11 ம் வகுப்பு பொதுத்தேர்வில் முதலிடம் பிடித்த கோவை

11 ம் வகுப்பு பொதுத்தேர்வில் முதலிடம் பிடித்த கோவை
X

பொதுத்தேர்வு முடிவுகள்

மொத்தம் 35 ஆயிரத்து 628 மாணவ, மாணவிகள் தேர்வு எழுதிய நிலையில், 34 ஆயிரத்து 210 மாணவ, மாணவிகள் தேர்ச்சி அடைந்துள்ளனர்.

11ஆம் வகுப்புப் பொதுத் தேர்வை 3 இலட்சத்து 84 ஆயிரத்து 351 மாணவர்கள் மற்றும் 4 இலட்சத்து 26 ஆயிரத்து 821 மாணவிகள் என மொத்தம் 8 இலட்சத்து 11 ஆயிரத்து 172 பேர் எழுதிய நிலையில், இன்று காலை பொதுத்தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டன.

இந்த தேர்வுகளில் 7 இலட்சத்து 39 ஆயிரத்து 539 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். 11ம் வகுப்பு பொதுத்தேர்வுகளில் 96.02 சதவீத தேர்ச்சி உடன் கோவை மாவட்டம் முதலிடத்தையும், 95.56 சதவீத தேர்ச்சி உடன் ஈரோடு மாவட்டம் இரண்டாவது இடத்தையும், 95.23 சதவீத தேர்ச்சி உடன் திருப்பூர் மாவட்டம் மூன்றாவது இடத்தையும் பிடித்துள்ளன.

கோவை மாவட்டத்தில் மொத்தம் 35 ஆயிரத்து 628 மாணவ, மாணவிகள் தேர்வு எழுதிய நிலையில், 34 ஆயிரத்து 210 மாணவ, மாணவிகள் தேர்ச்சி அடைந்துள்ளனர். மாணவர்களின் தேர்ச்சி விகிதம் 94.31 சதவீதமாகவும், மாணவிகளின் தேர்ச்சி விகிதம் 97.49 சதவீதமாகவும் உள்ளது. அரசுப் பள்ளிகளின் தேர்ச்சி விகிதத்தில் 92.86 சதவீதம் உடன் ஈரோடு மாவட்டம் முதல் இடத்திலும், 92.06 சதவீத தேர்ச்சி உடன் திருப்பூர் மாவட்டம் மூன்றாவது இடத்திலும், 91.64 சதவீத தேர்ச்சி உடன் கோவை மாவட்டம் நான்காவது இடத்திலும் உள்ளது.

கோவை மாவட்டத்தில் அரசுப் பள்ளிகளின் தேர்ச்சி விகிதம் 91.64 சதவீதமாக உள்ளது. 116 அரசுப் பள்ளிகளை சேர்ந்த 11 ஆயிரத்து 828 மாணவ, மாணவிகள் தேர்வு எழுதிய நிலையில், 10 ஆயிரத்து 839 மாணவ, மாணவிகள் தேர்ச்சி அடைந்துள்ளனர். மாணவர்களின் தேர்ச்சி விகிதம் 86.99 சதவீதமாகவும், மாணவிகளின் தேர்ச்சி விகிதம் 94.76 சதவீதமாகவும் உள்ளது.

Tags

Next Story
பவானி வர்த்தக மையத்தில் புதிய பாக்கு சீசன் தொடக்கம்