/* */

நாமக்கல் மாவட்டத்தில் நிரம்பிய 28 ஏரிகள்: தண்ணீர் இல்லாத 39 ஏரிகள்

நாமக்கல் மாவட்டத்தில் பெய்த தொடர்மழையால் 28 ஏரிகளில் தண்ணீர் நிரம்பியுள்ளது. 39 ஏரிகளுக்கு தண்ணீர் வரவில்லை.

HIGHLIGHTS

நாமக்கல் மாவட்டத்தில் நிரம்பிய 28 ஏரிகள்: தண்ணீர் இல்லாத 39 ஏரிகள்
X

பைல் படம்.

நாமக்கல் மாவட்டத்தின் ஆண்டு சராசரி மழையளவு 716.54 மி.மீ ஆகும். இந்த ஆண்டில் இதுவரை சுமார் 850 மி.மீ மழை பெய்துள்ளது. இது சராசரியை விட அதிகம். கடந்த 3 வாரங்களாக அடிக்கடி பெய்து வரும் தொடர் மழையால், மாவட்டத்தில் உள்ள ஏரி, குளங்கள் மற்றும் குட்டைகள் வேகமாக நிரம்பி வருகின்றன.

மாவட்டத்தில் 100 ஏக்கர் பரப்பளவுக்கு மேல் 79 பெரிய ஏரிகள் உள்ளன. இவை பொதுப்பணித்துறையின் கட்டுப்பாட்டில் உள்ளது. இவற்றில் கடந்த வாரம் வரை மின்னக்கல், சேமூர், அக்கரைப்பட்டி உள்ளிட்ட 22 ஏரிகள் நிரம்பி இருந்தன.

இந்த நிலையில் மழை நீடித்து வருவதால், கஸ்தூரிப்பட்டி, பழையபாளயைம், சிவநாயக்கன்பட்டி, செல்லிபாளையம், பாப்பான்குளம், வேட்டாம்பாடி என மேலும் 6 ஏரிகள் நிரம்பி உள்ளன. இதுவரை மொத்தம் 28 ஏரிகளில் முழுமையாக நீர் நிரம்பி உள்ளதால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

மாவட்டத்தில், அக்ரஹாரம், திப்ரமாதேவி, புதுக்குளம் ஆகிய 3 ஏரிகள் 75 சதவீதமும், பவித்திரம், தூசூர், பொன்னார் குளம் ஆகிய 3 ஏரிகள் 50 சதவீதமும், 6 ஏரிகள் 25 சதவீதத்திற்கு கீழும் தண்ணீர் உள்ளன. இதுதவிர 39 ஏரிகள் தண்ணீரின்றி வறண்டு காணப்படுகின்றன.

அவற்றில் சிறு, சிறு குழிகளில் மட்டுமே மழைநீர் தேங்கி உள்ளது. மாவட்டத்தில் பல்வேறு இடங்களில், நீர்வரத்து கால்வாய்களில் அதிக அளவில் ஆக்கிரமிப்பு உள்ளதால், பல ஏரி, குளங்களுக்கு தண்ணீர் வரத்து குறைந்துள்ளது. எனவே நீர்வரத்து பகுதிகளில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் என விவசாயிகள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

Updated On: 20 Nov 2021 2:45 AM GMT

Related News

Latest News

  1. கல்வி
    பரீட்சையில் Fail ஆகிட்டா, தோத்துட்டோம்ன்னு அர்த்தமா...?
  2. ஆன்மீகம்
    Horoscope Today அனைத்து ராசிக்கான இன்றைய ராசிபலன்
  3. ஆன்மீகம்
    காக்கும் கடவுள் கணேசனை நினை... கவலைகள் அகல அவன் அருள் துணை!
  4. கோவை மாநகர்
    கோவையில் பத்தாம் வகுப்பில் 94.01 சதவீதம் பேர் தேர்ச்சி
  5. கல்வி
    தமிழ்நாடு 10ம் வகுப்பு தேர்வு முடிவுகள் : 91.55% பேர் தேர்ச்சி!...
  6. பாளையங்கோட்டை
    நெல்லை மாவட்டத்தில் இன்றைய காய்கறி விலை
  7. தென்காசி
    தென்காசி மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  8. ஆரணி
    ஆரணியில் பள்ளி வாகனங்கள் ஆய்வு
  9. திருவண்ணாமலை
    ஆட்டோ ஓட்டுனர் நலச்சங்கம் சார்பில் தண்ணீர் பந்தல் திறப்பு
  10. திருவண்ணாமலை
    லாரியின் முன் விழுந்த சுகாதார ஆய்வாளர் உயிரிழப்பு