/* */

வரும் 16ம் தேதி பாஜக மாநில தலைவர் அண்ணாமலை வருகை: 10,000 விவசாயிகள் சந்திப்பு

தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை வருகிற 16ம் தேதி நாமக்கல் வருகை தந்து 10 ஆயிரம் விவசாயிகளை சந்தித்து பேசுகிறார்.

HIGHLIGHTS

வரும் 16ம் தேதி பாஜக மாநில தலைவர் அண்ணாமலை வருகை: 10,000 விவசாயிகள் சந்திப்பு
X

நாமக்கல்லில் நடைபெற்ற பாஜக மாவட்ட செயற்குழு கூட்டத்தில், மாநில விவசாய அணி தலைவர் நாகராஜன் பேசினார். அருகில் மாவட்ட பாஜ தலைவர் சத்தியமூர்த்தி.

தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை வருகிற 16ம் தேதி நாமக்கல் வருகை தந்து 10 ஆயிரம் விவசாயிகளை சந்தித்து பேசுகிறார். மேலும் விவசாயிகள் நடத்தும் ஆர்ப்பாட்டத்திலும் அவர் கலந்துகொள்கிறார்.

இதையொட்டி நாமக்கல் மாவட்ட பாஜக கூட்டம் அதன் தலைவர் சத்தியமூர்த்தி தலைமையில் நடைபெற்றது. மாநில பாஜக விவசாய அணித் தலைவர் நாகராஜ் கூட்டத்தில் கலந்துகொண்டு பேசினார்.

அப்போது, தமிழகத்தில் உண்மையான எதிர்க்கட்சியாக பாஜக சிறப்பாக செயல்பட்டு வருகிறது. மேகதாது அணை பிரச்சனை, முல்லை பெரியாறு பிரச்சனை உள்ளிட்ட பல்வேறு பிரச்சனைகளை பாஜக சிறப்பாக கையாண்டுள்ளது.

தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை வருகிற 16 ம் தேதி நாமக்கல் வருகிறார். அன்று காலை 10 மணிக்கு, நாமக்கல், சேலம் ரோட்டில் உள்ள லட்சுமி திருமண மண்டபத்தில் நடைபெறும் கூட்டத்தில் அவர் கலந்துகொண்டு மாவட்டத்தைச் சேர்ந்த 10 ஆயிரம் விவசாயிகளை அவர் சந்தித்து பேசுகிறார்.

மேலும், லாரி உரிமையாளர்கள், கோழிப்பண்ணை உரிமையாளர்கள் சேகோ பேக்டரி உரிமையாளர்கள், விசைத்தறி உரிமையாளர்கள் போன்ற தொழிலதிபர்களுடன் கலந்துரையாடி அவர்களின் பிரச்சனைகளை கேட்டறிகிறார். பின்னர் நாமக்கல் கலெக்டர் அலுவலகம் அருகில், கூட்டுறவு வங்கிகளில் கடன் பெற்ற விவசாயிகள் அமைப்பு சார்பில் நடைபெறும் ஆர்ப்பாட்டத்தில் அவர் கலந்துகொள்கிறார்.

தமிழகத்தில் உள்ள டாஸ்மாக் கடைகள் மூலம் ரூ. 32 ஆயிரம் கோடிக்கு மது விற்பனை நடைபெறுகிறது. மாநிலத்தில் மது பானம் விற்பனை செய்யும்போது இயற்கை பானமான கள் விற்பனை செய்வதில் தவறு இல்லை. எனவே தமிழகத்தில் கள்ளுக்கு விதிக்கப்பட்ட தடையை மாநில அரசு நீக்க வேண்டும். தற்போது பல்வேறு பிரச்சனைகளால் பாதிக்கப்பட்டுள்ள விவசாயிகள், கள் விற்பனை செய்வதன் மூலம் விவசாயிகள் லாபம் பெற முடியும். இதற்காக கள் இயக்க தலைவர் நல்லசாமி நடத்தி வரும் இயக்கத்திற்கு பாஜக ஆதரவு அளிக்கும்.

திமுக அரசு தேர்தல் அறிக்கையில் பெண்களுக்கு மாதம் ரூ.1000, கேஸ் சிலிண்டருக்கு ரூ. 100 மானியம், பெட்ரோல், டீசல் விலை குறைப்பு என ஏராளமான வாக்குறுதிகளை அளித்து ஆட்சிக்கு வந்தது. ஆனால் எதையும் நிறைவேற்ற வில்லை. இதனால் தமிழக மக்கள் திமுக மீது கடுமையான அதிருப்தியில் உள்ளனர்.

