/* */

பொதுமக்களுக்கு ஆச்சர்ய தீபாவளி பரிசு! டீசல் ரூ.11.17, பெட்ரோல் ரூ.5.27 குறைவு

பொதுமக்களுக்கு தீபாவளி பரிசாக ஒரே நாளில் டீசல் விலை ஒரு லிட்டருக்கு ரூ.11.17ம், பெட்ரோல் ரூ. 5.27ம் குறைக்கப்பட்டுள்ளது.

HIGHLIGHTS

பொதுமக்களுக்கு ஆச்சர்ய தீபாவளி பரிசு!  டீசல் ரூ.11.17, பெட்ரோல் ரூ.5.27 குறைவு
X

பைல் படம்.

பெட்ரோல், டீசல் மிக அத்தியாவசியமான எரிபொருளாக இருந்தபோதும், சர்வதேச அளவில் கச்சா எண்ணை விலைக்கு சமமாக, மத்திய அரசுக்கு சொந்தமான எண்ணை நிறுவனங்கள் விலையை தாங்களே நிர்ணயம் செய்துகொள்ளலாம் என்று மத்திய அரசு அனுமதியளித்துள்ளது.

இதனைத்தொடர்ந்து கடந்த 2 ஆண்டுகளாக தினசரி பெட்ரோல், டீசல் விலையை எண்ணெய் நிறுவனங்கள் தினசரி உயர்த்தி வருகின்றன. கொரோனா ஊரடங்கு காலத்திலும், முக்கிய அரசு விடுமுறை நாட்களிலும் கூட எண்ணெய் நிறுவனங்கள் தவறாமல் பெட்ரோல், டீசல் விலையை உயர்த்தி வந்தனர்.

இதனால் லாரி, பஸ், டாக்சி உரிமையாளர்களும், விவசாயிகளும், சிறு வியாபாரிகளும், பொதுமக்களும் கடுமையாக பாதிக்கப்படுகின்றனர். கடந்த அக்டோபர் மாதத்தில் மட்டும் டீசல் ஒரு லிட்டருக்கு ரூ.7.80 உயர்த்தப்பட்டது. இந்த நிலையில் இன்று தீபாவளி நாளில் ஒரு லிட்டர் டீசலுக்கு ரூ.11.17ம், ஒரு லிட்டர் பெட்ரோலுக்கு ரூ.5.27ம் தடாலடியாக குறைக்கப்பட்டுள்ளது. இனி தொடர்ந்து பெட்ரோல், டீசல் விலை உயர்வு கட்டுப்படுத்தப்படுமா என்பது புதிராக உள்ளது.

நாமக்கல் பகுதியில் இன்றைய விலை விபரம்:

டீசல் விலை ஒரு லிட்டருக்கு ரூ.11.17 குறைந்து ஒரு லிட்டர் ரூ.92.08 ஆக அறிவிக்கப்பட்டுள்ளது. பெட்ரோல் விலை ஒரு லிட்டருக்கு ரூ. 5.27 குறைக்கப்பட்டு ஒரு லிட்டர் ரூ.102.04 ஆக அறிவிக்கப்பட்டுள்ளது. பிரிமியம் பெட்ரோல் விலை ஒரு லிட்டருக்கு ரூ.5.26 பைசா குறைத்து ஒரு லிட்டரின் விலை ரூ. 105.60 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

Updated On: 4 Nov 2021 3:23 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    தீபாவளி பண்டிகை சுவாரஸ்யங்களும் வாழ்த்துக்களும்
  2. ஆன்மீகம்
    முதல் வணக்கம் எங்கள் முதல்வனுக்கு! - விநாயகர் சதுர்த்தி வாழ்த்துகள்!
  3. பட்டுக்கோட்டை
    கோடை பெருமழையில் இருந்து பயிர் பாதுகாப்பு..! விவசாயிகளே கவனிங்க..!
  4. திருவள்ளூர்
    பெரியபாளையம் அருகே எண்ணெய் ஏற்றி வந்த லாரி தடுப்பு சுவரில் மோதி...
  5. திருவள்ளூர்
    திருவள்ளூர் மாவட்ட போலீஸ் எஸ்.பி. அலுவலகத்தில் தஞ்சம் அடைந்த காதல்...
  6. சோழவந்தான்
    சோழவந்தானில், தனியார் பள்ளியில் சலுகைகளுடன் மாணவர் சேர்க்கை..!
  7. சோழவந்தான்
    சோழவந்தான் அருகே, அதிமுக சார்பில் இலவச மருத்துவ முகாம்..!
  8. வீடியோ
    🥳Adhi-யின் 25வது படம் கொண்டாட்டத்தில் PT Sir குழுவினர்🥳 !#hiphop...
  9. ஆன்மீகம்
    தன்மானம் சீண்டப்படும்போது..துணிந்து நில்லுங்கள்..!
  10. வீடியோ
    Shivaji Krishnamurthy பற்றிய கேள்விக்கு மழுப்பிய VeeraLakshmi...