/* */

பருவமழை காலங்களில் மின்சாதனங்களை கவனமாக கையாள மின்வாரியம் வேண்டுகேள்

பருவமழை துவங்க உள்ளதால் பொதுமக்கள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என்று மின்சார வாரியம் வேண்டுகோள் விடுத்துள்ளது.

HIGHLIGHTS

பருவமழை காலங்களில் மின்சாதனங்களை கவனமாக கையாள மின்வாரியம் வேண்டுகேள்
X

பைல் படம்.

பருவமழை துவங்க உள்ளதால் பொதுமக்கள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என்று மின்சார வாரியம் வேண்டுகோள் விடுத்துள்ளது.

இது குறித்து நாமக்கல் மின் பகிர்மான வட்ட மேற்பார்வைப் பொறியாளர் (பொ) பரிமளா வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:

நாமக்கல் மாவட்டத்தில் கனமழை எச்சரிக்கை அறிவிக்கப்பட்டுள்ளதால், நாமக்கல் மின் பகிர்மான வட்டத்தில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, மின்தடை மற்றும் சேதாரங்களை உடனுக்குடர் சரிசெய்ய 18 சிறப்பு பணியாளர் குழுக்கள் அமைக்கப்பட்டு கண்காணிப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மேலும், மின்கம்பங்கள் மற்றும் தளவாட பொருட்கள் தேவையான அளவு இருப்பில் வைக்கப்பட்டுள்ளது.

பொதுமக்கள் மழையின் போது மின் உபகரணங்களை மிகவும் எச்சரிக்கையுடன் கையாள வேண்டும். மின்கம்பிகள் அறுந்து விழுந்துள்ளது தெரியவந்தால், மின் கம்பிகளின் அருகில் செல்லாமல் உடனடியாக அருகில் உள்ள மின்வாரிய அலுவலகத்திற்கு தகவல் தெரிவிக்க வேண்டும். மேலும், பொதுமக்கள் தங்களது பகுதிகளில் மின்தடை மற்றும் அவசர புகார்களுக்கு செல்போன் எண்: 94987 94987 மூலம் தொடர்பு கொண்டு தகவல் தெரிவிக்க வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.

Updated On: 16 Sep 2022 12:00 PM GMT

Related News

Latest News

  1. அரியலூர்
    ஜெயங்கொண்டம் அருகே கொள்ளிடம் ஆற்றில் திரியும் முதலையால் பீதி
  2. லைஃப்ஸ்டைல்
    மந்திரப் புன்னகை, அது மகனின் புன்னகை! இதயத்தை நிறைக்கும் இனிமை
  3. க்ரைம்
    திருவள்ளூர் மாவட்டம் மப்பேடு அருகே கோவில் காவலாளி அடித்துக் கொலை
  4. லைஃப்ஸ்டைல்
    ஒரு மாத திருமண நாள் வாழ்த்துகள்: அன்பை வெளிப்படுத்தும் இனிய சொற்கள்
  5. திருமங்கலம்
    மதுரை மாவட்டத்தில் உள்ள விநாயகர் கோயில்களில் சங்கடஹர சதுர்த்தி விழா
  6. லைஃப்ஸ்டைல்
    பசுமை நிறைந்த நினைவுகளே! பள்ளி நட்பின் இனிய நினைவுகள்
  7. தேனி
    பணி நிரவல் கலந்தாய்வினை கை விட ஆசிரியர் சங்கம் அரசுக்கு கோரிக்கை
  8. சூலூர்
    தசைநார் சிதைவால் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு உதவ கிரிக்கெட் போட்டி
  9. திருவள்ளூர்
    திருவள்ளூர் கடம்பத்தூர் அருகே மத போதகரை அரிவாளால் வெட்டிய மகன்
  10. சிங்காநல்லூர்
    தேர்தல் ஆணையம் வாக்குப்பெட்டிகளை முறையாக கண்காணிக்க வேண்டும் :...