தமிழக முதல்வர் பல்வேறு மாவட்டங்களுக்கு சுற்றுப்பயணம் செல்லும் போது, அண்டை மாவட்டங்களில் இருந்து ஆயிரக்கணக்கான பொது மக்களை அழைத்து வந்து, ரோடு ஓரங்களில் நிறுத்தி போக்குவரத்து நெரிசலை ஏற்படுத்துகின்றனர். இதனால் ரோடுகளில் ஆங்காங்கோ வாகனங்கள் தடுத்து நிறுத்தப்படுகிறது. விழா நடைபெறும் இடத்தில் இருந்து நான்கு புறமும் சுமார் 100 கி.மீ தூரத்திற்கு வாகனங்கள் போலீசாரால் தடுத்து நிறுத்தப்படுவதால் பயணிகளும், வாகன உரிமையாளர்களும் பாதிக்கப்படுகின்றனர்.

தமிழகத்தில் கடந்த மே மாதம், முதல்வர் ஸ்டாலின் முதல்வராக பதவியேற்கும்போது, தமிழகம் முழுவதும் கொரோனா பரவல் உச்சம் அடைத்து, ஆயிரக் கணக்கில் உயிரிழப்பு ஏற்பட்டது. அப்போது தமிழகம் கண்ணீரில் முழ்கியது. கடந்த இரண்டு மாதங்களாக தொடர் மழையால், சென்னை உட்பட பல மாவட்டங்கள் தண்ணீரில் மிதக்கின்றன.

இரண்டு சமயங்களிலும் தமிழக அரசின் நிவாரண பணிகள் முழுமையாக நடைபெற வில்லை. வரும் 16ம் தேதி குஜராத் மாநிலத்தில் ஆனந்த் நகரில் இருந்து, பிரதமர் மோடி வீடியோ கான்பரன்ஸ் மூலம் இந்தியா முழுவதும் உள்ள விவசாயிகளை சந்தித்து பேசுகிறார். மத்திய விவசாயத்துறை அமைச்சர் மற்றும் உள்துறை அமைச்சர்கள் நிகழ்ச்சியில் கலந்துகொள்கின்றனர். தமிழகத்தில் உள்ள 234 சட்டசபை தொகுதிகளிலும் இந்த நிகழ்ச்சி நேரடி ஒளிபரப்பு செய்யப்பட்டு விவசாயிகளுக்கு பிரதமரின் பேச்சு தமிழில் மொழிபெயர்த்து செல்லப்படும் என அவர் கூறினார்.

மாவட்ட துணைத்தலைவர் ரஞ்சித்குமார், மாநில செயற்குழு உறுப்பினர் வடிவேல், மாவட்ட விவசாய அணி தலைவர் அசோக்குமார், புதுச்சத்திரம் ஒன்றிய தலைவர் வடிவேல், மாவட்ட விவசாய அணி பொது செயலாளர்கள் வெங்கடாசலம், வெப்படை பாலு உள்ளிட்ட பலர் கூட்டத்தில் கலந்துகொண்டனர்.

Updated On: 11 Dec 2021 11:45 AM GMT

Related News

Latest News

  1. கோவை மாநகர்
    வேளாண் பல்கலைக் கழகத்தில் உலக தாவர நல தின நாள் கொண்டாட்டம்!
  2. தொண்டாமுத்தூர்
    ரூ. 2 லட்சம் மதிப்புள்ள உயர் ரக போதை பொருள் பறிமுதல்: 3 பெண்கள் உள்பட...
  3. இந்தியா
    சிஏஏ திட்டதின் கீழ் முதல் முறையாக 14 பேருக்கு குடியுரிமைச் சான்றிதழ்
  4. அரசியல்
    ஐஎன்டிஐஏ ஆட்சிக்கு வந்தால் வெளியில் இருந்து ஆதரவு: மம்தா அறிவிப்பு
  5. லைஃப்ஸ்டைல்
    அப்பா அம்மாவுக்கு கல்யாண நாள் வாழ்த்து- இப்படிக்கு பிள்ளைகள்..!
  6. லைஃப்ஸ்டைல்
    அம்மாவுக்கு பிறந்தநாள் வாழ்த்துகள்!
  7. லைஃப்ஸ்டைல்
    மல்லிகையே மல்லிகையே தூதாகப் போ - என் காதல் தேவதைக்கு வாழ்த்துகளை...
  8. குமாரபாளையம்
    ஜே.கே.கே. நடராஜா கல்லூரியில் நான் முதல்வன், கல்லூரி கனவு திட்ட முகாம்...
  9. லைஃப்ஸ்டைல்
    என்னுள் நிறைந்தவளுக்கு இதயபூர்வமான பிறந்த நாள் வாழ்த்துகள்!
  10. லைஃப்ஸ்டைல்
    என்னை ஆள்பவளுக்கு இன்று பிறந்தநாள்..!