/* */

மழை பாதிப்பு: விவசாயிகளுக்கு ரூ.85.50 லட்சம் வழங்கிய அமைச்சர் மதிவேந்தன்

நாமக்கல் மாவட்டத்தில் மழையால் பயிர்கள் சேதமடைந்த 916 விவசாயிகளுக்கு ரூ. 85.50 லட்சம் நிவாரண உதவியை, அமைச்சர் மதிவேந்தன் வழங்கினார்.

HIGHLIGHTS

மழை பாதிப்பு: விவசாயிகளுக்கு ரூ.85.50 லட்சம் வழங்கிய அமைச்சர் மதிவேந்தன்
X

நாமக்கல் மாவட்டத்தில், மழையால் பயிர்கள் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு நிவாரண உதவித்தொகையை அமைச்சர் மதிவேந்தன் வழங்கினார். அருகில் கலெக்டர் ஸ்ரேயாசிங், எம்.பிக்கள் ராஜேஷ்குமார், சின்ராஜ், எம்எல்ஏக்கள் ராமலிங்கம், பொன்னுசாமி ஆகியோர்.

கடந்த ஆண்டு, நாமக்கல் மாவட்டத்தில் பெய்த வடகிழக்கு பருவமழையால், 109.88 ஹெக்டேர் பரப்பில் பயிர் செய்யப்பட்ட, வேளாண் பயிர்களான நெல், சோளம், பருத்தி, மக்காச்சோளம், கரும்பு, உளுந்து, தென்னை மரம் போன்றவை சேதமடைந்தது. இதனால் 221 விவசாயிகள் பாதிக்கப்பட்டனர். இதேபோல் தோட்டக்கலை பயிர்களான வெங்காயம், மரவள்ளி, பப்பாளி, பல்லாண்டு பயிரான முருங்கை, கொடிவகை காய்கறிகள் மற்றும் பாக்கு மரம் என 599.6 ஹெக்டேர் பரப்பில் சேதமடைந்து, 1016 விவசாயிகள் பாதிக்கப்பட்டனர்.

இதைத் தொடர்ந்து தமிழக அரசு பாதிக்கப்பட்ட வேளாண் பயிரான நெல் மற்றும் தோட்டக்கலை பயிர்களுக்கு மாநில பேரிடர் நிவாரண நிதியில் இருந்து ஒரு ஹெக்டேருக்கு ரூ.13,500 மற்றும் கூடுதலாக மாநில நிதியில் இருந்து ஒரு ஹெக்டேருக்கு ரூ.6,500 என மொத்தம் ஒரு ஹெக்டேருக்கு ரூ.20 ஆயிரம் வீதம் வழங்க உத்தரவிட்டுள்ளது. பல்லாண்டு பயிர்களுக்கு மாநில பேரிடர் நிவாரண நிதியில் இருந்து ஒரு ஹெக்டேருக்கு ரூ.18 ஆயிரம் மற்றும் கூடுதலாக மாநில நிதியில் இருந்து ஒரு ஹெக்டேருக்கு ரூ.7 ஆயிரம் என மொத்தம் ஒரு ஹெக்டேருக்கு ரூ.25 ஆயிரம் வழங்க உத்தரவிட்டு உள்ளது.

இதையொட்டி, பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்கும் நிகழ்ச்சி கலெக்டர் அலுவலகத்தில் நடந்தது. கலெக்டர் ஸ்ரேயா சிங் நிகழ்ச்சிக்கு தலைமை வகித்தார். எம்.பி.க்கள் ராஜேஷ்குமார், சின்ராஜ், எம்எல்ஏக்கள் ராமலிங்கம், பொன்னுசாமி ஆகியோர் முன்னிலை வகித்தனர். சுற்றுலாத்துறை அமைச்சர் டாக்டர் மதிவேந்தன் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு மழையால் பயிர் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு நிவாரண தொகையை வழங்கி பேசினார்.

அப்போது அவர், வடகிழக்கு பருவமழையால் பாதிக்கப்பட்ட 916 விவசாயிகளுக்கு தற்போது முதல்கட்டமாக ரூ.85 லட்சத்து 57 ஆயிரம் வழங்கப்பட்டுள்ளது. மீதமுள்ள விவசாயிகளுக்கு விரைவில் ரூ.31 லட்சம் வழங்கப்பட உள்ளது என்றார். நிகழ்ச்சியில் வேளாண்மை இணை இயக்குனர் அசோகன், தோட்டக்கலைத்துறை துணை இயக்குனர் கணேசன், பிஆர்ஓ சீனிவாசன் மற்றும் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

Updated On: 23 Jan 2022 1:45 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    ‘இன்று போல் என்றும் வாழ்க’ - 25வது திருமண ஆண்டு வாழ்த்துகள்
  2. லைஃப்ஸ்டைல்
    அண்ணா அண்ணிக்கு அன்பு நிறைந்த திருமண நாள் வாழ்த்துகள்...!
  3. ஆன்மீகம்
    தமிழில் நட்சத்திர பிறந்த நாள் வாழ்த்துகளை சொல்வோம்!
  4. ஆன்மீகம்
    ஈகைப் பெருநாளின் சிறப்புகளும் வாழ்த்து மொழிகளும்
  5. அரசியல்
    பாஜகவுடன் சேர்வது தற்கொலைக்கு சமம் என்ற தினகரன் இப்ப ஏன் கூட்டணி...
  6. திருவள்ளூர்
    தண்ணீர் தேடி வந்த புள்ளிமான் நாய்கள் கடித்ததில் படுகாயம்
  7. வீடியோ
    அப்பா அம்மா ரெண்டுபேருமே படிக்கல |உணர்ச்சிபொங்க சொன்ன மாணவி!உருகி...
  8. லைஃப்ஸ்டைல்
    மனைவியின் பிறந்தநாள்: அன்பையும் மதிப்பையும் காட்ட சிறந்த சந்தர்ப்பம்
  9. தமிழ்நாடு
    நாட்டாமைக்கு பா.ஜ.க.,வில் புதிய பதவி?
  10. இந்தியா
    சென்னை ஐ.ஐ.டி.,யின் பறக்கும் டாக்ஸி!