/* */

சாதனை பெண்மணி விருது பெற விண்ணப்பங்கள் வரவேற்பு

தேசிய பெண் குழந்தை தினமான ஜனவரி24 ம் தேதி, தமிழக அரசின் சார்பில் வழங்கப்பட உள்ள விருதிற்கு தகுதியானவர்கள் விண்ணப்பிக்கலாம்.

HIGHLIGHTS

சாதனை பெண்மணி விருது பெற விண்ணப்பங்கள் வரவேற்பு
X

பைல் படம்

தேசிய பெண் குழந்தை தினமான ஜனவரி24 ம் தேதி, தமிழக அரசின் சார்பில் வழங்கப்பட உள்ள விருதிற்கு தகுதியானவர்கள் விண்ணப்பிக்கலாம்.

இது குறித்து நாமக்கல் கலெக்டர் ஸ்ரேயாசிங் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், தமிழக அரசின் சார்பில் தேசிய பெண் குழந்தை தினமான ஜனவரி 24ம் தேதி, 2022-23 ஆம் ஆண்டிற்கான விருது வழங்கப்பட்ட உள்ளது. 13 வயதிற்கு மேல் 18 வயதிற்குட்பட்ட தமிழகத்தில் வசிக்கும் பெண் குழந்தைகள் இந்த விருதிற்கு விண்ணப்பிக்கலாம். பிற பெண் குழந்தைகளின் கல்விக்கு உதவுதல், பெண் குழந்தை தொழிலாளர் ஒழிப்பு,

பெண் குழந்தை திருமணத்தை தடுத்தல் மற்றும் தவிர்த்தல், வேறு ஏதாவது வகையில் சிறப்பான, தனித்துவமான சாதனை செய்திருத்தல், பெண்களுக்கு எதிரான சமூக அவலங்கள், மூடநம்பிக்கைகள் ஆகியவற்றிற்கு தீர்வு காண்பதற்கு ஓவியங்கள், கவிதைகள் மற்றும் கட்டுரைகள் மூலமாகவோ விழிப்புணர்வை ஏற்படுத்தியிருத்தல்,

ஆண்கள் மட்டுமே சாதிக்க முடியும் என்பது போன்ற செயல்களை பெண்களாலும் சாதிக்க முடியும் என்று சாதித்திருத்தல். போன்ற சாதனைகள் புரிந்த 13 வயதிற்கு மேல் 18 வயதிற்குட்பட்ட பெண் குழந்தைகள் இந்த விருதிற்கு விண்ணப்பிக்கலாம். தகுதியானவர்கள் வருகிற நவ.15க்கும் மாவட்ட சமூகநல அலுவலருக்கு வந்துசேருமாறுவிண்ணப்பிக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Updated On: 30 Sep 2022 2:10 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    ஒரு டம்ளர் தண்ணீர், ஒரு டீ ஸ்பூன் நெய் : உடம்பு குறைய இது
  2. நாமக்கல்
    நாமக்கல் தி மாடர்ன் அகாடமி பள்ளி 10ம் வகுப்பு தேர்வில் மாநில சாதனை
  3. சோழவந்தான்
    மேலக்கால் கிராமத்தில் அடிக்கடி ஏற்படும் மின்தடையால் மக்கள் அவதி..!
  4. நாமக்கல்
    இப்படியும் ஒரு ஆச்சரியம்; ராசிபுரத்தில், பொதுத்தேர்வில் ஒரே மதிப்பெண்...
  5. கோவை மாநகர்
    தனியார் பள்ளி வாகனங்களை ஆய்வு செய்த கோவை மாவட்ட ஆட்சியர்
  6. லைஃப்ஸ்டைல்
    வீட்டிலேயே வெயிட் லாஸ்... சூப்பர் ஈஸி டிப்ஸ்!
  7. லைஃப்ஸ்டைல்
    சிதறும் மனதைச் சீர் செய்யும் சில வழிகள்
  8. நாமக்கல்
    போலீசாரின் மிரட்டலுக்கு பயந்து செல்போன் டவரில் ஏறி இளைஞர் தற்கொலை...
  9. ஈரோடு
    பவானி அருகே விபத்தில் முன்னாள் ஊராட்சி தலைவர் உயிரிழப்பு
  10. திருமங்கலம்
    அலங்காநல்லூர் அருகே பேச்சியம்மன் ஆலயத்தில் மண்டல பூஜை..!