/* */

பாஜக மாநில துணைத்தலைவரை விடுதலை செய்யக்கோரி பாஜக ஆர்ப்பாட்டம்

TN BJP -பாஜக மாநிலத் துணைத் தலைவர் கே.பி ராமலிங்கத்தை விடுதுலை செய்யக்கோரி நாமக்கல்லில் பாஜகவினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

HIGHLIGHTS

TN BJP | Protest News
X

பாஜக மாநில துணைத்தலைவர் ராமலிங்கத்தை, சிறையில் இருந்து விடுதலை செய்யக்கோரி, நாமக்கல் கலெக்டர் அலுவலகம் முன்பு பாஜகவினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

TN BJP -தருமபுரி மாவட்டம், பாப்பாரப்பட்டியில் கடந்த 11-ஆம் தேதி பாரதமாதா சிலை நிறுவப்பட்டுள்ள இடத்தின் பூட்டை உடைத்து, அத்துமீறி நுழைந்ததாக பாஜக மாநில துணைத் தலைவர் கே.பி.ராமலிங்கம் உள்பட 5 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

இதனைத்தொடர்ந்து, ஆக.14-ஆம் தேதி அன்று ராசிபுரத்தில் உள்ள அவரது வீட்டில் ராமலிங்கம் கைது செய்யப்பட்டார். அவருக்கு உடல்நலக் குறைவு ஏற்பட்டதால், அவர் சேலம் அரசு மருத்துவக் கல்லூரி ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு, பின்னர் சேலம் மத்திய சிறையில் அடைக்கப்பட்டார். வரும் 29-ஆம் தேதி வரை சிறையில் இருக்க கோர்ட் உத்தரவிட்டுள்ளது.

இந்த நிலையில் கே.பி.ராமலிங்கம் கைது செய்யப்பட்டதை கண்டித்தும், அவரை உடனடியாக விடுதலை செய்யக்கோரியும், நாமக்கல் மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன்பு பாஜக சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மாவட்ட பாஜ தலைவர் சத்தியமூர்த்தி தலைமை வகித்தார். நாமக்கல் நகரத் தலைவர் சரவணன், மாவட்ட மகளிர் அணித் தலைவர் சுகன்யா, செயலாளர் ஜெயந்தி, மாவட்ட பொது செயலாளர் வடிவேல், தேசிய பொதுக்குழு உறுப்பினர் மனோகரன், திட்ட பொறுப்பாளர் இளங்கோவன், கல்வியாளர் பிரணவ்குமார் உள்ளிட்ட பலர் ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டு, தமிழக அரசைக் கண்டித்து கோஷங்களை எழுப்பினர்.


அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2

Updated On: 19 Aug 2022 9:46 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    ஆரோக்கியத்தில் மந்திரி மாதிரி வாழணுமா? அடிக்கடி முந்திரி
  2. லைஃப்ஸ்டைல்
    தனக்கென வாழாமல் நமக்கென வாழும் தந்தைக்கு பிறந்தநாள் வாழ்த்து
  3. லைஃப்ஸ்டைல்
    ருசியான சில்லி பரோட்டா செய்வது எப்படி?
  4. லைஃப்ஸ்டைல்
    குழம்பு மிளகாய் பொடி வீட்டிலேயே தயார் செய்வது எப்படி?
  5. ஆன்மீகம்
    தியாகத் திருநாளாம் பக்ரீத் வாழ்த்து சொல்லலாம் வாங்க
  6. கோவை மாநகர்
    கோவை மாநகரில் ஒரு மணி நேரம் கனமழை ; மக்கள் மகிழ்ச்சி
  7. நாமக்கல்
    வெண்ணந்தூரில் தனி செயலாளரின் தந்தையின் படத்திற்கு முதல்வர் மாலை...
  8. லைஃப்ஸ்டைல்
    கிரடிட் கார்டு பயன்பாட்டில் இவ்வளவு நன்மைகளா?
  9. லைஃப்ஸ்டைல்
    தலைமுடி வளர்ச்சிக்கு இனிமேல் முட்டையை பயன்படுத்துங்க!
  10. திருவண்ணாமலை
    விசாரணைக்கு அழைத்து வரப்பட்ட வாலிபர் தற்கொலை முயற்சி!