/* */

மோகனூர் ஸ்ரீ ராஜநாகலட்சுமி அம்மன் கோயிலில் வளைகாப்பு விழா

மோகனூர் ராஜநாகலட்சுமி அம்மன் கோயிலில், ஆடி வெள்ளியை முன்னிட்டு நடைபெற்ற வளைகாப்பு விழாவில் திரளான பெண்கள் கலந்துகொண்டனர்.

HIGHLIGHTS

மோகனூர் ஸ்ரீ ராஜநாகலட்சுமி அம்மன் கோயிலில் வளைகாப்பு விழா
X

மோகனூர் ஸ்ரீ ராஜநாகலட்சுமி அம்மனுக்கு நடைபெற்ற ஆடி வெள்ளியை முன்னிட்டு வளையல் அலங்காரம்.

நாமக்கல் மாவட்டம், மோகனூர் அருகில் உள்ள, ராசிபாளையம், மாருதி நகரில், பிரசித்தி பெற்ற ராஜநாகலட்சமி அம்மன், சங்கபால நாகராஜர் கோயில் உள்ளது. ராகு, கேது தோஷ பரிகார ஸ்தலமாக விளங்கும் இக்கோவிலில், ஆண்டு தோறும், ஆடி மூன்றாம் வெள்ளிக்கிழமை, அம்மனுக்கு வளைகாப்பு திருவிழா வெகுவிமரிசையாக கொண்டாடப்படுவது வழக்கம்.

அதன்படி, ஆடி மூன்றாம் வெள்ளிக்கிழமையான நேற்று, ராஜநாகலட்சுமி அம்மனுக்கு, 23ம் ஆண்டு வளைகாப்பு திருவிழா சிறப்பாக நடைபெற்றது. விழாவை முன்னிட்டு, காலை, 10 மணிக்கு பால், தயிர், மஞ்சள், குங்குமம் உள்ளிட்ட வாசனை திரவியங்களால் அம்மனுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை நடைபெற்றது.

காலை, 10:30 மணிக்கு சுமங்கலி பூஜையும், 11:00 மணிக்கு வளைகாப்பு நிகழ்ச்சியும் நடைபெற்றது. நிகழ்ச்சியில், சுற்று வட்டாரத்தை சேர்ந்த, 50க்கும் மேற்பட்ட கர்ப்பிணி பெண்களுக்கு வளைகாப்பு நடத்தப்பட்டது.

இதனைத்தொடர்ந்து, கர்ப்பிணி பெண்களுக்கு, வளையல், மஞ்சள், குங்குமம், தாலிக்கயிறு, பூ உள்ளிட்ட பிரசாதங்கள் வழங்கப்பட்டது. விழாவில் கலந்து கொண்ட பக்தர்கள் அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது. ஏற்பாடுகளை, கோயில் நிர்வாகிகள், உறுப்பினர்கள் மற்றும் ஊர் பொதுமக்கள் செய்திருந்தனர்.

Updated On: 5 Aug 2023 2:15 AM GMT

Related News

Latest News

  1. ஆரணி
    தோல்வி பயத்தில் பாஜகவினர்: செல்வப் பெருந்தகை பேட்டி
  2. வீடியோ
    குலதெய்வம் ஒரு குடும்ப உறுப்பினர் இயக்குநர் Perarasu உருக்கம்...
  3. தமிழ்நாடு
    தமிழகத்தில் தேனி, விருதுநகர், தென்காசி மாவட்டங்களுக்கு கனமழை...
  4. இந்தியா
    தொலை தொடர்புத் துறை பெயரில் போலி அழைப்புகள்: மத்திய அரசு எச்சரிக்கை
  5. லைஃப்ஸ்டைல்
    அன்னைக்கு இன்னைக்கு பிறந்தநாள்..! வாழ்த்துகிறோம்..!
  6. லைஃப்ஸ்டைல்
    வார்த்தைகளால் பூ தொடுத்து அக்காவுக்கு பிறந்தநாள் வாழ்த்து..!
  7. இந்தியா
    உலக சாதனை புத்தகத்தில் இடம் பிடித்த நான்கு மாத குழந்தை!
  8. திருச்சிராப்பள்ளி மாநகர்
    திருச்சி கோர்ட்டில் ஆஜர்: சவுக்கு சங்கர் லால்குடி கிளை சிறையில்...
  9. லைஃப்ஸ்டைல்
    வீட்டில் இருந்தபடியே பெண்கள் சம்பாதிப்பது எப்படி?
  10. ஆன்மீகம்
    நடப்பாண்டில் வைகாசி விசாகம் எப்போது வருகிறது தெரியுமா?