தமிழ்நாடு 10ம் வகுப்பு தேர்வு முடிவுகள் : 91.55% பேர் தேர்ச்சி! அரியலூர் மாவட்டம் முதலிடம்
10th Exam Result
தமிழகத்தில் மாநில பாடத்திட்டத்தின் கீழ் பயின்ற 10-ம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வுகள், கடந்த மார்ச் மாதம் 26ம் தேதி தொடங்கி ஏப்ரல் 8 ஆம் தேதி வரை நடைபெற்றது. இதில் 12,616 பள்ளிகளைச் சேர்ந்த 4 லட்சத்து 57 ஆயிரத்து 525 மாணவர்கள், 4 லட்சத்து 52 ஆயிரத்து 498 மாணவிகள் மற்றும் மூன்றாம் பாலினத்தவர் ஒருவர் என, மொத்தம் 9 லட்சத்து 10 ஆயிரத்து 24 பேர் தேர்வு எழுதினர். அதோடு, 28 ஆயிரத்து 827 தனித்தேர்வர்கள், 235 சிறைவாசிகள் பொதுத்தேர்வை எழுதினர். இந்த தேர்வானது, 4 ஆயிரத்து 107 மையங்களில் நடைபெற்றது. இதையடுத்து விடைத்தாள்களை திருத்தும் பணிகள் அனைத்தும் நிறைவடைந்த நிலையில், இன்று காலை 9.30 மணியளவில் சென்னை டி.பி.ஐ வளாகத்தில் இருக்கும் அரசு தேர்வுகள் மையத்தில் 10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியாகி உள்ளது.
தேர்ச்சி விகிதத்தில் அரியலூர் மாவட்டம் மாநில அளவில் முதலிடம் பிடித்துள்ளது. தொடர்ந்து சிவகங்கை (97.02%) மற்றும் ராமநாதபுரம் (96.36%) ஆகிய மாவட்டங்கள் அடுத்தடுத்த இடங்களை பிடித்துள்ளன. வேலூர் மாவட்டம் 82.07% தேர்ச்சியுடன் மாவட்ட அளவில் கடைசி இடத்தை பிடித்துள்ளது.
தேர்வு எழுதிய மாணவர்கள்: 9.10 லட்சம்
தேர்ச்சி பெற்ற மாணவர்கள்: 83.74 லட்சம் (91.55%)
கடந்த ஆண்டு தேர்ச்சி: 83.24 லட்சம் (91.39%)
பாலின வாரியான தேர்ச்சி:
மாணவர்கள்: 88.71%
மாணவிகள்: 94.53%
பாட வாரியான தேர்ச்சி:
தமிழ்: 96.85%
ஆங்கிலம்: 99.15%
கணிதம்: 96.78%
அறிவியல்: 96.72%
சமூக அறிவியல்: 95.74%
குறிப்பிடத்தக்க புள்ளிவிவரங்கள்:
கடந்த ஆண்டை விட 0.16% அதிக தேர்ச்சி.
4105 பள்ளிகள் 100% தேர்ச்சி பெற்றன.
12 ஆயிரத்து 625 பள்ளிகளைச் சேர்ந்த மாணவர்கள் தேர்வு எழுதினர். அதில், 4,105 பள்ளிகள் 100 சதவிகிதம் தேர்ச்சி பெற்றுள்ளன. இதில் ஆயிரத்து 364 அரசுப்பளிகளும் அடங்கும்.
கணிதம், அறிவியல் மற்றும் சமூக அறிவியலில் சிறப்பான தேர்ச்சி.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu