/* */

நீர் நிலைகளில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற ஆட்சியர் அறிவுரை

நீர் நிலைகளில் உள்ள தடைகள் மற்றும் ஆக்கிரமிப்புகளை உடனடியாக அகற்ற வேண்டும் என, ஆலோசனைக் கூட்டத்தில், நாமக்கல் மாவட்ட ஆட்சியர் உமா அதிகாரிகளை வலியுறுத்தினார்.

HIGHLIGHTS

நீர் நிலைகளில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற ஆட்சியர் அறிவுரை
X

நாமக்கல்லில் நடைபெற்ற, வடகிழக்கு பருவமழை குறித்த ஆலோசனைக் கூட்டத்தில் ஆட்சியர் உமா பேசினார்.

நீர் நிலைகளில் உள்ள தடைகள் மற்றும் ஆக்கிரமிப்புகளை உடனடியாக அகற்ற வேண்டும் என, ஆலோசனைக் கூட்டத்தில், நாமக்கல் மாவட்ட ஆட்சியர் உமா அதிகாரிகளை வலியுறுத்தினார்.

நாமக்கல் மாவட்டத்தில், வடகிழக்கு பருவமழை காலத்தில் மேற்கொள்ளவேண்டிய நடவடிக்கைகள் குறித்த ஆலோசனைக் கூட்டம், மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்றது. ஆட்சியர் உமா நிகழ்ச்சிக்கு தலைமை வகித்துப் பேசியதாவது:

நாமக்கல் மாவட்டத்தில் அனைத்து பகுதிகளிலும் உள்ள, மழைநீர் செல்லும் கால்வாய்களை, சம்மந்தப்பட்ட அதிகாரிகள் தூர் வாரி சுத்தம் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும். ஏரி, குளம், வரத்து வாய்க்கால்கள், நீர் நிலைகளில் உள்ள தடைகள் மற்றும் ஆக்கிரமிப்புகளை உடனடியாக அகற்ற வேண்டும்.

மழை நீர் கால்வாய்கள் மற்றும் நீர் வெளியேற்றும் அமைப்புகளை ஏற்படுத்தும் பணிகளை மேற்கொண்டு, பணிகளை விரைவாக முடிக்க வேண்டும். மேலும், மழைக்காலங்களில் பாதிக்கப்பட வாய்ப்புள்ள பகுதிகளில், அத்தியாவசியப் பொருட்களை பாதுகாப்பான இடங்களில் சேகரித்து வைக்க வேண்டும்.

தற்போது, காய்ச்சல் முகாம்கள் மாவட்டம் முழுவதும் பல்வேறு இடங்களில் நடத்தப்பட்டு வருகின்றன. இந்த முகாம்களில், நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் வகையில், சித்த மருத்துவ நிலவேம்பு கசாயம் உள்ளிட்ட பொருட்களை பொதுமக்களுக்கு வழங்க வேண்டும். அனைத்து துறை அலுவலர்களும் இணைந்து, வடகிழக்கு பருவமழை காலத்தில் பொதுமக்கள் பாதுகாப்பாக இருப்பதை உறுதி செய்யும் வகையில், தன்னார்வத்துடன் பணியாற்ற வேண்டும்.

வடகிழக்கு பருவமழையினால் ஏற்படும் பேரிடர் தொடர்பான தகவல்களை, பொதுமக்கள் உடனுக்குடன் கலெக்டர் அலுவலகத்தில் இயங்கி வரும் கட்டணமில்லா தொலைபேசி எண். 1077 மூலம் தெரிவிக்கலாம். பொதுமக்கள் டிஎன்ஸ்மார்ட் என்ற செல்போன் அப்ளிகேஷனை தங்களது மொபைல் போனில் டவுன் லோடு செய்து, மழைகுறித்த பேரிடர் மேலாண்மை எச்சரிக்கை மற்றும் விழிப்புணர்வு தகவல்களை தெரிந்து கொள்ள வேண்டும் என அவர் கூறினார்.

மாவட்ட வருவாய் அலுவலர் சுமன், கோட்டாட்சியர்கள் நாமக்கல் சரவணன், திருச்செங்கோடு சுகந்தி, ஆட்சியரின் நேற்முக உதவியாளர் மாதவன்உள்ளிட்ட பல்வேறு துறை அலுவலர்கள் நிகழ்ச்சியில் கலந்துகொண்டனர்.

Updated On: 28 Sep 2023 12:45 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    அடிக்கடி முகத்தில் சவரம் செய்தால் முடி அடர்த்தியாக வளருமா?
  2. உலகம்
    உலகில் அதிக எண்ணிக்கையில் இந்தியர்கள் வசிக்கும் நாடுகள் குறித்து...
  3. லைஃப்ஸ்டைல்
    ராகி தோசை மற்றும் தேங்காய் சட்னி செய்வது எப்படி?
  4. லைஃப்ஸ்டைல்
    கருவுற்ற தாய்மார்களுக்கு ஏற்படும் தைராய்டு பிரச்னைகளை தடுப்பது...
  5. மேட்டுப்பாளையம்
    மேட்டுப்பாளையத்தில் 1.15 கிலோ கஞ்சா பறிமுதல் ; இருவர் கைது
  6. தொழில்நுட்பம்
    ஏலியன் நாகரிக அறிகுறிகளைக் காட்டும் 7 நட்சத்திரங்களை கண்டறிந்த...
  7. லைஃப்ஸ்டைல்
    வண்ண வண்ணமாக அரிசி..! எது ஆரோக்யம்..?
  8. கோவை மாநகர்
    சட்டமன்றத் தேர்தல் கூட்டணியை காங்கிரஸ் தலைமை தான் முடிவு செய்யும் :...
  9. லைஃப்ஸ்டைல்
    வயிற்றுப்போக்கை கட்டுப்படுத்தும் சத்தான பானங்கள் பற்றித் தெரியுமா?
  10. லைஃப்ஸ்டைல்
    குளிர்சாதன பெட்டியில்(Fridge) வைக்கக்கூடாத பழங்கள்..!