நாட்டாமைக்கு பா.ஜ.க.,வில் புதிய பதவி?
வரும் லோக்சபா தேர்தலுக்கு கூட்டணி பேச்சுவார்த்தைக்கு பா.ஜ.க., தலைவர் அண்ணாமலையை சந்தித்த, நாட்டாமை சரத்குமார் அன்று இரவு இரண்டு மணிக்கு துாங்கிக் கொண்டிருந்த ராதிகாவை எழுப்பி ஆலோசனை நடத்தியிருக்கிறார். கணவரின் விருப்பத்திற்கு ராதிகா அப்போதே பச்சைக்கொடி காட்டி விட்டார். எனவே சரத்குமார் தனது கட்சியை பா.ஜ.க.,வுடன் இணைத்து விட்டார்.
அதற்கு கைமாறாக பா.ஜ.க., ராதிகாவிற்கு விருதுநகர் தொகுதியில் போட்டியிட சீட் வழங்கியது. அதற்காக பிரச்சாரத்திற்கு வந்த பா.ஜ.க., தலைவரிடம் தனக்கு கட்சியில் முக்கிய பதவி வழங்குமாறு சரத்குமார் கோரிக்கை வைத்தார். அவரும் டெல்லிக்கு வாங்க... பேசிக்கலாம் என கூறிச் சென்றார்.
அதன் பின்னர் அவர் வாயை திறக்கவில்லை. எல்லோரும் வடமாநில தேர்தல்களில் பிஸியாக இருக்கின்றனர். சரத்குமாரையும் வடமாநில தேர்தல் பிரச்சாரத்திற்கு பயன்படுத்திக் கொண்டனர். அப்போது பெரும் தலைவர்களுடன் நெருங்கி பழகும் வாய்ப்பு கிடைத்தாலும், அது பற்றி யாரும் பேசவில்லை. இதனால் நம்ம ஊரு நாட்டாமை சரத்குமாருக்கு கொடுத்த வாக்குறுதிகள் நிறைவேற்றுவார்களா என்ற சந்தேகம் எழுந்துள்ளது.
தேர்தல் முடிந்ததும், புதிய அரசு, புதிய அமைச்சரவை என பிஸியாகி விடுவார்கள். எனவே தனக்கு கொடுத்த வாக்குறுதிப்படி கட்சிப்பதவி கிடைக்குமா? கிடைக்காதா? என்ற குழப்பத்தில் உள்ளனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu