/* */

அரசு பஸ்களில் மீண்டும் டிக்கெட் வழங்கும் முறை அமல்

அரசு பஸ்களில் டிக்கெட் வழங்கும் இடிஎம் மெஷின் மாற்றம் செய்யப்பட்டு ,மீண்டும் பழைய முறையான டிக்கெட் வழங்கும் முறை அமல்.

HIGHLIGHTS

அரசு பஸ்களில் மீண்டும் டிக்கெட் வழங்கும் முறை அமல்
X

பைல் படம்.

கடந்த 2010ம் ஆண்டு அரசு பஸ் கண்டக்டர்களுக்கு, டிக்கெட் பிரின்ட் செய்து தரும் இடிஎம் மெஷின் என்ற கையடக்க டிக்கெட் வழங்கும் இயந்திரம் செயல்பாட்டுக்கு வந்தது. இதற்காக கண்டக்டர்களுக்கு பயிற்சியும் அளிக்கப்பட்டது. அரசு பஸ் கண்டக்டர்கள் டிக்கெட் மெஷினை பயன்படுத்தி, பயணிகளுக்கு உடனுக்குடன் டிக்கெட் வழங்கினர். இதில் நிர்வாக வசதி, மொத்த டிக்கெட் கூட்டுத் தொகை, பயண பட்டியல் பதிவு விபரங்களை எளிதாக தெரிந்து கொள்ள முடியும். இந்த மெஷின், கண்டக்டர்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருந்து வந்தது. அதிகாரிகள் தற்போது டிக்கெட் வழங்கும் மெஷின்களை தராமல், அதற்கு பதிலாக அச்சடிக்கப்பட்ட டிக்கெட் கட்டுகளை கொடுத்து பணிக்கு செல்லும்படி கட்டாயப்படுத்துகின்றனர்.

இதனால் வேறு வழியின்றி கண்டக்டர்கள் அச்சடிக்கப்பட்ட டிக்கெட்டுகளை எடுத்துக்கொண்டு அவசரமாக பணிக்கு செல்லும் நிலை ஏற்படுகிறது. இத்தகைய பழைய முறையில் பயணிகளுக்கு டிக்கெட் வழங்குவது மிகவும் சிரமமாகவும், வழங்கப்பட்ட டிக்கெட்டுகளை கணக்கெடுப்பதற்கும், டிக்கெட் வழங்குவதற்கும் காலதாமதம் ஆவதால் கண்டக்டர்கள் சிரமத்திற்குள்ளாகி வருகின்றனர். தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகத்தில் உள்ள பஸ்களோ, பணிமனைகளோ, டிக்கெட் மெஷின்களோ பழைய காலத்தை சேர்ந்தவை என்று சொல்லும் அளவுக்குத்தான் இன்றும் உள்ளது. எத்தனையோ தொழில்நுட்ப வளர்ச்சிகள் அடைந்தும் இதில் மாற்றமில்லாமல் உள்ளது. தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் நஷ்டமடைந்து வருவதற்கு டீசல் விலை உயர்வு மட்டுமே காரணம் கிடையாது. முறையான பராமரிப்பு, போதிய வசதிகளை அரசு செய்து தராதது, அதிகாரிகளின் பொறுப்பின்மை போன்றவைகளும் தான் அரசு போக்குவரத்து கழகம் நஷ்டம் அடைவதற்கு காரணம்.

நீண்ட தூரம் செல்லும் பஸ்களில் ஒரு சில பஸ் கண்டக்டர்கள் டிக்கெட் மெஷின் மற்றும் சாதாரண அச்சடிக்கப்பட்ட டிக்கெட் என இரண்டையுமே பயன்படுத்துகின்றனர். இவற்றில் நடக்கும் முறைகேடுகள் கணக்கில்லை. இது போக்குவரத்து கழகத்திற்கு இரட்டை செலவுதான். இது போன்ற செயல்களில் இருந்தே அரசு போக்குவரத்து கழக நிர்வாகத்தின் திறமை எவ்வாறு உள்ளது என்பதை நாம் உணர்ந்து கொள்ள முடியும். டிக்கெட் மெஷின்கள் கொள்முதல் செய்யப்பட்டு நீண்ட நாட்கள் ஆகிவிட்டதால், அடிக்கடி பழுதடைந்து விடுகின்றன. இதனை போக்குவரத்து துறை நிர்வாகம் முறையாக பராமரிக்க எந்தவிதமான நடவடிக்கையும் எடுக்கவில்லை. பழுதடைந்தால் நாங்களே தான் சரி செய்து கொள்ள வேண்டியுள்ளது.

தற்போது பழைய முறைப்படி டிக்கெட்டுகளை பயணிகளுக்கு வழங்குவது மற்றும் டிக்கெட்டுகளை கணக்கெடுப்பதற்கு மிகவும் சிரமாக உள்ளது. மேலும் சில கண்டக்டர்கள் டிக்கெட்டை கிழிக்க எச்சிலை உபயோகப்படுத்துகின்றனர். இதனால் பயணிகளுக்கு கொரோனா பரவும் அபாயம் உள்ளது. எனவே மீண்டும் டிக்கெட் மிஷின் வழங்கவேண்டும் என கண்டக்டர்கள் தெரிவிக்கின்றனர். இந்தியாவே தற்போது பேப்பர் இல்லாமல் அனைத்தையுமே ஆன்லைன் மூலம் அமல்படுத்திவருகிறது. தற்போது தமிழக சட்டசபையில் பேப்பர் இல்லாமல் கம்ப்யூட்டர் மூலம் பட்ஜெட் தாக்கப்பட்டது. இந்த நிலையில் அரசு பஸ் போக்குவரத்து கழகங்களில் மீண்டும் பழைய முறையை பயன்படுத்தி டிக்கெட் வழங்குவதை மாற்றி மீண்டும் பழையமுறையில், கண்டர்களுக்கு டிக்கட் வழங்கும் இயந்திரம் வழங்க வேண்டும் என அரச பஸ் கண்டக்டர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

Updated On: 27 Aug 2021 1:15 PM GMT

Related News

Latest News

  1. வணிகம்
    எவரெஸ்ட், MDH மசாலாப் பொருட்களை நேபாளத்தில் விற்பனை செய்ய தடை
  2. நாமக்கல்
    கொல்லிமலையில் ஜவகர் சிறுவர் மன்ற கோடைகால கலை பயிற்சி
  3. தேனி
    நீர் நிலை அருகில் செல்ல வேண்டாம்: தேனி கலெக்டர் எச்சரிக்கை
  4. தென்காசி
    நெல்லை மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  5. லைஃப்ஸ்டைல்
    வேலைத்தள உத்வேகத்தை உயர்த்தும் 7 உத்திகள்
  6. தென்காசி
    தென்காசி மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  7. சினிமா
    கையில் கட்டுடன் வந்த ஐஸ்வர்யா ராய்க்கு கேன்ஸ்-ல் அன்பான வரவேற்பு
  8. பூந்தமல்லி
    விபத்தில் சிக்கி மருத்துவமனையில் அனுமதித்த பேரூராட்சி தலைவர்...
  9. ஆன்மீகம்
    Horoscope Today அனைத்து ராசிக்கான இன்றைய ராசிபலன்
  10. கலசப்பாக்கம்
    டெங்கு மலேரியாவை தடுக்க நிலவேம்பு குடிநீர் வழங்கல்