கோவையில் பத்தாம் வகுப்பில் 94.01 சதவீதம் பேர் தேர்ச்சி

கோவையில் பத்தாம் வகுப்பில் 94.01 சதவீதம் பேர் தேர்ச்சி
X

Coimbatore News- பொதுத்தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளது.

Coimbatore News- பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில் 94.01 சதவீத தேர்ச்சியுடன் கோவை மாவட்டம் 12 வது இடத்தை பிடித்துள்ளது.

பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் இன்று காலை வெளியிடப்பட்டன. 12,616 பள்ளிகளைச் சேர்ந்த 4 லட்சத்து 57 ஆயிரத்து 525 மாணவர்கள், 4 லட்சத்து 52 ஆயிரத்து 498 மாணவிகள் மற்றும் மூன்றாம் பாலினத்தவர் ஒருவர் என, மொத்தம் 9 லட்சத்து 10 ஆயிரத்து 24 பேர் தேர்வு எழுதி இருந்தனர். இன்று வெளியான பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வுகளில் 97.31 சதவீத தேர்ச்சி உடன் அரியலூர் மாவட்டம் முதலிடத்தையும், 82.07 சதவீத தேர்ச்சி உடன் வேலூர் மாவட்டம் கடைசி இடத்தையும் பிடித்துள்ளது. இதில் 94.01 சதவீத தேர்ச்சி உடன் கோவை மாவட்டம் 12 வது இடத்தை பிடித்துள்ளது. மொத்தம் 39 ஆயிரத்து740 மாணவ, மாணவிகள் தேர்வு எழுதிய நிலையில், 37 ஆயிரத்து 360 மாணவ, மாணவிகள் தேர்ச்சி அடைந்துள்ளனர்.

மாணவர்களின் தேர்ச்சி விகிதம் 91.46 சதவீதமாகவும், மாணவிகளின் தேர்ச்சி விகிதம் 96.50 சதவீதமாகவும் உள்ளது. வழக்கம் போல மாணவர்களை காட்டிலும், மாணவிகளின் தேர்ச்சி விகிதம் அதிகமாக உள்ளது. அரசுப் பள்ளிகளின் தேர்ச்சி விகிதத்தில் கோவை மாவட்டம் 20 வது இடத்தில் உள்ளது. அரசுப் பள்ளிகளின் தேர்ச்சி விகிதம் 89.16 சதவீதமாக உள்ளது. 198 அரசுப் பள்ளிகளை சேர்ந்த 15 ஆயிரத்து 153 மாணவ, மாணவிகள் தேர்வு எழுதிய நிலையில், 13 ஆயிரத்து 510 மாணவ, மாணவிகள் தேர்ச்சி அடைந்துள்ளனர். மாணவர்களின் தேர்ச்சி விகிதம் 84.19 சதவீதமாகவும், மாணவிகளின் தேர்ச்சி விகிதம் 93.58 சதவீதமாகவும் உள்ளது. வழக்கம் போல இதிலும் மாணவர்களை காட்டிலும், மாணவிகளின் தேர்ச்சி விகிதம் அதிகமாக உள்ளது.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!