சோழவந்தான் அருகே, அதிமுக சார்பில் இலவச மருத்துவ முகாம்..!

சோழவந்தான் அருகே, அதிமுக சார்பில் இலவச மருத்துவ முகாம்..!

அதிமுக சார்பில் நடந்த மருத்துவ முகாமை முன்னாள் அமைச்சர் உதயகுமார் தொடங்கிவைத்தார்.

சோழவந்தான் அருகே, இலவச மருத்துவ முகாமினை முன்னாள் அமைச்சர் ஆர் பி உதயகுமார் தொடங்கி வைத்தார்.

சோழவந்தான்:

தமிழக முன்னாள் முதலமைச்சரும், தமிழ்நாடு சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமியின் பிறந்தநாள் விழாவை முன்னிட்டு, மதுரை புறநகர் மேற்கு மாவட்டம் வாடிப்பட்டி தெற்கு ஒன்றிய கழகம் இரும்பாடி பாலகிருஷ்ணாபுரத்தில் மருத்துவ முகாம் நடைபெற்றது.

இந்த நிகழ்ச்சிக்கு, வாடிப்பட்டி தெற்கு ஒன்றிய செயலாளர் கொரியர் கணேசன் தலைமை தாங்கினார். மருத்துவர் அணி மாவட்ட துணைச் செயலாளர் கருப்பட்டி கருப்பையா, வரவேற்புரை ஆற்றினார் . முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் எம். வி. கருப்பையா, மாணிக்கம், மகேந்திரன், வாடிப்பட்டி யூனியன் சேர்மன் ராஜேஷ் கண்ணா, மாவட்ட கவுன்சிலர் அகிலா ஜெயக்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். முன்னாள் அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் கலந்து கொண்டு மருத்துவ முகாமை தொடங்கி வைத்தார்.

இந்த மருத்துவ முகாமில் சுற்றுவட்டாரத்தில் இருந்து பலர் கலந்துகொண்டு பயன் பெற்றனர்.

இந்த நிகழ்ச்சியில், ஒன்றிய செயலாளர்கள் அரியூர் ராதாகிருஷ்ணன், வாடிப்பட்டி காளிதாஸ், அலங்காநல்லூர் ரவிச்சந்திரன், செல்லம்பட்டி எம். வி. பி. ராஜா, இலக்கிய அணி ரகு ,மருத்துவர் அணி விஜய் பாண்டி,மகளிர் அணி லட்சுமி, வனிதா, பேரூர் செயலாளர்கள் சோழவந்தான் முருகேசன், வாடிப்பட்டி அசோக் ,ஒன்றிய கவுன்சிலர்கள் கருப்பட்டி தங்கப்பாண்டி, நாச்சிகுளம் தங்கப்பாண்டி, தென்கரை இராமலிங்கம், பேரூராட்சி கவுன்சிலர்கள் உட்பட அதிமுக தொண்டர்கள் கலந்துகொண்டனர்.

Tags

Next Story