ஈரோடு: பர்கூர் வனப்பகுதியில் இரவில் 108 ஆம்புலன்சில் பிரசவம்

ஈரோடு: பர்கூர் வனப்பகுதியில் இரவில் 108 ஆம்புலன்சில் பிரசவம்
X

108 ஆம்புலன்சில் பிறந்த பெண் குழந்தையுடன் அவசர கால மருத்துவ நுட்புணர் செந்தில்நாதன், ஓட்டுநர் சக்திவேல்.

ஈரோடு மாவட்டம் அந்தியூர் அருகேயுள்ள பர்கூரில் அடர்ந்த வனப்பகுதியில் இரவில் 108 ஆம்புலன்ஸில் கர்ப்பிணிக்கு பிரசவம் நடந்து பெண் குழந்தை பிறந்தது.

அந்தியூர் அருகேயுள்ள பர்கூரில் அடர்ந்த வனப்பகுதியில் இரவில் 108 ஆம்புலன்ஸில் கர்ப்பிணிக்கு பிரசவம் நடந்து பெண் குழந்தை பிறந்தது.

ஈரோடு மாவட்டம் அந்தியூர் அடுத்துள்ள பர்கூர் மலைப்பகுதியில் ஓசூர் சின்னசெங்குளம் பகுதியைச் சேர்ந்த சரசு என்கிற சரசா (வயது 27) என்ற நிறைமாத கர்ப்பிணிக்கு நேற்றிரவு பிரசவ வலி ஏற்பட்டது. இதையடுத்து அவரது உறவினர்கள் உடனடியாக 108 ஆம்புலன்ஸை அழைத்தனர்.

சம்பவ இடத்துக்குச் சென்ற ஆம்புலன்ஸ் கர்ப்பிணியை ஏற்றிக்கொண்டு அடர்ந்த வனப்பகுதி வழியாக பர்கூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் நோக்கிச் சென்று கொண்டிருந்தது. ஆம்புலன்ஸ் மணியாச்சி பள்ளம் என்ற இடத்தில் சென்றபோது சரசாவுக்கு பிரசவ வலி அதிகரிக்கவே, நிலைமையைப் புரிந்துகொண்ட 108 ஆம்புலன்ஸ் ஓட்டுநர் பி.சக்திவேல் வாகனத்தை ஓரமாக நிறுத்தினார்.

பணியில் இருந்த அவசர கால மருத்துவ நுட்புணர் வி.செந்தில்நாதன் கர்ப்பிணிக்குப் பிரசவம் பார்த்தார். இதையடுத்து சரசாவுக்கு அழகான பெண் குழந்தை பிறந்தது. பின்னர், தாயும், சேயும் பர்கூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர்.

தக்க நேரத்தில் துரிதமாக செயல்பட்டு மலைக்கிராம பெண்ணுக்குப் பிரசவம் பார்த்த 108 ஆம்புலன்ஸ் அவசர கால மருத்துவ நுட்புணர் செந்தில்நாதன் மற்றும் ஆம்புலன்ஸ் ஓட்டுநர் சக்திவேலுக்கு பொதுமக்கள் பாராட்டுத் தெரிவித்தனர்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!