தன்மானம் சீண்டப்படும்போது..துணிந்து நில்லுங்கள்..!
விழிப்பதற்கே உறக்கம். வெல்வதற்கே தோல்வி. எழுவதற்கே வீழ்ச்சி. உன்னை அன்பு செய்வதற்கே என் இதயம். கோடி உறவுகள் இருந்தாலும், யாவரும் இங்கு தனி மனிதனே, யாரும் யாருக்காகவும் இல்லை, என்பதே மகத்தான உண்மை. வாழ்க்கை நமக்கு பல பாடங்களை கற்று தருகிறது. அதில் ஒன்று தான் யார் யாரிடம் எப்படி பழகனும் எந்தளவுக்கு பழகனும் என்பது....
பலம் வாழ்ந்த சிங்கங்கள் கூட வேடனின் பொறியியல் மாட்டிக் கொள்ளும்... ஆனால் நரிகள் எப்போதும் மாட்டுவதில்லை. சாதூர்யமாக வாழுங்கள். இங்கு பொறிகளே அதிகம் உள்ளன. மதிக்கும் இடத்தில், பணிந்து நில் மதிக்காத இடத்தில் துணிந்து நில். ஏமாற்றியவர்கள் வாழ்ந்ததில்லை,, ஏமாந்தவன் வீழ்ந்ததில்லை,,!! கடந்த காலம் ஒரு அனுபவம்,,, எதிர்காலம் ஒரு ரகசியம்,,!! வாழ்க்கையை வாழும் போதே ரசித்து வாழுங்கள்,,!!
புத்திசாலியிடம் வாதிடலாம்..! முட்டாளிடம் புரிய வைக்கலாம்..!! தான் மட்டும் தான் புத்திசாலி என்று நினைப்பவரிடம் இருந்து விலகித் தான் இருக்கணும்..!!! எந்த தடைகளையும் தகர்த்தெறிய, தெளிவான மனநிலை இருந்தாலே போதும்..!!!
உலகத்தில் காணும் பெண்கள், யாவரும் பேரழகி தான், யாருடைய கண்களுக்கு என்பது மட்டும் "விதியின் விளையாட்டு"..! ஒவ்வொரு அவமானமும் பலரை சிதைக்கின்றன. சிலரை செதுக்குகின்றன...!!
நுனிக்கொம்பர் ஏறினார் அஃதிறந் தூக்கின்
உயிர்க்கிறுதி ஆகி விடும்.
தன்னைப்பற்றி அதிகமாகக் கணக்குப் போட்டுக் கொண்டு, எல்லை மீறிப் போகிற ஒருவர், நுனிக் கிளையில் ஏறியவர் அதற்கு மேலும் ஏறிட முயற்சி செய்தால் என்ன ஆவாரோ அந்தக் கதிக்கு ஆளாவார்.
அழுகை உணரப்படாமல் உதாசீனப்படுத்துகையில் எல்லாம் இன்னும் இன்னும் என்று தன்னை தானே மெளனியாக்கி வெற்று புன்னகையும் ம்ம் என்றே கடத்த ஆரம்பித்து விடுகிறது. காலங்களை அப்பெண்மையும்...!!!
மிகச் சிறியதொரு பிடிமானம் மிகச் சிறியதொரு நம்பிக்கை போதுமானதாக இருக்கின்றது. வாழ்க்கையை சுவாரஸ்யமாகவும் மகிழ்ச்சியாகவும் வாழ்வதற்கு காற்றின் திசையில் பறக்கும் காகிதமாய் போனேன். என்னைக் கட்டுப்படுத்த, என்னைக்கட்டிகொண்டு இங்கு எந்த நூலும் இல்லை. ஆனாலும் என்னை நானே சிறிது சிந்திக்கிறேன்..
வக்கிரத்தின் உச்சங்களாய் நான், என்னை நானே வெறுக்கும் அளவுக்கு.. நானே என்னை வெறுக்கும்போது, மற்றவர்களை சொல்லவா வேண்டும்? வித்தியாசமாக இருக்க ஒருபோதும் வெட்கப்படாதீர்கள்...! மாறுபட்ட எண்ணங்கள் தான் வாழ்க்கையின் முதல் மாற்றத்தின் ஆரம்பம்.
நீ நினைப்பது போல் உன்னாலே இருக்க முடியாத போது நீ நினைப்பது போல் பிறர் இருக்க வேண்டும் என்று நினைப்பது எந்த வகையிலும் சாத்தியமில்லை என்பதை உணர வேண்டும்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu