ஐடிபிஐ வங்கியில் எக்ஸிகியூட்டிவ் காலிப்பணியிடங்கள்

ஐடிபிஐ வங்கியில் எக்ஸிகியூட்டிவ் காலிப்பணியிடங்கள்
X
IDBI Bank Executive Recruitment: ஐடிபிஐ வங்கியில் எக்ஸிகியூட்டிவ் காலிப்பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது.

IDBI Bank Executive Recruitment: இண்டஸ்ட்ரியல் டெவலப்மென்ட் பேங்க் ஆஃப் இந்தியா (ஐடிபிஐ) நாடு முழுவதும் உள்ள எக்ஸிகியூட்டிவ் காலியிடங்களை ஆட்சேர்ப்பு செய்வதற்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. பின்வரும் காலியிடங்களுக்கு ஆர்வமுள்ள மற்றும் அனைத்து தகுதிகளையும் முடித்த விண்ணப்பதாரர்கள் அறிவிப்பைப் படித்து ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்.

மொத்த காலியிடங்கள்: 1036

பதவி: எக்ஸிகியூட்டிவ்

ஊதியம்:

முதல் ஆண்டில் மாதம் ரூ.29,000/-,

இரண்டாவது ஆண்டில் மாதம் ரூ.31,000/-

மூன்றாம் ஆண்டில் மாதம் ரூ.34,000/-.

01-05-2023 தேதியின்படி வயது வரம்பு:

குறைந்தபட்சம்: 20 ஆண்டுகள்

அதிகபட்சம்: 25 ஆண்டுகள்

விண்ணப்பதாரர் 1998 மே 2ம் தேதிக்கு முன்னதாக பிறந்திருக்க வேண்டும். விதிகளின்படி வயது தளர்வு பொருந்தும்

கல்வி தகுதி:

விண்ணப்பதாரர்கள் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

விண்ணப்பக் கட்டணம்:

மற்ற அனைவருக்கும் (விண்ணப்பக் கட்டணம் + அறிவிப்புக் கட்டணங்கள்): ரூ.1000/-

SC/ ST/ PWD (அறிவிப்பு கட்டணங்கள்): ரூ. 200/-

பணம் செலுத்தும் முறை: டெபிட் கார்டுகளைப் பயன்படுத்துவதன் மூலம் (RuPay/ Visa/ MasterCard/ Maestro), கிரெடிட் கார்டுகள், இணைய வங்கிச் சேவை, IMPS, பண அட்டைகள்/ மொபைல் வாலட்)

முக்கிய நாட்கள்:

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான தொடக்கத் தேதி: 24-05-2023

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி மற்றும் கட்டணம் செலுத்த: 07-06-2023

விண்ணப்ப விவரங்களை திருத்துவதற்கான கடைசி தேதி: 07-06-2023

ஆன்லைன் தேர்வுக்கான தற்காலிகத் தேதி: 02-07-2023

மேலும் விபரங்களுக்கு: Click Here

Tags

Next Story
ராசிபுரம் அருகே இரு சமூகத்தினர் மோதல்- போலீசார் குவிப்பு..!