ஆரணியில் பள்ளி வாகனங்கள் ஆய்வு
ஆரணியில் தனியார் பள்ளி பேருந்துகளை ஆய்வு செய்த அதிகாரிகள்.
திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்தில் தனியாா் பள்ளிகளின் பேருந்து மற்றும் இதர வாகனங்களுக்கு கூட்டாய்வு நடைபெற்றது.
ஆரணி வட்டார போக்குவரத்து அலுவலகத்திற்குட்பட்ட ஆரணி, போளூர், சேத்துப்பட்டு ஆகிய பகுதிகளில் உள்ள தனியார் பள்ளி மற்றும் கல்லூரிகளில் படிக்கும் மாணவ, மாணவிகளை ஏற்றிச்செலும் பஸ்கள், வேன் உள்ளிட்ட வாகனங்களின் பாதுகாப்பு உறுதித்தன்மை குறித்து ஆய்வு செய்யும் பணிகள் வட்டார போக்குவரத்து அலுவலக வளாகத்தில் நடைபெற்றது.
ஆரணி வட்டங்களைச் சோ்ந்த 50 தனியாா் பள்ளிகளில் 339 பேருந்துகள் உள்ளன. இதில் வியாழக்கிழமை 120 பேருந்துகள் ஆய்வு செய்யப்பட்டது . ஆர்டிஓ பாலசுப்பிரமணியன் தனியார் பள்ளி மற்றும் கல்லூரிகள் பஸ், வேன்களை ஆய்வு செய்தார்.
ஆய்வில் பேருந்துகளில் மஞ்சள் கலர், ஒளிரும் ஸ்டிக்கர், மாணவர்களுக்கு வசதியான படிகள், வேகக்கட்டுப்பாட்டு கருவி, அவசர வழி, கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளதா?, முதலுதவி பெட்டி மற்றும் தீயணைப்பு உபகரணங்கள் உள்ளனவா என விதிமுறைகள் குறித்து அனைத்து பஸ்களையும் ஒவ்வொன்றாக ஆய்வு செய்து, குறைபாடுகளை சுட்டிகாட்டி, குறைகளை சரிசெய்ய உத்தரவிட்டார். மேலும், பள்ளி வாகனங்களை ஆய்வு செய்தபோது, பஸ்களில் அனுபவமுள்ள டிரைவர்களை வரவழைத்து. அவர்களின் அனுபவம், வயது, ஓட்டுனர் உரிமம் உள்ளதா என கேட்டறிந்தார்.
அப்போது, 5 பஸ்களில் பாதுகாப்பு உறுதித்தன்மை மற்றும் குறைபாடுகள் அதிகமுள்ளதை சுட்டிகாட்டி, மீண்டும் பஸ்சில் குறைகளை முழுமையாக சரிசெய்து பின்னரே, ஆய்விற்கு கொண்டுவருமாறு ஆர்டிஓ உத்தரவிட்டார்.
. தொடர்ந்து, பள்ளி பஸ்கள் மற்றும் வேன்களில் வேக கட்டுப்பாட்டு கருவி, கேமராக்கள் கட்டாயம் பொருத்த வேண்டும் என அறிவுறுத்தினார். தொடர்ந்து, தனியார் பள்ளி வாகன ஓட்டுனர்களுக்கு தீயணைப்பு நிலை அலுவலர் கோபாலகிருஷ்ணன் தலைமையில் வீரர்கள் பஸ், வேன்களில் தீ விபத்துகள் ஏற்பட்டால் தீயை அனைப்பது, தீ விபத்துகள் ஏற்படாமல் தடுப்பது குறித்து செயல்விளக்கம் செய்து காண்பித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.
இதில், வட்டார போக்குவரத்து அலுவலர் சரவணன், டிஎஸ்பி ரவிச்சந்திரன், தீயணைப்பு துறை நிலை அலுவலர் கோபாலகிஷ்ணன், மாவட்ட கல்வி அலுவலர் எல்லப்பன், மோட்டார் வாகன ஆய்வாளர் முருகேசன். போக்குவரத்து, வருவாய்துறை, காவல்துறை அதிகாரிகள் மற்றும் தனியார் பள்ளி ஓட்டுனர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu