படி?
  6. லைஃப்ஸ்டைல்
    சமையலை ருசியாக மாற்ற சில முக்கிய விஷயங்களை தெரிஞ்சுக்கலாமா?
  7. உலகம்
    ஆப்கானில் ஏற்பட்டதிடீர் வெள்ளம்! இறந்தவர்களின் எண்ணிக்கை 300க்கும்...
  8. லைஃப்ஸ்டைல்
    அரிசியில் பூச்சிகள், வண்டுகள் வராமல் தடுப்பது எப்படி?
  9. வணிகம்
    பாம் ஆயிலில் இருந்து சூரியகாந்தி எண்ணெய்க்கு மாறும் லேஸ் சிப்ஸ்..!
  10. குமாரபாளையம்
    குமாரபாளையத்தில் கர்ப்பிணி பெண்களுக்கான மனநல ஆலோசனை முகாம்