/* */

நாமக்கல் மாவட்டத்தில் விதிகளை மீறிய 11 உரக்கடைகளுக்கு தடை

நாமக்கல் மாவட்டத்தில் விதிமுறைகளை மீறி செயல்பட்ட 11 உரக்கடைகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

HIGHLIGHTS

நாமக்கல் மாவட்டத்தில் விதிகளை மீறிய 11 உரக்கடைகளுக்கு தடை
X

பைல் படம்.

நாமக்கல் மாவட்டத்தில் விதிமுறைகளை மீறி செயல்பட்ட 11 உரக்கடைகளுக்கு தடை விதிக்கப்பட்டு, 50 டன் உரங்கள் தற்காலிகமாக முடக்கப்பட்டுள்ளது.

இது குறித்து நாமக்கல் மாவட்ட வேளாண்மை இணை இயக்குநர் அசோகன் கூறுகையில், நாமக்கல் மாவட்டத்தில், கலெக்டர் ஸ்ரேயா சிங் உத்தரவின்பேரில், உரங்கள் பதுக்கி வைத்தல், கூடுதல் விலைக்கு விற்பனை செய்தல், யூரியா விற்பனை செய்யும்போது கூடுதல் பொருட்களை வாங்க கட்டாயப்படுத்துதல், உரக்கடத்தல், கலப்பட உரம், வேளாண்மை அல்லாத பிற பயன்பாடுகளுக்கு உபயோகித்தல் ஆகிய சட்டத்திற்கு புறம்பான செயல்களை தடுத்திடும் வகையில், வேளாண்மைத்துறை, தோட்டக்கலை துறை, வேளாண் வணிகம் மற்றும் விற்பனை துறை, வருவாய்த்துறை மற்றும் காவல்துறை அலுவலர்களை உள்ளடக்கிய மாவட்ட அளவிலான சிறப்பு ஆய்வுக்குழு அமைக்கப்பட்டு உள்ளது.

இந்த குழுவினர் 15 ஊராட்சி ஒன்றியங்களில் உள்ள 142 தனியார் உர விற்பனை நிலையங்கள், 143 தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கங்களில் ஆய்வு மேற்கொண்டனர். இதில் உரக்கட்டுப்பாட்டு சட்டத்தின் விதிகளை மீறி செயல்பட்ட 11 உர விற்பனை நிலையங்களுக்கு விற்பனைக்கு தடை விதிக்கப்பட்டது. மேலும் ரூ.12 லட்சத்து 65 ஆயிரத்து 670 மதிப்பிலான 50.37 டன் உரங்கள் தற்காலிகமாக முடக்கம் செய்யப்பட்டு உள்ளது.

விவசாயிகளுக்கு மானிய விலை உரங்களுடன் மற்ற கூடுதல் பொருட்களை கட்டாயப்படுத்தி விற்பனை செய்தாலோ அல்லது அரசு நிர்ணயித்த விலையை விட கூடுதல் விலைக்கு உரம் விற்பனை செய்தாலோ, சம்மந்தப்பட்ட கடைகளின் உர விற்பனை லைசென்ஸ் நிரந்தரமாக ரத்து செய்யப்படும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

Updated On: 14 April 2022 3:00 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    மனைவியின் பிறந்தநாள்: அன்பையும் மதிப்பையும் காட்ட சிறந்த சந்தர்ப்பம்
  2. தமிழ்நாடு
    நாட்டாமைக்கு பா.ஜ.க.,வில் புதிய பதவி?
  3. வீடியோ
    🔴LIVE : பாரத பிரதமர் நரேந்திர மோடி வாரணாசியில் வேட்புமனு தாக்கல் ||...
  4. அரசியல்
    உதயநிதிக்கு புரோமோசன்! தமிழக அமைச்சரவை மாற்றம்?
  5. கோவை மாநகர்
    சவுக்கு சங்கரின் ஜாமீன் மனு மீதான விசாரணை ஒத்திவைப்பு
  6. தென்காசி
    தென்காசி மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்
  7. கோவை மாநகர்
    11 ம் வகுப்பு பொதுத்தேர்வில் முதலிடம் பிடித்த கோவை
  8. திருவள்ளூர்
    மின்சாரம் பாய்ந்து வடமாநில தொழிலாளி உயிரிழப்பு!
  9. லைஃப்ஸ்டைல்
    அம்மாவை இழந்தவர்களுக்கு அவர்களின் பிறந்தநாளில் செய்ய வேண்டியது என்ன?
  10. மாதவரம்
    புழல் மின் நிலையத்தில் திடீர் தீ விபத்து